Thursday, September 12, 2019

New UK Visa

New UK visa to benefit thousands of Indian students, extend stay for 2 yrs

12/09/2019 

Prasun Sonwalkar

prasun.sonwalkar@hindustantimes.com

London/New Delhi : The UK on Wednesday announced the return of the two-year post-study work visa that was popular with self-financing Indian students, reversing a 2012 decision which led to a sharp drop in Indian students coming to Britain.

Indian and other international students at approved UK educational institutes who complete an undergraduate or postgraduate degree in any subject in 2021 will be able to stay for two years and take up a job or look for work, with no restrictions on the type or level of employment.

Those who get jobs in the two-year period will be able to switch to skilled work, which is a route to settlement in the UK.

“This is great news for Indian students who are likely to benefit disproportionately from this,” Britain’s deputy high commissioner Jan Thompson said in New Delhi. She said there had been a 42% increase in visas issued to Indian students last year, while the overall number of student visas had doubled in the past three years.

The UK, Thompson said, hopes to attract 600,000 international students by 2030 and sees “India playing a strong part in that”. Britain is creating an immigration system that is open to the “best and brightest”, she said.

This visa route was scrapped by Theresa May when she was home secretary in April 2012 on the ground it was too generous, along with other measures such as closing bogus colleges.

Before its closure, Indian students with loans used the two-year period to find work and recover the expenses of studying in the UK. Scrapping the visa led to a perception the UK was less welcoming, prompting a fall in Indian students from the high of 39,090 in 2010-2011 to 16,550 in 2016-17. Tom Birtwistle, head of the British Council in north India, said the new visa had been welcomed by the UK’s higher education sector, which realised the benefits of having Indian students. It was hailed by student organisations and the Foreign Affairs Committee of Parliament. Thompson said changes to the Tier 2 skilled worker visa means there is no limit on PhD-level candidates and more of these visas are issued to India than the rest of the world combined. The announcement takes account of the realities of Brexit, including EU citizens not being able to freely take up jobs in the UK after it leaves the EU.

Universities UK chief executive Alistair Jarvis said international students bring £26 billion in economic contributions but the lack of post-study work opportunities had put the UK at a competitive disadvantage.

UGC to announce mentor institutes under ''Paramarsh'' scheme''

New Delhi, Sep 11 The University Grants Commission (UGC) will soon announce the first batch of mentor institutions under its ''Paramarsh'' scheme, an official said on Wednesday.

As part of the scheme that aims to improve the quality standards in higher education system, top institutions will mentor five non-accredited institutes to secure the National Assessment and Accreditation (NAAC) grade certification.

"The UGC has received 167 proposals from the higher educational institutions that have expressed their interest to mentor non-accredited ones to secure the NAAC grade. Apart from these, we have received applications from over 700 higher educational institutions that want to be mentored," an UGC official here told .

The proposals will now be assessed by a committee formed by the UGC and the first batch of mentors will be announced in a week.

"Once the proposals are accepted by the UGC, the institutes can start the mentoring programme," the official added.

The scheme mandates that the mentor institutions should have secured a NAAC score of 3.26 out of 4.

Under the ''Paramarsh'' scheme, leading institutions will provide regular mentoring to help colleges to get accredited by the NAAC.

The official said the UGC will also assess the performance of the institutions that have been mentored to gauge the success of the scheme.

"Assessment will be beneficial to know the extent to which the mentorship would be beneficial for the non-accredited institutes to get accredited," he said.

The official noted that since securing NAAC accreditation has been made mandatory for the open universities too, the top institutions can also mentor such universities applying for NAAC grade for the first time.

The mentor institutions can be provided financial assistance of up to Rs 30 lakh. There is also an option of appointing an expert, who can be paid a fellowship amount of Rs 31,000 per month.

The scheme aims to improve the global rankings of Indian higher educational institutions.

"The scheme will lead to enhancement of the mentee institutions'' quality and its profile as a result of improved quality of research, teaching and learning methodologies. The mentee institution will also have increased exposure and speedier adaptation to best practices," the official added.

