Friday, September 21, 2018


ஏடிஎம்' இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் வெளியே வரும் கொழுக்கட்டை; புனேவில் புதுமை

Published : 19 Sep 2018 13:19 IST




வழக்கமாக ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் பணம் வெளியே வரும். ஆனால் புனேவில் கொழுக்கட்டை வெளியே வருகிறது.

நாடு முழுவதும் கடந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், புனே சஹாகர் நகரைச் சேர்ந்த சஞ்சீவ் குல்கர்னி இதில் புதுமையைப் புகுத்த நினைத்தார்

ஏடிஎம் போன்ற இயந்திரத்தை உருவாக்கிய அவர், அதில் நுழைக்கப் பிரத்யேக கார்டுகளையும் உருவாக்கினார். கார்டை நுழைத்தால் கொழுக்கட்டை வருவது போல இயந்திரத்தை வடிவமைத்தார்.

அதில் எண்களுக்குப் பதிலாக மன்னிப்பு, அன்பு, அமைதி, அறிவு, பக்தி, சேவை ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டன.

இதுகுறித்துப் பேசிய குல்கர்னி, ''கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே கொண்டுசெல்ல மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இது'' என்றார்.

இந்த இயந்திரத்துக்கு ஏடிஎம் (Any Time Modak- எந்த நேரமும் கொழுக்கட்டை) என்றே பெயரிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தம் வழிந்தது: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பதற்றம்

Published : 20 Sep 2018 11:32 IST




கோப்புப்படம்.

வியாழக்கிழமை காலை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு காது, மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கேபின் அழுத்தத்தை முறைப்படுத்தாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டது.


இதுகுறித்துப் பேசிய விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி, ''மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பி 737 விமானம் 9 டபிள்யூ 697, இன்று (வியாழக்கிழமை) மும்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

பயணத்தின்போது விமான அதிகாரிகள் குழு, கேபின் அழுத்தத்தைப் பராமரிக்கும் பொத்தானை அழுத்த மறந்துவிட்டது.

இதனால் சில பயணிகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. விமானத்தில் மொத்தம் 166 பயணிகள் பயணித்தனர். அவர்களில் 30 பேருக்கு மூக்கில் ரத்தம் வெளியேறியது; சிலருக்கு காதில் ரத்தம் வடிந்தது. மற்றும் சிலர் தலைவலியால் அவதிப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.

பயணிகளுக்கு முதலுதவி

சம்பவத்தை ஜெட் ஏர்வேய்ஸ் உறுதி செய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அதன் செய்தித் தொடர்பாளர், ''அனைத்துப் பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சம்மந்தப்பட்ட விமான அதிகாரிகள் குழுவின் மீது விரைவில் விசாரணை நடத்த உள்ளோம். பயணிகளுக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்துவருகிறோம். சிரமத்துக்கு ஜெட் ஏர்வேஸ் வருந்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரி தான் பெல்ட் குண்டு செய்யப் பயன்பட்டதா? - அற்புதம்மாள்

Published : 20 Sep 2018 18:39 IST




அற்புதம்மாள்: கோப்புப்படம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கால் முதலில் பாதிக்கப்பட்டவள் நான் தான் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் திருத்தி, 3 வாரத்திற்குப் பிறகு புதிதாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், “பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குழு போன்று செயல்படுகிறார்கள். இந்த வழக்கால் நானும் பேரறிவாளனும் தான் முதலில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டோர் பட்டியலில் என் பெயரே இல்லை. எனக்கு அதுதான் வருத்தம். என் மகன் மற்றும் என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தாங்க முடியாத துயரம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த வழக்கில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்தார்களா? எங்களுக்குப் பொருளாதாரச் செழிப்பு இல்லை. இருந்தாலும், சட்ட ரீதியாகப் போராடுகிறோம்.

உண்மை குற்றவாளி யார் எனத் தெரியவில்லை என்று என் மகனே வழக்கு தொடுத்திருக்கிறான். என் மகன் வாங்கி தந்த 9 வோல்ட் பேட்டரி தான் பெல்ட் குண்டு செய்யப் பயன்பட்டது என்பதை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. குண்டு தயாரித்தவர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிக்சன். அவரை விசாரிக்க அனுமதியே கிடைக்கவில்லை. இந்த வழக்கால் நான் தான் முதலில் பாதிக்கப்பட்டவள். எழுவர் விடுதலையை எதிர்க்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிலர் சொல்கின்றனர்” என அற்புதம்மாள் தெரிவித்தார்.

Advertisement 21.09.2018


பஸ்சில், 'ஏசி' கோளாறு ரூ.10 ஆயிரம் இழப்பீடு

Added : செப் 21, 2018 02:02


சென்னை:ஆம்னி பஸ்சில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறால், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்துாருக்கு, ஆம்னி பேருந்தில், 7,920 செலுத்தி, குடும்பத்தினர் ஒன்பது பேருடன் பயணம் செய்தேன். பேருந்தில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறாலும், ஜன்னல் கண்ணாடி திறக்க முடியாததாலும், மூச்சு திணறலால் அவதியடைந்தோம். ஆம்னி பஸ் நிறுவனம், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'ஏசி' கோளாறு உடனே சரி செய்யப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, ஆம்னி பஸ் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில் நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:ஆம்னி பஸ் நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்குச் செலவும் வழங்க வேண்டும், இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
அரசு பெண் அதிகாரியை செருப்பால் அடித்தவர் கைது

Added : செப் 20, 2018 23:32


சேலம், பொதுப்பணித் துறை பெண் செயற்பொறியாளரை, செருப்பால் அடித்தவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 45; இவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு குடியிருப்பவர், ரவிகிருஷ்ணன் மனைவி ஜமுனாதேவி, 56; இவர், தர்மபுரி மாவட்டம், அரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.வீட்டை காலி செய்யுமாறு, சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஜமுனாதேவி, அவகாசம் கேட்டுள்ளார். இதனால், அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம், ஜமுனாதேவியின் வீட்டு முன் நின்று, சீனிவாசன் சத்தம் போட்டுள்ளார்.இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன், செருப்பால், ஜமுனாதேவி, அவரது மகன் ஹரிபிரசாத், 20, ஆகியோரை தாக்கியுள்ளார். ஜமுனாதேவி புகார்படி, சூரமங்கலம் போலீசார், சீனிவாசனை கைது செய்தனர்.
14 நாட்கள், 'கரன்ட் கட்' நெல்லை மக்கள், 'ஷாக்'

Added : செப் 21, 2018 01:39


-திருநெல்வேலி, கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், துாத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 'இதனால் திருநெல்வேலியில், 14 நாட்களுக்கு, பகலில் மின்சாரம் இருக்காது' என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் உள்ளன. முதலாவது உலையில், நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. இரண்டாவது உலையில், செப்., 13ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை, மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.துாத்துக்குடியில் தலா, 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகள் உள்ளன. இதில், இரண்டாவது, அணு உலை சில தினங்களாக மூடப்பட்டு உள்ளன.'நிலக்கரி தட்டுப்பாட்டால் உற்பத்தி நடக்கவில்லை' என, புகார் எழுந்தது. தற்போது, காற்று குறைந்து வருவதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காற்றாலைகளில் கிடைத்த மின்சாரம் குறைந்து விட்டது.இதனால், தென்மாவட்டங்கள் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. திருநெல்வேலி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், கிருஷ்ணராஜ் அறிவிப்பில், 'செப்., 24 முதல், அக்., 7 வரை காலை, 8:00 முதல் மாலை, 5:00 வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், நகர் பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...