Tuesday, September 24, 2019

இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்துவதாகப் புகார்: தொடங்கியது விஜய் படத்துக்கு எதிரான முதல் போராட்டம்!

By எழில் | Published on : 23rd September 2019 04:58 PM |



ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் பிகில் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சி தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கோயம்புத்தூர் கறிக்கடை உரிமையாளர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளார்கள். இறைச்சி வெட்டும் கட்டை மீது செருப்புக் காலை வைத்து விஜய் அமர்ந்திருக்கும் காட்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியானது. இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கோபால், இந்த விவகாரம் குறித்துக் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள இறைச்சி வியாபாரிகள் அதிகாலையில் தொட்டு வணங்கி தொழில் செய்யும் கறி வெட்டும் கட்டை மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளையும் அவமரியாதை செய்துவிட்டார்கள். அந்த போஸ்டர் வெளியான சில நாள்களில் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், இயக்குநர் அட்லி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த போஸ்டரை நியாயப்படுத்தி ஏஜிஎஸ் நிறுவனம் மட்டும் பதில் அளித்தது என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் பிகில் படமும் தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...