Sunday, October 27, 2019

Happy Diwali: City cops mug 3 men on Marina, pocket ₹10,000
A Selvaraj @timesgroup.com

Chennai:27.10.2019

An assistant commissioner of police has been asked to conduct a detailed inquiry after a government employee lodged a complaint saying he and two of his friends were assaulted and robbed by three police personnel on the Marina beach on Thursday.

In his complaint, Uthama Raja, who works at the Government Connemara Library in Egmore, said he was chatting with his friends on the beach around 9.30pm when three policemen arrived. “They abused us and asked us to leave,” Uthama Raja said.

Then, the complaint said, they threatened, assaulted and robbed the three of ₹10,000. He also named the police personnel in his complainant. He then went to Government Royapettah Hospital for treatment for the injuries suffered on the face before lodging a complaint.

A senior police officer later denied the charge and said no assault had occurred.

“The complainant was drinking along with two of his friends when a police patrol team approached them and asked them to stop consuming alcohol and to leave the place. This led to an argument.” The complainant did not mention the fact that he was consuming alcohol when the law enforcers arrived, another police officer said.

A senior officer said, “The alleged quarrel shall be verified and Uthama Raja and his friends will be questioned.”



LEGALLY YOURS: An assistant commissioner of police has been asked to conduct a probe

Saturday, October 26, 2019

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா அக்.28-ல் தொடக்கம்: நவம்பர் 2-ல் நடைபெறும் சூரசம்ஹாரத்துக்கு ஏற்பாடுகள் 

தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக வெளி பிரகாரத்தில் தற்காலிக கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (அக்.28) தொடங் குகிறது. நவம்பர் 2-ம் தேதி சூரம்சம்ஹாரம் நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா வருகிற 28-ம் தேதி தொடங்குகிறது.

அன்று அதிகாலை 1.30 மணிக்குவிஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 5.30மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள, 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி சண்முகவிலாசம் சேர, அங்கு தீபாராதனை நடைபெறும்.

மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி, தங்க ரதத்தில் உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும். 5-ம் நாள் திருவிழாவான நவம்பர் 1-ம் தேதி வரை இந்நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.

கடற்கரையில் சூரசம்ஹாரம்

நவம்பர் 2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருள்வார். அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.

பின்னர், சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன் சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பிறகு, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் வழங்கப்படும்.

திருக்கல்யாணம்

நவ.3-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு செல்வார். மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.

ஏற்பாடுகள் தீவிரம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக திருச்செந்தூரில் 9 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கோயில் கிரி பிரகாரத்தில் இரும்பு தூண்கள் மற்றும் தகர சீட்டுகளால் ஆன தற்காலிக கூரைஅமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தீபாவளி பண்டிகையின்போது குடிநீர் வரவில்லை என்று புகார் வந்தால் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் எச்சரிக்கை



சென்னை

தீபாவளி பண்டிகையின்போது, குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்தால் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 9 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 347 பேரூராட்சிகள் மற்றும் 48 ஆயிரத்து 948 கிராம குடியிருப்புகளைச் சேர்ந்த 4 கோடியே 23 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,சென்னை மாநகரம் தவிர இதர பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 1,920 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகித்து வருகிறது.

தற்போதைய வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் தொடர்ச்சியான விழாக்காலங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டும், திட்டங்களை சிறப்பாக ஆய்வு செய்யும் பொருட்டும் 207 பிரிவுகளாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டு, குடிநீர் திட்டங்களின் பராமரிப்பு மேலாண்மை செய்யப்படுகிறது.

தற்போதைய விழாக்காலத்தை கருத்தில் கொண்டு பராமரிப்பில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்துதரமான, சீரான குடிநீர் குறித்த நேரத்தில் வழங்க அனைத்து பராமரிப்பு பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் முன் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் சென்றடைவதை உறுதி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணியில் குந்தகம்ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குடிநீர் வழங்குவதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனடியாக அந்தந்த மாவட்டத்தில்உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்களை அணுக வேண்டும். தலைமை அலுவலகத்தில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் 94458 02145 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செயலிகள்...அவசியத்துக்கு மட்டும்!

