Thursday, July 19, 2018

பல்கலை மானியக்குழு விதிகளில் திருத்தம் உயர்நீதிமன்றம் தடை

Added : ஜூலை 18, 2018 23:38

மதுரை, தொலைநிலைக் கல்வி தொடர்பான பல்கலை மானியக்குழு விதிகளில் திருத்தம் செய்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் தாக்கல் செய்த மனு: திறந்தவெளி பல்கலை மற்றும் தொலைநிலைக் கல்வி படிப்புகள் தொடர்பாக பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிகளில் 2018ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 'நாக்' கவுன்சில் அங்கீகாரத்திற்கு 4 புள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக 3.26 கிரேடுபுள்ளிகள் (பாயின்ட்) பெற்றிருக்கும் பட்சத்தில், புதிய பாடப் பிரிவுகளை துவங்க முடியும். இந்த நடைமுறை சாத்தியமற்றது.இந்தியாவில் பெரும்பான்மையான பல்கலைகளால் பின்பற்ற இயலாது. கல்லுாரிகளில் போதிய ஆசிரியர்கள் உள்ளனரா? உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால்,அதுபோன்ற நடைமுறையை பின்பற்றதொலைநிலைக் கல்விக்கு விதிகளில் திருத்தம் செய்தது ஏற்புடையதல்ல. யு.ஜி.சி.,விதி திருத்தத்தில் சில பல்கலைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பல்கலைகளை பாகுபடுத்துவதாகஉள்ளது. யு.ஜி.சி., விதிகளில் திருத்தம்செய்ததற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, அனிதா சுமந்த் அமர்வு இடைக்கால தடை விதித்து, யு.ஜி.சி, செயலருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
'ஐ போன்' தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல் உஷாராக இருக்க 'சைபர் கிரைம்' போலீஸ் அறிவுரை

Added : ஜூலை 18, 2018 22:57

தேனி, ' ஐ போன்' பயன்படுத்துவோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,' என, சைபர் கிரைம் போலீசார், மாவட்ட இணைய வழி குற்றங்களை கண்காணிக்கும் பிரிவு போலீசாரை உஷார் படுத்தி உள்ளனர்.இந்திய உளவுத் துறைக்கு கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த (டேட்டா கேட்சர்) தகவல்களை திருடும் நிபுணர்கள், இந்தியாவில் ' ஐ- போன் ' பயன்பாட்டாளர்களான தொழிலதிபர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய நபர்களின் தகவல்களை விசேஷ மென்பொருள் மூலம் திருடும் கும்பல் குறித்து தகவல் கிடைத்து உள்ளது. இதனால் மாநில சைபர் கிரைம் போலீசார், மாவட்ட சைபர் கிரைம் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகளை உஷார் படுத்தி உள்ளனர்.இந்த ஐ-போன் 'ஹை ஜாக் கேக்கர்ஸ்' தொழில்நுட்பம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'முதற்கட்டமாக முக்கிய நபர்கள் பயன்படுத்தும் 13 ஐ-போன்களின் தகவல்கள் வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஐ-போன் பாதுகாப்பாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தவறான, தேவையற்ற எஸ்.எம்.எஸ்., இணைப்புக்கள், தேடுதல் குறித்த இணைய வழி குறிப்புக்களை பதிவிறக்கம் செய்வதையோ, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்புகளையோ பயன்படுத்த வேண்டாம்.மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து முன் எச்சரிக்கையாக புகார் அளிக்கலாம்,' என்றனர்.
ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரத்து

Added : ஜூலை 19, 2018 00:03

சென்னை, ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து, மதுரை, சேலம், காட்பாடி வழியாக, குஜராத் மாநிலம், ஓகாவுக்கு, இரவு, 10:15க்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ், வரும், 20ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.ஓகாவில் இருந்து, ராமேஸ்வரத்துக்கு நேற்று இயக்கப்பட்ட ரயில், பலத்த மழையால் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால், இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு

Added : ஜூலை 19, 2018 02:35 |



புதுடில்லி : உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்கைடிராக்ஸ் எனும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் 2.36 கோடி பேர் பங்கேற்று ஓட்டளித்தனர். 335 விமான நிறுவனங்கள் பங்கேற்ற இப்போட்டியில், இந்த ஆண்டுக்கான சிறந்த நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 4வது முறையாக இவ்விருதினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2வது மற்றும் 3வது இடம் முறையே கத்தார் ஏர்லைன்ஸ் மற்றும் ஏ.என்.ஏ., ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனமும் வென்றுள்ளது. இந்தியாவின் இண்டிகோ 55வது இடமும், ஜெட் ஏர்வேஸ் 80வது இடத்தையும் பிடித்துள்ளன.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க  திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சம்மதம்
dinamalar 19.07.2018

புதுடில்லி: 'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க, தேவஸ்வம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது' என, கேரள அறநிலையத் துறை அமைச்சர், சுரேந்திரன் கூறியுள்ளார்.




கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், பத்தனம் திட்டாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், 10 வயது முதல், 50 வயதுக்குட்பட்ட பெண்கள், அனுமதிக்கப்படுவதில்லை. பல நுாறு ஆண்டுகளாக, இந்த நடைமுறையை, கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில், 'சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' எனக் கோரி, இந்திய இளைஞர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மகளிர் அமைப்பினர்,உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இது தொடர்பாக, கேரள அரசு சார்பில், 2016, நவ., 7ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க, அரசு தயாராக உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

'சபரிமலைக்கு செல்ல, பெண்களிடம் பாகுபாடு காட்டப்படுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள, அடிப்படை உரிமைகளை மீறுவ தாகும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் வாதாடப்பட்டது.

இது தொடர்பாக, மனுதாரர்கள் எழுப்பிய ஐந்து கேள்விகளை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, 2017, அக்., 17ல் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, 5 நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன், நேற்று முன்தினம் துவங்கியது.வழக்கு விசாரணை, நேற்றும் நடந்தது. அப்போது, நீதிபதிகள் கூறிய தாவது:

அனைவருமே கடவுளின் படைப்பு என்கிற போது, எப்படி வேறுபாடு ஏற்படும். பக்தர்களிடம், ஆண் - பெண் என, வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க
முடியாது. வழிபாடு செய்வது, அனைவருக்கும் உள்ள சட்ட உரிமை.

குறிப்பிட்டவர்களை கோவிலுக்கு வரக்கூடாது எனக்கூறுவது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதை மறுப்பது,அரசியல் சட்டத்துக்கு விரோத மானது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையில், கேரள மாநில அறநிலையத் துறை அமைச்சர், சுரேந்திரன், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே, கேரள அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்து உள்ளோம்.

இனி, இது பற்றி, உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை ஏற்பது, நம் கடமை.சபரிமலையை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும், அரசின் நிலையை ஏற்றுக் கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Central varsity gets new chancellor

TIRUVARUR/CHENNAI, JULY 19, 2018 00:00 IST



A view of the Central University of Tamil Nadu

Former Director of Indian Institute of Science, Bengaluru, G. Padmanaban, has been appointed Chancellor of the Central University of Tamil Nadu (CUTN) in Tiruvarur by President Ram Nath Kovind.

Mr. Padmanaban replaces V. Krishnamurthy, former Chairman of National Manufacturing Competitive Council (NMCC).

Hailing from Thanjavur district, Mr. Padmanaban had his schooling in Bengaluru and graduated from the Presidency College in Chennai. He completed Ph.D in biochemistry at the Indian Institute of Science, Bengaluru. He was a recipient of Padma Bhushan in 2003 and Padma Shri in 1991.

Nominee for MKU panel

Nageshwar Rao, who has served as Vice-Chancellor of various open universities, including the Indira Gandhi National Open University, is the nominee of Governor-Chancellor Banwarilal Purohit for the search committee tasked with choosing the Vice-Chancellor of the Madurai Kamaraj University.

Last week, M. Anandakrishnan, former Vice-Chancellor of the Anna University, was chosen as the nominee of the university’s senate for the search panel. A month ago, C. Thangamuthu, former Vice-Chancellor of the Bharathidasan University, was selected as the Syndicate’s choice.
‘File I-T returns on time or pay fine’

COIMBATORE, JULY 19, 2018 00:00 IST


Office of the Chief Commissioner of Income Tax - Coimbatore has urged the Income Tax assessees to pay their I-T returns on or before July 31, 2018, failing which they will have to pay penalty.

In a release issued here, the Income Tax department has said that a section 234 F has been brought in the Finance Act which calls for payment of penalty for delayed filing of I-T returns.

Those with income less than Rs. 5 lakh and filing returns between August 1, 2018 to March 31, 2019 will have to pay a penalty of Rs. 1,000 and those whose income exceeds Rs. 5 lakh and filing returns between August 1, 2018 and December 31, 2018 will have to pay a fine of Rs. 5,000 and those filing the returns between January 1, 2019 to March 31, 2019 will have to pay a fine of Rs. 10,000.

Mandatory

Late filing fee is mandatory and thus automatic. The same has to be paid before filing a belated return.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...