The NAAC is an autonomous body that assesses and accredits higher education institutions in the country.

(Pragya Singh can be contacted at pragya.s@ians.in)

pgs/bc
டைம்ஸ் தரவரிசை பட்டியல்: 200 ரேங்குக்குள் இடம்பிடிக்காத இந்திய கல்வி நிறுவனங்கள்

By எம். மார்க் நெல்சன் | Published on : 12th September 2019 05:25 AM

டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அத்துடன், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) உள்பட பெரும்பாலான இந்திய கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.


சென்னை ஐஐடி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அதுபோல, 2020-ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் 7 அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களும், மூன்று பிரிட்டன் பல்கலைக்கழகங்களும் இடம்பிடித்து அசத்தியுள்ளன.

பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்: இந்திய கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, முன்னணி இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட பெரும்பாலானவை பின்னடைவைச் சந்தித்துள்ளன.

கடந்த முறை 251-300 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்று பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) இந்த ஆண்டு 301-350 இடைப்பட்ட தரவரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனுடன் ரோபர் ஐஐடி-யும் 301-350 இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த முறை 351-400 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்றிருந்து இந்தூர் ஐஐடி, இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறது.

மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி ஆகியவை 401-500 க்கு இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் 501-600 க்கு இடைப்பட்ட தரவரிசையில் மும்பை கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனம், காந்திநகர் ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி: சென்னை ஐஐடி-யைப் பொருத்தவரை கடந்த ஆண்டைப் போலவே 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்றுள்ளது. அமிர்தா விஷ்வ வித்யபீடம், கான்பூர் ஐஐடி, ஐஐடி குவாஹாட்டி, ஐஐடி புவனேஸ்வர், ஐஐடி ஹைதராபாத், புணே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவையும் 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பிடித்துள்ளன.

பட்டியலில் இடம்பிடித்த அண்ணா பல்கலைக்கழகம்: கடந்த ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்காத சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இம்முறை இடம்பிடித்துள்ளது. பட்டியலில் 1000-ஆவது தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்திருக்கிறது.
மேலும் திருச்சி என்ஐடி, வேலூர் விஐடி, கோவை வேளாண் பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டு டைம்ஸ் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கின்றன.
தஞ்சாவூர் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

By DIN | Published on : 12th September 2019 02:52 AM


தஞ்சாவூர்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புக் குழு செயலாளர் ஜி.அரவிந்த் குமார் தாக்கல் செய்த மனு: 

தஞ்சாவூர்-நாகப்பட்டினம் இடையே தற்போது உள்ள சாலை பழுதடைந்து மோசமான சூழலில் உள்ளது. 

இந்த தேசிய நெடுஞ்சாலை 67-ஐ சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.601 கோடி செலவில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனியாருக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது. ஆனால், இந்தப் பணிகள் பல மாதங்களாக முடங்கியுள்ளது. 

இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை விரிவுப்படுத்தப்பட்டு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தால் பயண நேரம் வெகுவாக குறையும். 

மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். எனவே, இந்த சாலை சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் பல மாதங்களாக முடங்கி கிடக்கிறது. மணல் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு என பல்வேறு காரணங்களை மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. 

இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியவில்லை. எனவே, இந்தப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. 

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பணிகளை விரைவாக முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரர் அனுப்பிய கோரிக்கையை ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்த நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கூண்டுக்குள் சிக்காத சட்ட மேதை!

By எஸ்.குருமூர்த்தி | Published on : 12th September 2019 03:19 AM 

குரைக்கும் நாய்களுக்கெல்லாம் நான் பதில் செல்ல வேண்டியதில்லைபிரபல வழக்குரைஞர் ராம் ஜேத்மலானியை மோசமாக விமர்சித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்ன வார்த்தைகள் இவை. 1987-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உள்ளிட்ட அனைத்து முக்கிய பத்திரிகைகளிலும் இது வெளியானது. 