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 25th October 2019 01:51 AM 

கடந்த 20-ஆம் நூற்றாண்டில் தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவை மனித வாழ்வின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன. இவை அனைத்தின் பயன்பாடுகளையும் ஒருங்கே தன்னிடத்தில் கொண்ட கையடக்கக் கருவியாக செல்லிடப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.

தொடக்கத்தில், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியதாக செல்லிடப்பேசிகள் இருந்தன; நாளடைவில் அவை அறிதிறன் பேசியாக (ஸ்மார்ட் ஃபோன்) உருமாறி இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றன.

நிழற்படம், காணொலி ஆகியவற்றை செல்லிடப்பேசி மூலமாகவே எடுத்து அவற்றை முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) முதலியவற்றில் பதிவேற்றும் வசதியும் கிடைத்தது. இவ்விதம், மனிதர்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுக்குப் பலவிதங்களிலும் உதவக்கூடிய சாதனமாகிய செல்லிடப்பேசி, பல சமூகச் சிக்கல்களுக்கும் காரணமாக அமைகிறது.

குறிப்பாக, அறிவை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்த வேண்டிய செல்லிடப்பேசியை இன்றைய இளைஞர்கள் பலரும் வாழ்க்கையை வீணடிக்கும் பொழுதுபோக்காகப் பயன்படுத்துவது மிகப் பெரிய சோகம். அதிலும், அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) மூலம் பொழுதுபோக்குச் செயலிகளை பதிவிறக்கம் செய்து காணொலி விளையாட்டுகளில் நீண்ட நேரம் ஈடுபட்டுத் தங்களின் பொன்னான நேரத்தை பெரும்பாலோர் வீணடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீலத்திமிங்கிலம் என்ற காணொலி விளையாட்டு, இளைஞர்கள் பலரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதை நாம் இன்னும் மறக்கவில்லை. இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தரவயதினரும் கூட ரம்மி எனப்படும் சீட்டு விளையாட்டை விளையாடிப் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்கின்றனர்.

பப்ஜி எனப்படும் காணொலி விளையாட்டு, அதில் ஈடுபடுபவர்களுக்குக் கொலைவெறியைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. ஏதோ ஒருவிதத்தில் பிறரது பாராட்டைப் பெற வேண்டும் என்றோ, கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றோ கைப்படம் (செல்ஃபி) அல்லது காணொலி எடுத்துப் பதிவிடுவது ஒரு மன நோயாகவே ஆகிவிட்டிருக்கிறது.
இளம் பெண்கள், விதவிதமான உடையணிந்து கொண்டு தங்களைத் தாங்களே கைப்படம் எடுத்து அவற்றைப் பொதுவெளியில் பதிவேற்றி, அதனைப் பிறர் பாராட்டும்போது மகிழ்ச்சி கொள்கின்றனர். அதே சமயம், அந்தப் புகைப்படங்களும் காணொலிகளும் அவர்களது முகநூல் நண்பர்கள் தவிர வேறு பலரும் பார்க்கக் கூடும் என்பதால், பல்வேறுவிதமான சங்கடங்களுக்கும் உள்ளாகின்றனர்.
இவை தவிர மலைமுகடுகள், ஆற்றுப்பாலங்கள் போன்ற ஆபத்தான இடங்களில் இருந்தபடி கைப்படம் எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் உயிரையே இழக்கின்றனர். மிருகக் காட்சி சாலைகள், காப்புக் காடுகள் முதலியவற்றில் காட்டு விலங்குகளுக்கு அருகில் சென்று கைப்படம் எடுத்துப் பதிவிடுவதற்கும் பலர் தயங்குவதில்லை. 

