Saturday, August 10, 2019

Woman doc gets Madras high court relief for her PG course study

DECCAN CHRONICLE.

PublishedAug 10, 2019, 2:31 am IST

She sent representations to the authorities to pay full pay and allowances for the period of PG course study.

Madras high court

Chennai: The Madras high court has directed authorities to grant benefits to a woman doctor by counting the period of her study of PG course between 2011 and 2014 as service for all purposes and grant full pay and allowances for the said period.

Allowing the petition by Dr Elamathi Bose, Justice V. Parthiban said it is open to the government to impose reasonable conditions like assurance from the petitioner to serve in the government till she attained superannuation.

According to petitioner, while she was working under the directoror of public health and preventive medicine, since she could not get a seat either in government institutions or in any surrendered seats in self-financing colleges, she joined PG course for three years in MD (anatomy) in a private deemed university, namely Sree Meenakshi medical college and sent a letter to the DMS to grant special leave under extraordinary circumstances to pursue PG course. In response, the government also granted permission to her. After completing her PG, the government on the basis of her intention, posted her as tutor/assistant professor of anatomy at Madras Medical College.

She sent representations to the authorities to pay full pay and allowances for the period of PG course study. As there was no response, she filed the present petition. Resisting her claim, additional advocate general Narmada Sampath submitted that since the petitioner could not secure the seat either in the government institution or in the surrendered seats of the self financing colleges under the single window system because of her lower merit, she cannot seek parity in treatment for grant of full pay and allowances.

The judge said although stiff resistance has been put up on behalf of the government that the candidates who secured their PG degrees through private deemed universities, were not entitled to be granted full pay and allowances, yet, such resistance becomes irrelevant on the basis of the fact that ultimately, the candidate, namely, the petitioner acquired specialized knowledge in anatomy by successfully completing her MD (anatomy) and was re-employed in government service.

In this case, the petitioner has been serving the government even after her PG, and was willing to abide by any reasonable conditions to be imposed by the government. “Since the petitioner is willing to put use of her specialized knowledge acquired through the PG degree, in discharge of her public duty, her claim in the opinion of this court cannot be treated differently on the specious plea that she has undertaken the course in a private deemed university and not selected through single window system,” the judge added.
வேலூரில் சுவாரஸ்யம்: ஏசி சண்முகம் தோல்விக்கு நாங்களும் காரணம்: 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகி பேட்டி



வேலூர் மக்களவைத் தேர்தலில் கடுமையான போட்டியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது. தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தும் கேட்கவில்லை அதிமுகவின் தோல்விக்கு தாங்களும் ஒரு காரணம் என்று அதன் நிர்வாகி பேட்டி அளித்தார்.

மக்களவைத் தேர்தலில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதியான வேலூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஆக.5 அன்று நடந்தது. திமுக, அதிமுகவில் மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 7 ரவுண்டு வரை முன்னணியில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பின்னர் பின் தங்கினார்.

பின்னர் இழுபறி நீடித்து வந்த நிலையில் நீண்ட போரட்டத்திற்குப்பின் 8141 என்கிற சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றார். நாம் தமிழர் கட்சி 26995 வாக்குகள் பெற்றது, நோட்டாவுக்கு 9417 வாக்குகள் கிடைத்தது. இதில் சுவாரஸ்யமான விஷயமாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது.



இதுகுறித்து மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் பேசியபோது அவர் கூறியது:

இந்தத்தேர்தலில் நீங்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்?


பாட்டில் சின்னத்தில்தான்

அவர்களே ஒதுக்கினார்களா?


இல்லை, கேட்டு வாங்கினோம்.

என்ன கோரிக்கை வைத்து போட்டியிட்டீர்கள்?

இது மக்களவைத்தேர்தல், அதனால் மதுபான ஆலைகள் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது, கடல் நீரிலிருந்துத்தான் மதுபானம் தயாரிக்கணும். இந்த கோரிக்கைக்காக யாரும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

பார்களில் போலி மது பானம் அதிகமாக இருக்கிறது, பாட்டிலுக்குமேல் எம்.ஆர்.பி விலையைவிட அதிகம் விற்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கவேண்டும் என்றால் தமிழ்நாடு அரசால் எதுவும் செய்ய முடியாது.