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வீடன் நாட்டு வானொலி தெரிவித்த செய்தியின் பின்னணியில்தான் ராஜீவ் காந்தி மேற்கண்டவாறு விமர்சித்திருந்தார். இந்தச் செய்தி விஷமத்தனமானது மட்டுமல்ல, அதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தார். தமது புகழைக் குறைக்கவும், தமது அரசை நிலைகுலையச் செய்யவும் வெளியிடப்பட்டுள்ள செய்தி என்றும் கருத்துக் கூறியிருந்தார்.

அந்தக் காலத்தில் அதிகார பலம் வாய்ந்த ராஜீவ் காந்தி அரசின் ஊழல்களை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. அதைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் நிறுவனம் மீது அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அரசைக் கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
போஃபர்ஸ் ஊழல் புகார்களை ராஜீவ் காந்தி மறுத்ததை அடுத்து, நீங்கள் உண்மையிலேயே நேர்மையானவர் என்றால், இந்த ஊழலில் எங்களுக்குத் தொடர்பில்லை, இது பற்றி முழுவிசாரணை நடத்தி யாருக்காவது இதில் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறுவதுதானே என்று ஜேத்மலானி கேட்டார். ஜேத்மலானியின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்று ஒரு எம்.பி., ராஜீவிடம் துருவித் துருவிக் கேட்டபோது அவர் தெரிவித்த காட்டமான வார்த்தைகள்தான் மேற்கூறப்பட்டவை.
1987-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி நானும், ராம்நாத்ஜியும் காலை நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு கரோல் பாக் ஹனுமன் கோயிலுக்குச் சென்றுவிட்டு நேராக ராம் ஜேத்மலானி வீட்டுக்குச் சென்றோம். ராமநாத்ஜி ஜேத்மலானியிடம், ராம் இன்று பத்திரிகையை படித்தீர்களா? பிரதமர் ராஜீவ் உங்களை குரைக்கும் நாய் என்று விமர்சித்திருக்கிறாரே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டபோது, அது தொடர்பான கடிதத்தைத்தான் தயார் செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, கடிதத்தின் முதல் வரியையும் படித்துக் காட்டினார். பிரதமர் அவர்களே! நீங்கள் அதிர்ஷ்டக்காரர். நான் குரைக்கும் நாய்தான். ரத்த வெறி பிடித்த வேட்டை நாயல்ல. ஆனால், ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடனைக் கண்டால்தான் நாய் குரைக்கும். நான் இன்று முதல் அடுத்த 30 நாள்களுக்கு உங்களிடம் தினமும் 10 கேள்விகள் எழுப்பப் போகிறேன். ஒன்று, அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்; அல்லது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் ஜேத்மலானி. ராஜீவுக்கு எதிராக அவர் போர் தொடுக்கத் தொடங்கிவிட்டதைக் கண்டு நாங்கள் ஆச்சர்யம் அடைந்தோம். 

அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், திருடனைப் பார்த்து நாய் குரைக்கத் தொடங்கி விட்டது - சொல்கிறார் ஜேத்மலானி என்று தலைப்பிட்டு செய்தி வெளியானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வெளியிட்ட அந்தக் கேள்விகள் அனைத்துப் பிராந்திய மொழி பத்திரிகைகளிலும் வெளியாயின.

அரசியலில் தூய்மையானவர் என்று எல்லோராலும் கருதப்பட்ட ராஜீவ் காந்தி, ஜேத்மலானியின் கேள்விக்கணைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடியபோது, ராஜீவின் நேர்மை மீது மக்களுக்குச் சந்தேகம் எழும் வகையில் அவரது அரசின் ஊழல்களை தோலுரித்துக் காட்டினார்.

