Sunday, July 22, 2018

Counselling dates out for Anna univ

TIMES NEWS NETWORK

Chennai:22.07.2018

Anna University released the schedule for general counselling, on Saturday. Students with an aggregate score of 190 or above will be attending the counselling between July 25 and July 29, said an official release.

The candidates should pay the initial deposit before July 24, the release added. Similarly those with an aggregate score of 175-189, 150-174, 125-149 should pay the initial deposit between July 25-29, July 30-August 3, August 4-8 respectively.

Online counselling has been scheduled between July 30-August 3,August 4-August 8, August 9-13 respectively for these candidates. The remaining eligible candidates would choose their seats in between August 14 and 19.

Unlike previous years, candidates need not travel to Anna University, Chennai for the counselling. A total of 42 Tamil Nadu Engineering Admission (TNEA) Facilitation Centres (TFCs) have been setup across the state for online counselling. Candidates can reach out to these centres to select the engineering seats of their choice as per availability. According to official data, nearly 1.5 lakh candidates applied for the online counselling this year, which is higher compared to the last four years.
Exorbitant med college fees leave many docs in debt trap

Rema.Nagarajan@timesgroup.com  22.07.2018

High fees in most medical colleges mean that students who have to take loans to pay the fees cannot hope to service the loans from what they earn as doctors after completing MBBS.

Here’s how the maths works. Annual tuition fees in private medical colleges average over ₹10 lakh. That’s half a crore rupees or more for the entire course when charges for things like hostel, mess, library, internet and examinations are included. The EMI on an education loan of ₹50 lakh works out to at least ₹60,000. Government salaries for an MBBS graduate range from ₹45,000 to ₹65,000 depending on the state and area and starting salaries in the private sector are even lower.

This raises a question: The government is allowing the opening of more private colleges or allowing existing ones to increase seats citing shortage of doctors, especially in rural areas and in PHCs, but don’t high fees defeat the purpose? Can such doctors have a living wage after they pay the EMI? In most banks, education loans cannot exceed ₹7 lakh to ₹10 lakh without collateral, which typically would mean mortgaging a house or land.


Government salary for an MBBS graduate starts at ₹45,000

States doing little to regulate med college fees

With collateral, the loan amount can be as high as the value of the collateral. Usually, the loan carries an interest of 10% to 12.5% and has to be repaid within 10 to 12 years.

Since most parents cannot afford lakhs every year in fees, if education loans become prohibitive, it could make medical education the preserve of the rich.

A TOI analysis of fees charged in 210 private medical colleges in 2017 showed that about 50 charged anything between ₹10 lakh and ₹15 lakh and over 30 charged even more. Several government colleges too charge high fees, especially in Gujarat and Rajasthan where there are some that charge over ₹3 lakh and ₹5 lakh, respectively, as annual tuition fees.

After 4.5 years of MBBS, a student has to do a one-year paid internship, during which time his/her salary would be at best ₹20,000-25,000 per month. After MBBS, whether a student is doing threeyear post-graduation or working as a resident doctor or medical officer, the salary in government service ranges from ₹40,000 to ₹55,000 in most states and even less in the private sector. In about three to four years, the salary rises to about ₹70,000 at best in most places. With EMIs of ₹45,000- ₹65,000 for loans ranging from ₹30 lakh to ₹50 lakh, doctors are left with barely enough to live on. For those who get married by this stage, the added responsibility of running a household complicates matters further. Mirroring the US situation, where students come out of the education system with huge loans to repay, India’s medical education set-up is becoming a debt trap for thousands with governments doing little to regulate medical college fees. Even in states with fee regulation, the annual fees in private colleges could range from ₹2.5 lakh to over ₹6 lakh, especially for management seats. For those without means, that would entail a loan of ₹12 lakh to ₹30 lakh and hence unaffordable EMIs.

Saturday, July 21, 2018

நெட்டிசன் நோட்ஸ்: 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பாரத சமுதாயமா? பலாத்கார சமுதாயமா?