இதை உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் மதுபான வகைகளை கொண்டுவந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பிரச்சினையை கொண்டுபோக முடியும்.

இந்தச் சட்டத்தில் இந்தியாவில் உள்ள மக்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் அதில்பாதிப்பு ஏற்பட்டால் புகார் அளிக்கலாம் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் சொல்லணும்.

தற்போது அந்தச் சட்டத்தில் மது இல்லையா?

இல்லை, அதைச் சேர்க்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முயற்சித்தபோது மதுபான அதிபர்கள் வழக்குப்போட்டு தடுத்துவிட்டனர். ஆகவே அதை உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்திற்குள் மதுபானங்களை கொண்டுவரவேண்டும்.

அதனால் என்ன லாபம்?

போலி மதுபானங்களுக்கு எதிராக வழக்கு போடலாம், ஆல்கஹால் அளவு மாற்றினால் சிக்கிக் கொள்வார்கள், அதிக விலைக்கு விற்க முடியாது இப்படி பல விஷயங்கள் உண்டு.

அடுத்த கோரிக்கை என்ன?

மது பான ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது மத்திய அரசு. ஆகவே மதுபோதை மறுவாழ்வு மையங்களை மாநில அரசுடன் இணைந்து ஆரம்பிக்கவேண்டும்.


வேறு முக்கிய கோரிக்கை தேர்தலில் வைத்தீர்களா?

ஆமாம், மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகளை அரசு அமைக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்தேன்.

இது எதிர்மறை கோரிக்கையாக உள்ளதே?

ஆமாம், மதுகுடிப்பதால் ஏற்படும் சமூக பிரச்சினைகளில், குற்றச்செயல்களில் முக்கியமானது பாலியல் பலாத்காரம், சின்னஞ்சிறு குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கும் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கிறது. இதற்கு மதுபோதை முக்கிய காரணம். ஆகவேதான் இந்தப்பிரச்சினைக்கு மாற்றாக சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க கோரிக்கை வைக்கிறோம்.

மேற்குவங்கம், டெல்லி, மும்பையில் இதுபோன்று உள்ளது. மதுவிற்பனை செய்யும் மாநிலங்களில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க கோரிக்கை வைத்தேன், மதுவால்தான் பாலியல் வன்கொடுமைகளும், விபத்துகளும் அதிகம் நடக்கிறது. மதுவிலக்கு அணைக்கப்படும்வரை சிகப்பு விளக்கை கொண்டுவர நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பேன் என்று பிரச்சாரம் செய்தேன்.

மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவாக கோரிக்கை இல்லையா?

மதுபானம் அருந்துகிறவர் வாழ்நாள் முழுதும் வீட்டுக்கும், சுற்றத்தாருக்கும் தொல்லை கொடுக்கிறார், வருமானத்தை அழிக்கிறார். வயோதிகத்தில் குடும்பத்துக்கு பாரமாகிவிடுகிறார். தமிழ்நாட்டில் 61.4 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். அதில் 8 சதவீதத்தினர் பெண்கள்.

ஆகவே இதுபோன்று மதுவால் வரும் வருமானத்தில் அரசு, அதே மதுவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உதவி நிதி வழங்கவேண்டும், மதுவால் விதவையான பெண்களின் மறுவாழ்வுக்கு வாழ்வுரிமைத்தொகை மாதம் 5000 வாங்கித்தருவேன் என்று பிரச்சாரத்தில் கோரிக்கை வைத்திருந்தேன்.



பிரச்சாரத்தில் அதற்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததா?

நல்ல வரவேற்பு இருந்தது. வேலூர் தொகுதியில் எனக்கு வாக்கு கிடையாது. என்னை யாருக்கும் தெரியாது, ஆனாலும் வரவேற்பு அளித்துள்ளார்கள். அதற்கு 2530 வாக்குகள் கிடைத்ததே சாட்சி. இதற்குமுன் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டேன் அங்கு கிடைத்தது, 88 வாக்குகள் மட்டுமே.

பிரச்சாரம் எப்படி செய்தீர்கள்?