1975-இல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே ராம் ஜேத்மலானிக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு எதிராக இந்திரா காந்தி பதிவு செய்த பல வழக்குகளில் ஜேத்மலானிதான் ஆஜராகி வாதிட்டார். பிகார் இயக்கத்துக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணனும், நானாஜி தேஷ்முக்கும் தலைமை வகித்தபோது அதற்கு ராம்நாத்ஜி ஆதரவாக இருந்தார். அப்போது அவர்கள் அரசை சீர்குலைக்க முயல்வதாக இந்திரா காந்தி குற்றஞ்சாட்டியதுடன் நெருக்கடி நிலையை அறிவித்தார். ராம்நாத் கோயங்கா இந்தியாவில் இருந்தபடியும், ராம் ஜேத்மலானி வெளிநாட்டில் இருந்தபடியும் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி வந்தனர்.

1980-களில் அம்பானி குழுமம், பிரபலமான எல் அண்ட் டி நிறுவனத்தை கபளீகரம் செய்ய முயன்றபோது எக்ஸ்பிரஸ் பக்கம் நின்று அம்பானியின் முயற்சியை தடுத்து நிறுத்தினார். இதைத் தொடர்ந்து அப்போதைய குடியரசுத் தலைவர் ஜைல் சிங், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தின் நகலை எக்ஸ்பிரஸ் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் ரகசிய காப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக என் மீதும், கோயங்கா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் ராஜீவுக்கு ஜைல் சிங் எழுதிய கடிதங்கள் போலியானவை என்பதை தோலுரித்துக் காட்டியதை அடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை அரசு கைவிட்டது.

ராஜீவ் ஆட்சியில் சிபிஐ அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பலமுறை சோதனை நடத்தியும் 300-க்கும் மேலான வழக்குகளை போட்டபோதிலும் ராம் ஜேத்மலானியும், ராம்நாத் கோயங்காவும் கொஞ்சம்கூட அசரவில்லை. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவே தெரிவித்தனர்.
ஒரு சிறந்த வழக்குரைஞரான ராம்ஜேத் மலானி எதற்கும் அஞ்சாதவர். எந்தச் சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்ட கடைசிவரை தனது தரப்பினருக்காக வாதாடுபவர். இந்திரா காந்தி கொலையாளிகள் தரப்புக்காக அவர் வாதாட முன்வந்தபோது அவருக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்தன. அந்த காரணத்துக்காகவே அவர் பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
அவரது வாதத் திறமையால் குற்றவாளிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டபோது அவரைப் பலரும் பாராட்டினர். பா.ஜ.க.வும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டது. ஒரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று தெரியவந்தால், நீதியை நிலைநாட்ட அவருக்கு ஆதரவாக வாதாடுவதில் தவறில்லை என்பது அவரது கருத்து. இதே போன்று, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக அவர் ஆஜராக முன்வந்தபோது அவரின் செயல்மீது யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது.

மனு சர்மா என்பவர் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவருக்காக ஜேத்மலானி வாதாடினார். இதை அவரது நண்பர்களே விரும்பவில்லை. ஆனாலும் அவர் தொழில் தர்மத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
அரசியலில் ஊழலை எதிர்க்கிறீர்கள். ஆனால், நீதிமன்றத்தில் ஊழல்பேர்வழிகளுக்கு ஆதரவாக ஆஜராகிறீர்கள். அது எப்படி என்று கேட்டபோது, ஊழல் செய்து சட்டவிரோதமாக பணம் சேர்த்தவர்களில் பலர் காங்கிரஸ்காரர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கூட்டாளிகளாக இருப்பார்கள். பணக்காரர்களிடம் அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்காக வாதாடுவது எனது தொழில். அதே நேரத்தில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது எனது கொள்கை என்று பதில் சொன்னார் ராம் ஜேத்மலானி.

ராம்நாத்ஜிக்காக பல வழக்குகளில் அவர் வாதாடியபோதும் அதற்காக அவர் கட்டணம் ஏதும் வாங்கிக்கொள்ளவில்லை. ராம்நாத்ஜி அவரிடம் ஒரு முறை வழக்குக்காக உங்களை (ஜேத்மலானி) நாடி வருபவர்களிடம் கட்டணத்தை எப்படி நிர்ணயிக்கிறீர்கள் என்று கேட்டபோது, அது எனது வாடிக்கையாளரின் பர்ஸ் கனமாக இருப்பதையும், அவரது பிரச்னைகளையும் பொருத்தது என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
வழக்குரைஞர் என்ற வகையில் அவர் சட்ட அறிவு நிறைந்தவர். அவரது ஞாபக சக்தியும் அலாதியானது. வழக்கின் தன்மையை அறிந்துகொண்டு, அதிலுள்ள சட்ட நுணுக்கங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு தன் கட்சிக்காரருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறானது என்று நிரூபித்து அவரை விடுவிப்பது அவருக்கே கைவந்த கலை.