இவற்றையெல்லாம் மிஞ்சும்படியாக, டிக்டாக் என்றொரு செயலி தற்போது உலா வந்துகொண்டிருக்கிறது. ஆடல், பாடல், பலகுரல் ( மிமிக்ரி ) மற்றும் நடிப்பு போன்றவற்றில் தத்தமது திறமைகளை வெளிக்காட்டுகின்ற குறுகிய காணொலிகளை இந்தச் செயலி மூலம் பொதுவெளியில் பதிவிட்டுப் பலரது பாராட்டையும் பெறலாம் என்பதற்காக, இந்தச் செயலியைப் பலரும் தங்களது செல்லிடப்பேசியில் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த ஆர்வமே சமூகச் சீர்கேடுகள் மற்றும் உயிரிழப்புகளுக்குத் தற்போது காரணமாகி வருவதை ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன.
இது மட்டுமின்றி, காட்டாறுகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் நீராடியபடி டிக்டாக் காணொலி எடுக்கும் மோகத்தில் உயிரை விடுவதும் ஆங்காங்கே நடைபெறுகிறது. டிக்டாக்கில் தாம் வெளியிட்ட காணொலிக்கு எதிரான விமர்சனங்களால் மனமுடைந்து சென்னை வியாசர்பாடியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இப்படியாக, வெறும் பொழுதுபோக்குக்காக செல்லிடப்பேசியில் பயன்படுத்தப்பட வேண்டிய இந்த டிக்டாக் செயலி பற்பல உயிரிழப்புகளுக்கும் சமூகச் சீர்கேடுகளுக்கும் காரணமாகி வருகிறது. எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் முறை தவறிய பயன்பாட்டுக்கு அப்பாற்பட்டதல்ல. அதனை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். வேறு விதமாகவும் பயன்படுத்தலாம்.

செல்லிடப்பேசியும் இதற்கு விதிவிலக்கல்ல. விரைவான தகவல் தொடர்புக்கும், அறிவுப் பகிர்வுக்கும் மட்டுமே பயன்பட வேண்டிய செல்லிடப்பேசியை, பொழுதுபோக்குவதற்காகப் பயன்படுத்துவதுகூடப் பரவாயில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், சமுதாய வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
குடும்ப வாழ்வின் சீரழிவுக்கும் இளம் வயது மரணங்களுக்கும் செல்லிடப்பேசிச் செயலிகள் காரணமாவதை சமூக அக்கறையுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. செல்லிடப்பேசியின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் பிரவேசித்துள்ளோம். இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்த தலைமுறையினர் முறையற்ற செல்லிடப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகாமல் இருப்பது முக்கியம். 

மேலும், வேண்டாத செயலிகளிலும், காணொலி விளையாட்டுகளிலும் தங்களின் பொன்னான நேரத்தை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவது மிகமிக முக்கியம். தேவையற்ற செயலிகளை அரசாங்கம் தடை செய்யும் என்று காத்துக் கொண்டிருக்காமல், தாங்களாகவே புறக்கணித்திட சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் முன்வரவேண்டும். தேவையற்ற செயலிகள் இல்லாமல் வாழ்வது ஒன்றும் கடினம் அல்ல.

விஜய் - அட்லியின் ‘பிகில்’: திரை விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 25th October 2019 06:01 PM



‘பொம்பளைன்னா... அடக்கமா இருக்கணும்..’ ‘அட்ரா.. அவள.. வெட்ரா அவள’ என்று ஆணாதிக்க அடாவடித்தனத்தோடு பேசிக் கொண்டிருந்த தமிழ் சினிமா சமீப காலங்களில் பெண்களின் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக சிறப்பான முறையில் தடம் மாற ஆரம்பித்திருக்கிறது. இது ஒருவகையில் காலத்தின் கட்டாயம். என்றாலும் இந்த மாற்றத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் உறுதுணையாக நிற்கத் துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்களின் ஆதாரமான உரிமைகளைப் பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ அஜித்தைத் தொடர்ந்து பெண்கள் பல துறைகளிலும் சாதிக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி ‘பிகிலின்’ மூலம் பேசியிருக்கும் விஜய்யும் பாராட்டத்தக்கவர். இதற்கான பாராட்டு, சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்குத்தான் போய் சேர வேண்டும் என்றாலும் தமிழின் முன்னணி நாயகர்கள் இந்த மாதிரியான உள்ளடக்கத்திற்கு ஆதரவாக நிற்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