Published : 18 Jul 2018 17:19 IST
 



சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

அப்பாவி

‏நம்முடைய அலைபேசியின் இணையத்தில் கிடக்கும் விடயங்களுக்கு எந்த தணிக்கை துறையும் இல்லை. இனி நாம்தான் நம் குழந்தைகளுக்கு தொடுதல்(Good Touch & Bad Touch) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இனி ஒரு அயனாவரம் குடியிருப்பு சம்பவம் உலகில் எங்கும் நடைபெறக்கூடாது

அஜாதசத்ரு

‏அயனாவரம் காது கேளா-வாய் பேசா சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு அந்த 22 பேர் மட்டுமா காரணம்?! # நம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பின்மைதானே காரணம்?!

S Amudhan

‏சமூக வலைதளங்களில் கோபத்தை கொட்டிக்கொண்டு இருக்கும் நேரத்திலேயே அயனாவரம் பாலியல் கொடுமை போன்று இன்னொன்று நடந்து விடுகிறது..POCSO சட்டமெல்லாம் குற்றவாளிகளின் காதுக்கு போய் சேருகிறதா??

அரசு குற்றவாளிகள் பயப்படும்படி செய்ய வேண்டும். பெற்றோர் ஆண் குழந்தைகளை நல்லபடி வளர்க்க வேண்டும்.

Senthil guru

‏ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு தன் தாயும், சேயும், உடன்பிறப்புகளும் பெண் தான் என்று நினைவில் வரவில்லையா?

ர.நந்துரவிச்சந்திரன்

‏மிகப் பெரிய சோகம்..

மனிதத்தன்மையின் நம்பிக்கையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்..

"அயனாவரம் சம்பவம்"

வணங்காமுடி

‏அயனாவரம் சிறுமி சீரழிக்கப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை வழக்கறிஞர்கள் தாக்கினார்களாம்.

நல்ல முன்னேற்றம் அப்படியே உங்க பார் கவுன்சிலை கூட்டி சிறுமிகளுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடமாட்டோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்க..

ஆனந்த்

‏வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமிக்கு வயது

பதினொன்று.

வன்புணர்வில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை பதினாறு.

இஃது,

பாரத சமுதாயமா?

பலாத்கார சமுதாயமா?

வேதியன்

‏குற்றம் சார்ந்த எண்ணம் வருகிறதென்றால் தண்டனையின் வீரியம் பத்தவில்லை என்று அர்த்தம்

Karthik Rangaraj Namakkal, Chennai and Nagercoil

‏சட்டத்தை கடுமையாக மற்றும் விரைவாகத் தாருங்கள்...

Alex Pandiyan JB

‏வன்புணர்வு பற்றி பதிவிடும் நண்பர்களுக்கு முதலில் sex, molested, intercourse, love making பற்றிய புரிதல் வேண்டும். பெண்களின் கவர்ச்சி மிகுந்த ஆடைகளே காரணம் போன்ற பிற்போக்குத்தனமான பதிவுகளை தவிர்க்கலாம். வன்புணர்வுக்கு முக்கியக் காரணம் ஆண்களின் வக்கிர சிந்தனை ம‌ட்டுமே காரணம்.

tamil

சென்னை அயனாவரம் சிறுமி பலாத்காரம்:

இந்த மாதிரி மிருகங்களுக்கு தகுந்த பாடம் சாகும்வரை ஜெயில்.

Devi Somasundaram

1. சென்னைல யாரும் தன் அபார்ட் மென்ட்டை திறந்து போடுவதில்லை. அபார்ட்மென்ட்டில் காலியாக இருந்த வீட்டில் தான் வன்புணர்வு செய்யபட்டதாக சொல்லப்படுகிறது....அப்படி யார் 7 மாதம் தன் வீட்டைக் கண்டுக்காம திறந்து போடுகிறார்கள் ? .

2 ..மயக்க ஊசி போட்டா திரும்பத் தெளிய குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்..அத்தனை மணி நேரமா விளையாட அனுமதித்து தேடாமல் இருந்திருப்பார்கள்..அதும் 7 மாதமா. ..டெய்லி 4. மணி நேரம் குழந்தை காணாமல் போவதை கண்டுபிடிக்கலையா.. அசந்தர்ப்பமா கூட அவள் தேடப்படவில்லையா?

