Thursday, September 12, 2019

துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் போட்டா போட்டி

Added : செப் 12, 2019 01:05

கோவை : கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த, 147 பேரின்விபரங்கள், பல்கலை இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டன.பாரதியார் பல்கலை துணைவேந்தர் பணியிடம், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது.

பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குனர் உட்பட அனைத்து முக்கிய பணியிடங்களும், பொறுப்பு பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால், நிர்வாக முடிவுகள் மேற்கொள்வதில், சிக்கல்கள் உள்ளன.நீண்ட இழுபறிக்கு பின், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் பெறும் பணி, கடந்த மாதம் துவங்கியது. செப்., 9ல், விண்ணப்ப செயல்பாடுகள் நிறைவு பெற்றன. விண்ணப்பித்தவர்கள் பட்டியல், நேற்று வெளியானது. பாரதியார் பல்கலையில், தற்போது பொறுப்பில் உள்ளவர்கள், முன்னாள் பொறுப்பாளர்கள், 20க்கும் மேற்பட்டோர், இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேடல் குழு உறுப்பினர், சுப்பிரமணியம்கூறியதாவது:துணைவேந்தர் பதவிக்கு, 147 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விபரங்களை, பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து, சான்றிதழ்கள், கொடுக்கப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம். நல்ல மனிதராகவும், நல்ல கல்வியாளராகவும் உள்ள ஒருவரை, வெளிப்படையான முறையில், விரைவில் தேர்வுசெய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026