தமிழ் சினிமா வழக்கப்படி ‘நல்ல’ ரெளடியாக இருப்பவர் ராயப்பன் (தந்தை விஜய்). நல்லது செய்வதற்காக தான் கத்தியைத் தூக்கினாலும் தன் சேரி மக்கள் வன்முறைப் பாதையிலிருந்து விலகி நேர்வழியில் நடக்கவேண்டும் என்று விரும்புபவர். கால்பந்து விளையாட்டு இதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று நம்புபவர்.

அவரது மகனான மைக்கேல் (இளைய விஜய்) கால்பந்து விளையாட்டில் பிரகாசிப்பதால் அவனைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார். அவனின் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஊரின் பல இளைஞர்கள் இந்த விளையாட்டின் மூலம் முன்னேற முடியும் என்று கருதுகிறார்.

ஆனால் ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலை காரணமாக ராயப்பனின் இடத்திற்கு மைக்கேல் வர வேண்டியிருக்கிறது. எனவே தன் கால்பந்துக் கனவுகளை நண்பனின் (கதிர்) மூலமாக நிறைவேற்ற பின்னால் நின்று உதவுகிறார் மைக்கேல். ஒரு கட்டத்தில் பெண்கள் அணியை வழிநடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம் மைக்கேலுக்கு உருவாகிறது.

தேசிய அளவில் நிகழும் கால்பந்துப் போட்டி அது. பல தடைகளைத் தாண்டி தன் நோக்கத்தில் மைக்கேல் வெற்றி பெற்றாரா என்பதைப் பரபரப்பும் விறுவிறுப்புமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

அட்லி + விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லிக்கு ஒரு வெகுஜனப் பார்வையாளனையும் முன்னணி நடிகரின் ரசிகனையும் எப்படி உற்சாகப்படுத்துவது, உணர்ச்சிவசப்பட வைப்பது, திருப்திப்படுத்துவது போன்ற விஷயங்கள் நன்குத் தெரிந்திருக்கின்றன. ‘பிகிலும்’ இதற்கு விதிவிலக்கில்லை.

தந்தை - மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். சிறிது நேரமே வந்தாலும் ராயப்பன் கதாபாத்திரம் கவர்கிறது. என்னதான் நரைமுடி, காண்டாக்ட் லென்ஸ் போட்டு முயற்சித்திருந்தாலும் தோற்றப் பொருத்தம் சிறப்பாக அமையவில்லை. மைக்கேல் ஆக நடித்திருக்கும் மகன், வழக்கமான விஜய் என்ன செய்வாரோ அதையெல்லாமே செய்து தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார். சில காட்சிகளில் தன்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு பெண்களுக்கு இடம் தந்திருப்பது சிறப்பு.

நாயகியாக நயன்தாரா. ‘அறம்’ போன்ற முதிர்ச்சியான படங்களில் நடித்துவிட்டு சராசரி நடிகையின் பாத்திரத்திற்கு இவர் திரும்பாமல் இருப்பது நலம். மேலும் வழக்கமான இளம் நாயகி போல் இவர் சிணுங்குவது, அலப்பறை செய்வது போன்றவையெல்லாம் ஒட்டவேயில்லை.

யோகி பாபு, விவேக் என்று இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படத்தில் நகைச்சுவையே இல்லை. இந்தப் படத்திற்கு ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர் எதற்கு என்றே தெரியவில்லை. கதிர் தன்னுடைய பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார். டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி போன்ற பல துணை நட்சத்திரங்கள் இருந்தாலும் எவரும் நினைவில் நிற்கவில்லை.

கால்பந்தை மையப்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தில், முன்னாள் கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயனை, சில காட்சிகளில் வந்து செல்லும் வில்லனாக உபயோகித்திருப்பதை அவல நகைச்சுவை என்றே சொல்லவேண்டும்.

கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா உள்ளிட்ட சில பெண்கள் நடித்திருந்தாலும் எவரும் கவரும்படி சித்தரிக்கப்படவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகிய இரு பெண்களின் பாத்திரங்கள் கவனிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா, ‘ஆண்டாளம்மாளாக’ ரசிக்க வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘வெறித்தனம்’, ‘சிங்கப்பெண்ணே’ ஆகிய இரண்டு பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன. ஆங்காங்கே வரும் சிறுசிறு பாடல்களும் அழகு. தந்தை விஜய் எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளும்போது காட்சியின் பரபரப்பிற்கு முரணாக மெலிதாக ஒலிக்கும் சாக்ஸ் இசை அத்தனை அழகு. பின்னணி இசை அட்டகாசமாக இருந்திருக்கிறதே ஒழிய தனித்துவமாக இல்லை.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவைச் சொல்லலாம். சண்டைக் காட்சிகள், கால்பந்து போட்டிக் காட்சிகள் என்று பல ஃபிரேம்களில் இவரது அசாதாரண உழைப்பு தெரிகிறது.

இந்தப் படத்தின் பிரச்னைகளுள் ஒன்று, இதன் நீளம். ஏறத்தாழ மூன்று மணி நேரம் என்கிற அளவிற்கு திரைக்கதை அடர்த்தியாக இல்லை. தேவையில்லாத காட்சிகளைக் குறைத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்.



வெற்றியடைந்த திரைப்படங்களின் கதை, திரைக்கதையை ஆங்காங்கே கலவையாக உருவுபவர் என்கிற புகார் அட்லியின் மீது தொடர்ந்து வைக்கப்படுகிறது. இது ஏறத்தாழ பெரும்பாலான இயக்குநர்களின் மீது சொல்லப்படும் குறை என்றாலும் சிலரின் திரைக்கதைகளில் வெளிப்படையாக பல்லிளிக்கிறது. அட்லியின் இந்தத் திரைப்படமும் கமலின் ‘நாயகன்’, ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’ போன்ற திரைப்படங்களை மிக அழுத்தமாக நினைவுப்படுத்துகிறது.

இத்திரைப்படத்தின் மையமே பெண்கள் விளையாடும் கால்பந்து விளையாட்டுதான். ஆனால் அவை தொடர்பான காட்சிகளில் நுணுக்கங்களோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ போதுமான அழுத்தமோ இல்லாமல் மொண்ணைத்தனமாக அமைந்திருக்கிறது. பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்று மட்டுமே இயக்குநர் நினைத்து விட்டார் போலிருக்கிறது.

அணியின் ஒருங்கிணைப்பும் கூட்டுத்திறமையும்தான் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்கிற விஷயம் ‘சக்தே இந்தியா’வில் ஒரு காட்சியில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அநாவசியத் திணிப்புகள் இல்லாமல் படத்தின் மையமான விளையாட்டுக் காட்சிகள் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ‘பிகிலில்’ இந்த சுவாரசியம் குறைவு. எளிமையான ‘வெண்ணிலா கபடி குழு’வில் இருந்த விறுவிறுப்பு கூட இதில் இல்லை.

‘ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும், அதற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிற செய்தி இந்தத் திரைப்படத்தில் அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒருதலைக் காதலின் விளைவாக ஆசிட் அடிக்கப்பட்ட பெண், கால்பந்து விளையாட்டில் முன்பு சிறந்து விளங்கி இப்போது இல்லத்தரசியாக குடும்பச்சிறைக்குள் சிக்கிக் கொண்ட பெண் ஆகியோரை விஜய் மீட்டுக் கொண்டு வரும் காட்சிகளும் அது தொடர்பான வசனங்களும் நெகிழ்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

‘பிகில்’ திரைப்படத்தில் ஒரு முன்னணி நாயகனுக்குரிய வணிக அம்சங்களும் இருக்கின்றன. அதையும் தாண்டி பெண்களைப் பெருமைப்படுத்தும் விஷயங்களும் இருக்கின்றன. ஒரு வெகுஜனத் திரைப்படத்தில் ‘பெண்களின் முன்னேற்றம்’ தொடர்பான விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல விரும்பிய இயக்குநரை இதற்காக நிச்சயம் பாராட்டலாம். இந்தக் கலவையை அட்லி ஒரளவு நன்றாகவே கையாண்டிருக்கிறார்.