3 .மயக்க மாத்திரை தந்தால் அது தொடர்ச்சியா மயக்கத்தில் வைக்கும்..பள்ளியிலோ, வேனிலோ, பக்கத்து வீட்டிலோ கவனிக்காமலா இருந்திருப்பார்கள் ?

4..மயக்க ஊசி அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்காது.மெடிக்கல் ப்ராக்‌டிஷ்னர் அனுமதி இல்லாம வாங்க இயலாது .யார் அனுமதித்தது .எந்தக் கடையில் வாங்கினார்கள்..அவர்கள் கைது செய்யப்பட்டனரா ? .

5..18-ல் இருந்து வகை வாரியா வயது நம்பர் தரப்பட்டுள்ளது. சின்ன பையனுக 7 மாதமா ஒளறாம இருப்பார்களா...தண்ணி போட்டா நண்பர்கள் கிட்ட ஒளறிடுவானுக..

6...எதோ இந்த சம்பவத்தில் சரி இல்லைன்னு உள்ளுணர்வு சொல்லுது ....எதுன்னு சொல்ல தெரில..

7 ..போக்சோ ஆக்ட். நான் பெயிலபிள். .ஒரு வருடத்தில் கேஸ் முடித்து தீர்ப்பு வழங்கியாக வேண்டும்..

Elamathi Sai Ram

அயனாவரம் சம்பவத்தில், கொன்றுவிடுங்கள், எரித்து விடுங்கள் போன்ற பதிவுகள் ஆற்றாமையில் இடப்படுபவை. நீதியின் மேல், நீதி வழங்கும் மன்றங்களின் மீது நம்பிக்கையற்று சொல்லப்படுபவை.

மாறாக, கொல்வதையே நீதியாகக் கோரமுடியாது.

குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட 17 பேரும், வழக்கமாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்கள் அல்ல எனத் தெரிகிறது. ஆனால் 12 வயதுப் பெண் குழந்தை இவர்கள் அனைவரது பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகிறாள். அவள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. குடும்பத் தலைவனாக, அண்ணனாக, தம்பியாக, சக மனிதனாக நம்மிடையே, வாழ்ந்து நினைத்து பார்க்க முடியாத வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுதான் கடுங்கோபத்தை உண்டாக்குகிறது. கிட்டத்தட்ட ஒரு குழந்தையைக் கடத்தி, கும்பலிடம் விற்று காசு பார்க்கும், child trafficking குற்றத்திற்கு ஒப்பானது. நமக்குத் தெரியாமல் எங்கோ நடக்கும் பயங்கர குற்றம் நாம் வசிக்கும் இடத்திலேயே மிகச் சாதாரணமானவர்களால் நிகழ்த்தப்படுகிறது.

அச்சத்தை விடுங்கள். கடும் எரிச்சலும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது.

இது தொடர்ந்து நடக்கிறது. ஆசிஃபா பாலியல் பலாத்கார கொலை பேரதிர்ச்சியை நாம் கண்ட பிறகு, தொடர்ந்து இது போன்ற செய்திகள்.. ஒன்றையொன்று தூண்டப்படுகின்றன போலும்.

பாலியல் இச்சை கொண்ட நிறைய ஸோம்பிகள் நம்மைச் சுற்றிலும் வாய்ப்புகளுக்காக காத்துக்கிடக்கினறன.

இவர்களுக்கிடையேதான் நல்ல நண்பர்களும், உறவுகளும் கைப்பிடித்துக்கொள்ள இருக்கிறார்கள் என்று நிச்சயமாக நம்புவோம். முரண்தான் வாழ்க்கை போலும்.

Deepa Janakiraman

பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த சம்பவத்தைப் பற்றி ‘பகுத்தறிவோடு இதை யோசிக்க வேண்டும்’ என்கிற ரீதியில் எழுதப்பட்ட நிலைத்தகவல்களை ஃபேஸ்புக்கில் வாசித்தேன். பகுத்தறிவு என்பது உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு யோசிப்பது தான் என்று இங்கு விதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

நடந்த சம்பவம் உண்மை என காவல்துறையும், மருத்துவத்துறையும் சொல்லியாயிற்று. சிறுமியும் குற்றவாளிகளை அடையாளப்படுத்தியிருக்கிறாள்.