தனி மனிதனாக பிரச்சாரம் செய்தேன், நல்ல வரவேற்பு இருந்தது. அதைத்தான் வாக்குகளாக பார்த்தீர்கள். ஏ.சி.சண்முகம் தோல்விக்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்தோம் காரணம் 8 ஆயிரம் வாக்குகள்தானே வித்தியாசம். நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று சொன்னபோது அவர்கள் அலட்சியம் செய்தார்கள்.

பிரச்சாரத்தில் எங்காவது உங்களுக்கு பிரச்சினை வந்ததா?

நாங்கள்தான் தமிழ்நாடு முழுதும் குடிமகன்கள் இருக்கிறோமே எப்படி பிரச்சினை வரும், நாங்களே ஏழரை எங்ககிட்ட எப்படி இன்னொரு ஏழரை வரும்?

உள்ளாட்சித்தேர்தலிலும் உங்கள் சங்க ஆட்கள் போட்டியிடுவீர்களா?


அதற்குமுன் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றிப்பயணம் தொடரும்.

முடிவாக என்ன சொல்கிறீர்கள்?

கட்சிக்கொடி இல்லாத கிராமம் இருக்கும், கட்டிங் போடாத கிராமங்கள் எங்கும் இல்லை.

நாங்கள் கோப்பையில் கை வைத்தால்தான் யாரும் கோட்டையில் கொடியேற்ற முடியும்.


இனி குவார்ட்டர், பிரியாணிக்கு ஏமாறமாட்டோம், கோட்டையில் கொடியேற்றாமல் விடமாட்டோம். இதுவே எங்கள் தாரக மந்திரம்.

இவ்வாறு செல்லப்பண்டியன் தெரிவித்தார்.

ஏசி சண்முகம்மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்வேலூர் மக்களவைத் தேர்தல்Vellore bi electionதிமுகஅதிமுக
ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க ஐஆர்சிடிசி முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை

ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. கட்டண விபரம் தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத் தில் வெளியாகும் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 (சிலீப்பர் வகுப்பு), ரூ.40 (ஏசி வகுப்பு) என சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. குறிப் பாக, ஆன்லைனில் பதிவு செய்யப் படும் ரயில் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் கிடையாது என அறிவித்தது. இந்த அறிவிப் புக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் 75 சதவீதமாக அதிகரித்தது.

 சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டு தோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே, சேவை கட்டண தொகையை மத் திய அரசு அளிக்க வேண்டுமென ரயில்வே துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலை யில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் மீண்டும் சேவை கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மத்திய அரசு 2016, நவம்பரில் கொண்டு வந்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ரயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்தது. இதனால் ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த தொகையை மத்திய அரசு வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். ஆனால், மத்திய நிதி அமைச்சகம் இதுவரை எந்த பதி லும் அளிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டிலும் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.

இதற்கிடையே, ஐஆர்சிடிசி பணிகளை மேம்படுத்த மீண்டும் சேவை கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய கட்டணமே நீடிக்குமா? அல்லது இதில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
தங்க கம்மலை விழுங்கிய கோழி; அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முயன்றபோது உயிரிழப்பு: சென்னையில் நடந்த பாசப் போராட்டம் 


தங்க கம்மலை விழுங்கிய கோழி.

சென்னை

தங்க கம்மலை விழுங்கிய கோழியை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தது.

சென்னை புரசைவாக்கம் நெல் வயல் லேன் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். திருமணமான இவ ருக்கு குழந்தை இல்லை. அதனால், கடந்த ஆண்டு ஒரு நாட்டுக்கோழியை வாங்கி, அதற்கு பூஞ்சி என்று பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தார். இவரது அக்காள் மகளும், ஐஏஎஸ் படிப்பவருமான தீபாவும் கோழி மீது அதிகம் பாசம் காட்டி வந்துள்ளார். கோழியும் தீபாவையே சுற்றிக் கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி தான் அணிந்திருந்த தங்க கம் மலை கழட்டி வைத்துவிட்டு தீபா தலைவாரிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை சுற்றி வந்த கோழி கம்மலை இரை என நினைத்து கொத்தி விழுங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதை யடுத்து, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள கால்நடை டாக்டரிடம் கோழியை தூக்கிச் சென்றனர்.