ஜனநாயகவாதியான ஜேத்மலானி, சர்வாதிகாரம் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல்கொடுக்கத் தயங்கியதில்லை. 2013-ஆம் ஆண்டு, கட்சி மேலிடத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதற்காக அவர் பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், எதற்கும் அசராத ஜேத்மலானி, தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது சட்ட விரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறி வழக்கு தொடுத்தார். இறுதியில் அவரது இடைநீக்கத்தை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டியதாயிற்று.
போலித்தனம் என்பது அவரது அகராதியில் இல்லை. தனக்கு மனதில் பட்டதை செயல்படுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. வாழ்க்கையில் தனக்கென சில நியதிகளை வகுத்துக்கொண்டு அதை இம்மியும் பிசகாமல் கடைப்பிடித்து வந்தார். அவர் சாதாரண மனிதர் அல்லர், உன்னதமானவர். சட்டம் மற்றும் அரசியல் உலகில் அவரைப் போன்ற ஒருவரை இனி காண்பது அரிது.

கட்டுரையாளர்:
ஆசிரியர், துக்ளக்
எம்.பி.பி.எஸ்., 'சீட்' மோசடி

Added : செப் 12, 2019 00:50

மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி உத்தரவு தயாரித்துக்கொடுத்த கும்பல் குறித்து விசாரணை நடக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த மாணவர் ரியாஸ். நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் வனிதாவை சந்தித்தார். தனக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்திருப்பதாக சான்றிதழை காட்டினார். அதை ஆய்வு செய்த போது போலியானது என தெரிந்தது. ரியாசிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர். அவரை தொடர்புகொண்ட மோசடி நபர் ஒருவர் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். மதுரை கல்லுாரியில் இடம் கிடைத்திருப்பதாக சான்றிதழையும் அனுப்பியுள்ளார்.

அதை 'உண்மை' என நம்பி கல்லுாரியில் சேர வந்தபோது தான் போலி என ரியாசுக்கு தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்த மோசடி பின்னணியில் கும்பல் ஒன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் போட்டா போட்டி

Added : செப் 12, 2019 01:05

கோவை : கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த, 147 பேரின்விபரங்கள், பல்கலை இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டன.பாரதியார் பல்கலை துணைவேந்தர் பணியிடம், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது.

பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குனர் உட்பட அனைத்து முக்கிய பணியிடங்களும், பொறுப்பு பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால், நிர்வாக முடிவுகள் மேற்கொள்வதில், சிக்கல்கள் உள்ளன.நீண்ட இழுபறிக்கு பின், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் பெறும் பணி, கடந்த மாதம் துவங்கியது. செப்., 9ல், விண்ணப்ப செயல்பாடுகள் நிறைவு பெற்றன. விண்ணப்பித்தவர்கள் பட்டியல், நேற்று வெளியானது. பாரதியார் பல்கலையில், தற்போது பொறுப்பில் உள்ளவர்கள், முன்னாள் பொறுப்பாளர்கள், 20க்கும் மேற்பட்டோர், இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேடல் குழு உறுப்பினர், சுப்பிரமணியம்கூறியதாவது:துணைவேந்தர் பதவிக்கு, 147 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விபரங்களை, பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து, சான்றிதழ்கள், கொடுக்கப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம். நல்ல மனிதராகவும், நல்ல கல்வியாளராகவும் உள்ள ஒருவரை, வெளிப்படையான முறையில், விரைவில் தேர்வுசெய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...