அந்தக் குழந்தையை நினைத்தால் பதறுகிறது. பேரச்சம் எழுகிறது இந்தப் பதற்றமும் அச்சமும் உண்மையானது. இங்கு உண்மை என்பது பெண், ஆண் குழந்தைகளை யாரிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்பது தான். எங்களைப் போன்ற இதற்கெல்லாம் பகுத்தறிவின்றி அதீதமாய் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு உங்களிடம் தீர்வு இருந்தால் சொல்லுங்கள். ஏனெனில் எந்த நேரமும் எங்களால் சாந்தமாய் இருக்க முடிவதில்லை. நாங்கள் இந்த சாதிக்காரன் தான் தவறு செய்வான் என்றும் முடிவு செய்வதில்லை. கருப்பா, சிவப்பா என்று பார்ப்பதில்லை. எங்களுடைய ஒரே கொந்தளிப்பு எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டுமே என்பதாகத் தான் இருக்கிறது.

எங்கள் அச்சமெல்லாம் பிளம்பரையும் நம்பமுடிவதில்லை, பேராசியரையும் நம்பமுடிவதில்லை என்பதாகவே உள்ளது.

Kirthika Tharan

பெண் உரிமை , சம நிலை எல்லாம் சரி. ஆனால் ஏதும் அறியாத ஒரு பெண் இங்கு உள்ளே நுழையும் பொழுது ஆசை வார்த்தைகள், பேரன்பு, நேசம் என்று பேசியே கவிழ்க்கும் பல போலி ஆண்களும் வன்புணர்வுக்கு எதிராக பொங்குவதுதான் முரண்.

ஆண், பெண் நட்பின் மீதான நம்பிக்கையில் பலர் வெந்நீர் ஊற்றிக்கொண்டே இங்கு இன்னொரு வேஷம் போடுவதும் அறிவோம்.

திறக்கப்படாத அதர்ஸ் இன்பாக்ஸில் ஆயிரக்கணக்கில் மெசெஜ்கள் .அதில் பாலியல் வக்கிரம் தோய்ந்து பாதியாவது இருக்கும்

ஆசையாய் பேசி மனம் மாற்றுவது சட்டப்படி குற்றமாம். ஆண்களுக்கு தண்டனை உண்டு என்கிறது. அதாவது செக்‌ஷன் 497 படி..இன்னொருவரின் மனைவியோடு..கணவரின் சம்மதம் இன்றி உறவு வைத்துக்கொண்டால் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை( இதை நீக்க போரட்டமும் நடக்கிறது)

பெண்களுக்கு அனபுதான் பலம், பலவீனம் ..பலவீனத்தை பயன்படுத்தும் எவரும் கோழைகள்.

Geethappriyan Karthikeyan Vasudevan

இப்போது அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தேவை பெற்றோர் உற்றாரின் அரவணைப்பும் தான், அக்குழந்தைக்கு நல்ல மனோதத்துவ சிகிச்சை அளித்து இதே புரையோடிய சமூகத்தில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் வீராங்கனையாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.


தஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவி, மகன்களை கொலை செய்த கணவன்: முன்னாள் எம்எல்ஏக்களின் மகனுக்கு போலீஸார் வலைவீச்சு

Published : 20 Jul 2018 14:16 IST
 
வி.சுந்தர்ராஜ்    கும்பகோணம்

 


தஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவியையும், இரு மகன்களையும் மண்வெட்டிக் கம்பால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் போலீஸ் சரகம் அன்னப்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (47). இவரது தந்தை செல்லப்பா, தாய் யசோதா இருவரும் திமுக ஆட்சிக்காலத்தில் வலங்கைமான் தொகுதியில் எம்எல்ஏக்களாக பதவி வகித்தவர்கள். ஜெயக்குமாரின் சித்தி இளமதி சுப்பிரமணியன் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.

