Sunday, September 29, 2019

முத்திரை இல்லாத, 'செக்' ஓய்வு பெற்றோர் பரிதவிப்பு

Added : செப் 28, 2019 19:17


சேலம்: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கிய காசோலைகளில், 'ஹோலோகிராம்' முத்திரை இல்லாததால், வங்கிகள் திருப்பி அனுப்புகின்றன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, 2018 ஏப்ரல் முதல், 2019 மார்ச் வரை, ஓய்வு பெற்ற, 6,283 தொழிலாளர்களின் பண பலன்களுக்காக, 1,093 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.
இத்தொகையை, கோட்ட வாரியாக, விழா நடத்தி, அமைச்சர்கள் வழங்கி வருகின்றனர்.கடந்த, 22ல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த,
ஓய்வு பெற்ற, 610 தொழிலாளர்களுக்கு, சேலம் கோட்ட, தலைமை அலுவலகத்தில், 123.63 கோடி ரூபாய் காசோலைகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
வழங்கினார்.ஆனால், காசோலைகளில், 'ஹோலோகிராம்' எனும் முத்திரை இல்லை. இதனால், அதை வங்கியில் ஏற்காமல், திருப்பி அனுப்பினர். சேலம் மட்டுமின்றி, பிற கோட்டங்களிலும், இதே நிலை ஏற்பட்டதால், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'பழைய முறையில், காசோலை வழங்கியதால், வங்கி அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். எனவே, நேரடியாக, வங்கி கணக்கில் செலுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...