Thursday, September 12, 2019

எம்.பி.பி.எஸ்., 'சீட்' மோசடி

Added : செப் 12, 2019 00:50

மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி உத்தரவு தயாரித்துக்கொடுத்த கும்பல் குறித்து விசாரணை நடக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த மாணவர் ரியாஸ். நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் வனிதாவை சந்தித்தார். தனக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்திருப்பதாக சான்றிதழை காட்டினார். அதை ஆய்வு செய்த போது போலியானது என தெரிந்தது. ரியாசிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர். அவரை தொடர்புகொண்ட மோசடி நபர் ஒருவர் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். மதுரை கல்லுாரியில் இடம் கிடைத்திருப்பதாக சான்றிதழையும் அனுப்பியுள்ளார்.

அதை 'உண்மை' என நம்பி கல்லுாரியில் சேர வந்தபோது தான் போலி என ரியாசுக்கு தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்த மோசடி பின்னணியில் கும்பல் ஒன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026