எனக்கு கம்மல் முக்கியமில்லை. கோழியின் உயிர்தான் முக்கிய மென டாக்டரிடம் தீபா அழுதுள் ளார். அவரை சமாதானம் செய்த டாக்டர் கோழியை எக்ஸ்ரே எடுத் துப் பார்த்ததில், கோழியின் இரைப் பையில் கம்மல் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து கம்மலை வெளியே எடுத்துவிடலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 8-ம் தேதி அறுவை சிகிச்சைக்காக கோழியு டன் சிவக்குமார் சென்றார். கோழிக்கு மயக்க மருந்து கொடுத் தும், செயற்கை சுவாசம் அளித்தும் டாக்டர் அறுவை சிகிச்சையைத் தொடங்கினார். அரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் கோழியின் இரைப்பையில் குத்திக் கொண்டு இருந்த கம்மலை டாக்டர் எடுத்தார். ஆனால், கோழி பரிதாபமாக உயிரிழந்தது.

இரைப்பையில் கம்மல் குத்தி காயம் ஏற்பட்டதால் கோழி உயிரி ழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித் தார். இதைக் கேட்ட சிவக்குமார் கதறி அழுதபடி, கோழியை வீட் டுக்கு தூக்கிச் சென்றார். வீட்டில் இருந்த தீபாவும் கோழியை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர், உயிரிழந்த கோழியை அடக்கம் செய்தனர்.

தங்க கம்மலை விழுங்கிய கோழிஅறுவை சிகிச்சைகோழி உயிரிழப்பு
டாக்டர்கள் போராட்டத்தால் முதல்வர் காப்பீடு திட்ட பணிகள் நிறுத்தம்: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி


மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளை நிறுத்தினர்.

பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதி கரிப்பது, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் அரசு டாக்டர்களுக்கு ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோரிக்கை களை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு அரசு டாக்டர்கள் சங்கங்களை உள்ளடக்கிய தமிழ் நாடு அரசு டாக்டர்கள் கூட்ட மைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி, தமிழகம் முழுவதும் அரசு டாக்டர் கள் கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால், பயிற்சி முகாம்கள் நடத்துவது, பிறப்பு - இறப்பு சான்றிதழ் பணி உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக, அரசு மருத்துவ மனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளை டாக்டர்கள் நேற்று முதல் நிறுத்தி யுள்ளனர். இதனால், ஏழை நோயா ளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தைத் தான் நிறுத்தி உள்ளோம். அந்த திட்டம் மூலம் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை இலவசமாக அளிக்கிறோம். இதனால், காப்பீட்டு பணம் வராமல் அரசு மருத்துவமனைகளில் வரு வாய் இழப்பு ஏற்படும். இதேநிலை தொடர்ந்தால் காப்பீட்டு பணம் மூலம் மருத்துவமனைக்கு வாங்கப் படும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தடைபடும்.

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், அவர்களது குடும்பத் தினர் பங்கேற்கும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட் டம் சென்னையில் 23-ம் தேதி தொடங்கப்படும். இறுதிகட்டமாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் 27-ம் தேதி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு டாக்டர்கள், குடும்பத்தினர் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும். சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் 23-ம் தேதி தொடங்கப்படும்.
7 நாள்களில் நிறைவடைகிறது அத்திவரதர் தரிசனம்

Published on : 10th August 2019 05:04 AM |



40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கனகாம்பர நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.

அத்திவரதர் பெருவிழா நிறைவுபெற இன்னும் 7 நாள்களே உள்ளதால், அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கனகாம்பர நிறப் பட்டாடை அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழாவின் 40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பெருமாள் கனகாம்பர நிறப் பட்டாடையும், நீல நிற அங்கவஸ்திரமும் அணிந்து, மகிழம்பூ மற்றும் கனகாம்பர மாலைகள் சூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்த நபர்களுக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் பெருமாள் சயனக்கோலத்திலிருந்த திருவுருவப் படங்களையும், கோயில் பிரசாதங்களையும் வழங்கினார்கள்.

சகஸ்ரநாம அர்ச்சனையும் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.

