Friday, September 21, 2018

பஸ்சில், 'ஏசி' கோளாறு ரூ.10 ஆயிரம் இழப்பீடு

Added : செப் 21, 2018 02:02


சென்னை:ஆம்னி பஸ்சில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறால், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்துாருக்கு, ஆம்னி பேருந்தில், 7,920 செலுத்தி, குடும்பத்தினர் ஒன்பது பேருடன் பயணம் செய்தேன். பேருந்தில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறாலும், ஜன்னல் கண்ணாடி திறக்க முடியாததாலும், மூச்சு திணறலால் அவதியடைந்தோம். ஆம்னி பஸ் நிறுவனம், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'ஏசி' கோளாறு உடனே சரி செய்யப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, ஆம்னி பஸ் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில் நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:ஆம்னி பஸ் நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்குச் செலவும் வழங்க வேண்டும், இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...