Friday, September 27, 2019

துப்புரவு பணிக்கு ஆள் எடுப்பு இன்ஜி., பட்டதாரிகள் பங்கேற்பு

Added : செப் 26, 2019 23:46

சென்னை : சட்டசபை வளாகத்தில் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பொறியியல் பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் வந்திருந்தனர்.சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் பணிக்கு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன; 4607 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்.மேலும் எம்.டெக். - எம்.சி.ஏ. - எம்.காம். என பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பித்தனர். வந்த விண்ணப்பங்களில் 677 நிராகரிக்கப்பட்டன; 3930 ஏற்கப்பட்டன.தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி சட்டசபை வளாகத்தில் இரு நாட்களாக நடந்து வருகிறது. தினமும் 100 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இளம்பெண்களும் உண்டு.சபாநாயகர் தனபால் சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் துணை செயலர்கள் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியதாவது:இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகின்றனர். அதுவும் நிரந்தரம் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய வேண்டி உள்ளது.துப்புரவு பணி என்றாலும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும்; பணியும் நிரந்தரம். இப்பணி கிடைத்தால் இதிலிருந்தபடியே வேறு பணிக்கு செல்லலாம் என்பதால் விண்ணப்பித்தேன். சான்றிதழ்களை சரிபார்த்த அதிகாரிகள் 'தேர்வு செய்யப்பட்டால் கடிதம் வரும்' என தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...