ஆனால் ஒருவகையில் இதையே இந்தப் படத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம். இதுவே படத்தை ‘இரண்டும்கெட்டான்’தனமாக ஆக்கியிருக்கிறது. இதர வணிக அம்சங்களையும் அநாவசியமான திணிப்புகளையும் ஒதுக்கிவிட்டு ‘சக்தே இந்தியா’ போன்று சுருக்கமாகவும் கச்சிதமாகவும் சொல்லியிருந்தால் ‘பிகிலின்’ சத்தம் இன்னமும் சிறப்பாக கேட்டிருக்கும்.
தீபாவளியை முன்னிட்டு அளவில்லா அழைப்புகள்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

By DIN | Published on : 26th October 2019 02:40 AM |

பிஎஸ்என்எல் நிறுவனம்

தீபாவளியை முன்னிட்டு 2 நாள்களுக்கு அளவில்லாத அழைப்புகளை இலவசமாக தனது வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதாக பிஎஸ்என்எல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குநா் விவேக் பன்சால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுக்கு அளவில்லாத அழைப்புகளை இலவசமாக வழங்க பிஎஸ்என்எல் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்த வாடிக்கையாளா்கள் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தங்களது நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசிக்கு அழைத்து இலவசமாக அளவில்லாமல் பேசலாம். தங்களது வாடிக்கையாளா்கள், அவா்களுக்கு நெருங்கியவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அந்த தருணத்தை மேலும் சிறந்த அனுபவமாக பிஎஸ்என்எல் மாற்ற விரும்புகிறது.

இதன் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இலவச அழைப்புச் சலுகையை, தீபாவளி (அக்.27) மற்றும் அதற்கு மறுநாளும் (அக்.28) 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓரிரு மாதங்களில், பாரத் ஃபைபா்”சேவைகளை மேலும் அதிகப்படியான நகா்ப்புறங்களிலும், கிராமங்களிலும் அளிக்கப்படவிருக்கிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி வழங்குவதின் மூலம் வாடிக்கையாளா்களுடைய பிராட்பேண்ட் பயன்பாட்டு அனுபவம் மேலும் சிறப்பாக அமையும். ஏற்கெனவே பாரத் ஃபைபா் 500 ஜிபி எனும் பிரபலமான திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் 500 ஜிபி கிடைக்கிறது. 2020- ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் “பாரத் ஃபைபா்” சேவைகளை நாடு முழுவதும் ஒருங்கிணைத்துக் கொண்டுவரத் திட்டங்கள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இணையதளத்தில், 'பிகில், கைதி'

Added : அக் 25, 2019 21:47 |

சென்னை, :தீபாவளியை முன்னிட்டு, நேற்று வெளியான புதிய திரைப்படங்களான, பிகில், கைதி இரண்டும், இணையதளத்தில் வெளியாகின. தீபாவளியை முன்னிட்டு, விஜய் நடித்த, பிகில்; கார்த்தி நடித்த, கைதி படங்கள், நேற்று வெளியாகின. பிகில் படம், 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இந்த படம் உலகம் முழுக்க, 3,000க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, 'தமிழ் ராக்கர்ஸ்' இணைய தளத்தில் வெளியாகி, படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அதேபோல, கைதி படமும் நேற்று இணைய தளத்தில் வெளியானது. இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திரைத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை, அண்ணாநகர் தெற்கு பகுதி விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள், பிகில் படம் வெளியானதை முன்னிட்டு, மதுரவாயலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்கு உள்ளவர்களுக்கு உணவு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

NEWS TODAY 29.01.2026