ஜெயக்குமாருக்கு திருமணமாகி அனிதா (40) என்ற மனைவியும், தினேஷ் (9), தரனேஷ் (7) ஆகிய இரு மகன்களும் இருந்தனர். இதில் அனிதா தஞ்சாவூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் தினேஷும், தரனேஷும் நான்காம் வகுப்பும், இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஜெயக்குமார் விவசாயம் பார்த்து வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஜெயக்குமார் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அருகில் கிடந்த மண்வெட்டிக் கம்பை எடுத்து அனிதாவைத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அப்போது மகன்கள் இருவரும் தாயை அடிப்பதைத் தடுத்தனர். இதில் ஜெயக்குமார் இரு மகன்களையும் மண்வெட்டிக் கம்பால் தாக்கியதால் மண்டை உடைந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு வந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகன்கள் இருவரும் இறந்தனர். வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் அனிதா இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பாபநாசம் டிஎஸ்பி செல்வராஜ், மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.
தன்னம்பிக்கையால் ஓடத் தொடங்கிய கால்!

Published : 20 Jul 2018 11:40 IST

என்.சுவாமிநாதன்

 


டுபு…டுபு….டுபு...டுபு’ வெனச் சீறிப் பாய்ந்து வருகிறது அந்த புல்லட். அதில் மனைவி, குழந்தைகளோடு வலம்வருகிறார் விக்னேஷ்வர சுப்பையா. அவரது வாழ்க்கை ஒருவகையில் பிறருக்குத் தன்னம்பிக்கைப் பாடம்!

சாலை விபத்தில் ஒரு காலை இழந்த இவர், செயற்கைக் கால் பொருத்தி, இயல்பான மனிதர்களோடு ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். நிச்சயித்த திருமணமும் விபத்துக்குப்பின் நின்றுபோக, தன் தன்னம்பிக்கையால் மீண்டெழுந்தவர், இன்று அன்பான மனைவி, அழகான குழந்தைகள் செல்வங்கள், திகட்டாத தன்னம்பிக்கை என வாழ்ந்துவருகிறார்.

ஒரு காலைப் பொழுதில் விக்னேஷ்வர சுப்பையாவை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ‘’அப்பா ராமகிருஷ்ணனுக்குத் தனியார் நிறுவனத்தில் வேலை. அம்மா முத்துமாரி இல்லத்தரசி. என் உடன்பிறந்தவங்க இரண்டு தங்கச்சிங்க. இரண்டுபேருக்கும் திருமணம் முடிஞ்சிருச்சு. நான் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிச்சுட்டு, எலக்ட்ரிக்கல் வேலை செஞ்சுட்டு இருந்தேன். நான் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் வெளிநாட்டுக்குப் போனாரு. அதனால மொத்தப் பொறுப்பையும் எனக்கே சொந்தமா தந்துட்டு போனாரு.

எல்லாம் நல்லபடியா போச்சு. எனக்கும் வீட்டுல திருமண நிச்சயம் பண்ணுனாங்க. ஒரு நாள் நண்பர் வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு பைக்ல வந்துட்டு இருந்தேன். எதிர்ல வந்த மீன் லோடு வண்டி என்னை இடிச்சுட்டு நிக்காமப் போயிருச்சு. தூரத்துல இருந்தே அந்த வண்டி ஆடி, ஆடித்தான் வந்துச்சு. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கணும். அந்த விபத்தில் என்னோட வலது கால் மூட்டின் கீழ் பகுதி மூன்று பாகங்களா உடைச்சுருச்சு. பாதமும் உருத்தெரியாம சிதைஞ்சு போனது.

ஆஸ்பத்திரியில ஆப்ரேஷன் பண்ண முடியாது. செயற்கைக் கால்தான் வைக்கணும்னு சொன்னாங்க. மொத்த குடும்பமும் இடிஞ்சு போச்சு. நிச்சயிக்கப்பட்ட பொண்ணு வீட்டுல ஒரு கால் இல்லைன்னு சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. வாலிப வயசுல இது எத்தனை சோதனையான காலகட்டம்? ஆனாலும் நான் மனம் தளரல. செயற்கைக் கால் வைச்சேன். பிலோனி என்னும் வகையைச் சேர்ந்த கால் இது. மூணே மாசத்துல செயற்கைக் காலில் நடந்தே பொண்ணு வீட்டுக்குப் போனேன்.

பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் எப்படி நடக்குறீங்கன்னு ஆச்சர்யமா பார்த்தாங்க. ஆனாலும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் இல்லன்னு சொல்லிட்டாங்க. இதெல்லாம் நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. திரும்பி பார்க்கும்போது, இப்பவும் வலிக்குது” என்கிறார் விக்னேஷ்வர சுப்பையா.

ஆனால், விபத்துக்குப் பிறகு அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. செயற்கைக் கால் உதவியுடன் ஜிம்முக்குப் போகத் தொடங்கியிருக்கிறார். சிறிய உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். விக்னேஷ்வராவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால், உடம்பு சீக்கிரமே குணமாகிவிட்டது, பிறகு ஹைதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தபோது அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார்.

செயற்கைக் கால் வைத்து ஏழே மாதங்களில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியிருக்கிறார். அந்த மாரத்தானில் 30 பேர் மட்டுமே 5 கிலோ மீட்டர் தூரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். இவர்களில் விக்னேஷ்வர சுப்பையாவும் ஒருவர். அந்த நம்பிக்கை கொடுத்த அனுபவம், தொடர்ந்து ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

“முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப் பந்தயங்களில்தான் பங்கெடுத்தேன். அதில் பரிசு வாங்குனாலும், எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. நம்மைவிட இயலாதவருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் பறிக்கிறோமோன்னு தோணுச்சு. உடனே இயல்பானவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். இதுக்குன்னு செயற்கைக் காலுக்குப் பதிலாக, பிளேட்ன்னு ஒரு கால் இருக்கு. ஸ்பிரிங் வகையில் அது துள்ளி எழும்பி ஓட வைக்கும்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் என்னை ஊக்குவிக்கும் விதமா ரூ.5 லட்சம் மதிப்பிலான கார்பன் பைபர் வகையிலான இந்தக் காலை எனக்கு இலவசமா கொடுத்தாங்க. இப்போ என்னால 100 மீட்டரை 13.5 வினாடிகளில் ஓட முடியும். மாவட்ட அளவில் பல பரிசுகளும் வாங்கிருக்கேன். இப்போதைய உடல்நிலையில் எலக்ட்ரிக்கல் வேலை சாத்தியமே இல்லைன்னு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி படிச்சேன். இப்போ நாகர்கோவிலில் சொந்தமா செல்போன் சேல்ஸ், சர்வீஸ் மையம் வைச்சுருக்கேன்” என்று பெருமையுடன் கூறுகிறார் விக்னேஷ்வர சுப்பையா.

சரி, திருமணம் நடந்த கதையைச் சொல்லவே இல்லையே என்று கேட்டவுடன் அதையும் பகிர்ந்துகொண்டார். “ஒரு திருமண வீட்டுலதான் முதன்முதலா ஸ்ரீதேவிய சந்திச்சேன். கால் இல்லைன்னாலும், தன்னம்பிக்கை நிறைந்த மனுஷன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க. அவுங்க வீட்டுலயும் என்னை மகன்போல ஏத்துக்கிட்டாங்க. இப்போ எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க.

இப்போ இவுங்கதான் என் உலகம். என்னால் புல்லட்கூட ஓட்ட முடியும். என்னைப் பொறுத்தவரை விருதும் கோப்பையும் முக்கியம் அல்ல. விபத்தால் ஒரு காலை இழந்த பின்பும், நான் இயல்பாக இருப்பதும், தொடர்ச்சியாய் இயங்குவதும் என்னைப் போல் பலருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்!” என்று சொல்லியவாறே குடும்பத்தை ஏற்றிக்கொண்டு புல்லட்டைக் கிளப்புகிறார் விக்னேஷ்வர சுப்பையா.

'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படம் என்று நினைத்தாரா?: பிரதமரைக் கட்டிப் பிடித்த ராகுல் காந்திக்கு ஹர்சிம்ரத் கவுர் கண்டனம்

Published : 20 Jul 2018 20:43 IST
 
ஐஏஎன்எஸ் புதுடெல்லி,
 


மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - படம்உதவி:ட்விட்டர்

மக்களவையில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயலை தான் விரும்பவில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் விவாதம் செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசி முடிக்கும்போது, தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிச் சென்று, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார்.

இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டாலும், பாஜகவினரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அதிருப்தி அடைந்துள்ளனர்.பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்துவிட்டு, ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்து, கண்ணைச் சிமிட்டினார்.


மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார்.

காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கொடுத்து, அவர்களை மெருகேற்றவேண்டியது தாயின் கடமையாகும்'' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி பேசி முடித்தவுடன் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ''சிலர் திடீரென அவையில் கட்டிப்பிடி இயக்கத்தை நடத்திவிடுகிறார்கள்'' என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் பெரும் கூச்சலிட்டதால், சில நிமிடங்கள் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

அதன்பின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பேசுகையில், ''இது நாடாளுமன்றம், 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' திரைப்படம் அல்ல. கட்டிப்பிடித்து விளையாடுவதற்கு'' என்று கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பஞ்சாபிகள் என்றால் போதைமருந்து உட்கொள்பவர்கள் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இப்போது ராகுல் செய்தது என்ன?, நீங்கள் இப்போது என்ன எடுத்துக்கொண்டீர்கள். இதற்கு பதில் இல்லாமல் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு சென்றார் எனத் தெரிவித்தார்.
5 நாள் மண வாழ்க்கையில் ஏமாற்றம்; கணவனை அடித்து உதைத்த மனைவி: ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்ததால் ஆத்திரம்

Published : 19 Jul 2018 18:12 IST

கோவை

 

சரமாரியாக தாக்கும் புதுமணப்பெண்

மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை அந்த இளம்பெண் சரமாரியாகத் தாக்கினார். கையை முறுக்கி முகத்தில் குத்தியபடி திட்டிக் கொண்டிருந்தார்.

அடிவாங்கியபடி எதிர்க்க முடியாமல் அந்த இளைஞர் அழுதுகொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிரித்தபடி சென்றனர். சிலர் செல்போனில் படம் எடுத்தனர். சிலர் தடுக்க முயன்றபோது இளம்பெண் கூறிய காரணத்தைக் கேட்டு “போடு இன்னும் ரெண்டு போடு” என்று இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுச் சென்றனர்.

கணவரைத் தாக்கிய இளம்பெண் ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது வீட்டார் எதிர்ப்பையும் மீறி தனது காதலரைக் கரம் பிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சியில் 5 நாள் மண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருப்பதை புது மணப் பெண் கவனித்திருக்கிறார்.

அது பற்றிக் கேட்டபோது கணவர் மறைத்துள்ளார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி பிரிந்துசென்று விட்டார் என்கிற தகவலைக் கூறியுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து தன்னிடம் பழகி ஏமாற்றியதை அந்த இளம்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபமான அப்பெண் இடத்தில் பொது இடம் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்து வெளுத்துவிட்டார்.

மனைவியிடம் அடிவாங்கி அழுத இளைஞர் மூன்று பெண்களைக் காதலித்ததும், அவர்களில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனிடையே பொது இடத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞரை அடிப்பதாக போலீஸாருக்கு சிலர் போன் செய்து தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளம்பெண் தாக்குதலிலிருந்து அழுதுகொண்டிருந்த இளைஞரை மீட்டனர்.

“என்ன செய்ததால் அந்தப் பெண் உன்னை இந்த அடி அடிக்குது” என்று போலீஸார் கேட்க “நான் என்ன சார் செய்தேன், அவள் என் மனைவி அவள்தான் என்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறார்” என்று கூறிய கணவன் “நல்லவேளை சார் வந்து காப்பாற்றினீர்கள்” என்று கூறியுள்ளார்.

“ஏம்மா புருஷனைப் போட்டு அடிப்பதை எல்லாம் வீட்டுக்குள் வைத்துக்கொள். பொது இடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது. அவன் என்ன தவறு செய்தான்” என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

“ என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களுடன் பழக்கம் உள்ளது, ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் இருக்கிறார்” என்று இளம்பெண் கூற, ஏதாவது புகார் இருந்தால் ஸ்டேஷனில் சொல்ல வேண்டும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் கணவரை நையப்புடைத்த காட்சியும், கதறி அழும் கணவரை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சியும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தப்பு செய்யும் கணவர்களுக்கு சரியான தண்டனை என சிலர் இளம்பெண்ணைப் பாராட்டியும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...