அத்திவரதரை காணவந்த பக்தர்கள் பலரும் ஆடி வெள்ளி என்பதால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனையும் தரிசிக்க வந்திருந்தனர். காமாட்சி அம்மன் திருக்கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முக்கிய பிரமுகர்கள் தரிசனம்: பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, முன்னாள் எம்.பி. தருண்விஜய், திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் ராகவேந்திரா, சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி மதுநம்பூதிரி உள்ளிட்டோர் அத்திவரதரை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தனர்.

சுவாமி தரிசனம் 8 மணி நேரம் :

அத்திவரதரை வெள்ளிக்கிழமை பொதுதரிசனப் பாதையில் சென்று தரிசனம் செய்ய அதிகபட்சம் 8 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் பலரும் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 2 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் பிரச்னைகள் ஏதுமில்லாமல் வரிசையாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர். 

3 லட்சம் பேர் தரிசனம்: 40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அத்திவரதரை சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

3 நாள்கள் விடுமுறை-பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு: அத்திவரதர் பெருவிழா அடுத்ததாக 2059-ஆம் ஆண்டு தான் நடைபெறும். அப்போது தான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் எப்படியாவது பெருமாளை தரிசித்து விட வேண்டும் என முதியோர்கள் உள்பட பலரும் ஆவலுடன் உள்ளனர்.

அத்திவரதர் தரிசனம் வரும் 16-ஆம் தேதி மாலை 4 மணியுடன் நிறைவு பெற இன்னும் 7 நாள்களே இருப்பதாலும், ஆகஸ்ட் 10, 11 சனி, ஞாயிறு விடுமுறை நாளாகவும், 12-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை நாளாக இருப்பதாலும் அத்திவரதரை தரிசிக்க வழக்கத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான போதுமான ஏற்பாடுகளையும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் முன்கூட்டியே அறிந்து செய்திட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

சிறப்பு அனுமதி ரத்து

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

ஜூலை 1 முதல் 31 வரை சயனக்கோலத்திலும், ஆக. 1 முதல் நின்ற கோலத்திலும் பெருமாள் காட்சியளித்து வருகிறார். ஆகஸ்ட் 16,17 ஆகிய இரு தேதிகளிலும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கான அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

சுவரொட்டி விளம்பரம்: ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் வெள்ளிக்கிழமை (ஆக. 9)முதல் நன்கொடையாளர்களுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு ஆகியன எதுவும் வழங்கப்பட மாட்டாது. சிறப்பு அனுமதிச்சீட்டு கேட்டு எவரும் அணுகக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது (படம்).

மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சிபாரிசுக் கடிதங்களை பெற்று வந்தவர்களுக்கு காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக அதைப்பெற வந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஆக. 9) முதல் சிறப்பு அனுமதிச்சீட்டுகள் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவில் 40-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 250 பேர் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் 250-க்கும் மேற்பட்டோரும் பேர் ஒன்று சேர்ந்து அத்தி வரதரை தரிசிக்க வந்திருந்தனர்.

இவர்கள் 500 பேரும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அருகேயுள்ள துளசி மண்டபத்துக்கு வந்த போது அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.க்கள் நாகராஜன், பெரியய்யா, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் சரவணன் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் கிழக்கு கோபுர வாசல் வழியாக அத்திவரதர் காட்சியளிக்கும் வஸந்த மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் அனைத்து மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் வந்தவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். கோயில் பட்டாச்சாரியார்கள் தீபாராதனை செய்தனர். மாற்றுத்திறனாளிகள் அத்திவரதரை தரிசனம் செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தனர்.
சித்தா படிப்பை கைவிட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம்

Added : ஆக 10, 2019 00:02

சென்னை : ''சித்தா உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர், கணேசன் கூறினார்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் முடிந்துள்ளது. சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர், கணேசன் கூறியதாவது:சித்தா உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், விரைவில் துவங்கும். அலோபதி, கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து, சித்த உள்ளிட்ட மருத்துவ படிப்புக்களுக்கான கவுன்சிலிங் துவங்கும். இந்த கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடக்கிறது.

அலோபதி மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே முறையில், சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்பை கைவிட்டாலும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 24.4 2026