Wednesday, January 8, 2020

7 மாதம் செயற்கை சுவாசம் அளித்து சிறுவனை மீட்ட அரசு டாக்டர்கள்

Added : ஜன 08, 2020 00:22

மதுரை : அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் அளித்து, மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.

மதுரை, பசுமலையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது, இரண்டரை வயது மகன், கை, கால் மற்றும் உடலின் அனைத்து தசைகளும் பலம் இழந்த நிலையில், மே மாதம், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.டாக்டர்கள் பரிசோதனையில், தசைகளை வலு இழக்கச் செய்யும், 'குல்லியன் பாரி சிண்ட்ரோம்' எனும் நோய், சிறுவனை பாதித்து இருப்பது தெரிந்தது. 'இம்முனோகுளோபுலின், மீத்தைல் பிரட்னிசலோன்' போன்ற விலையுர்ந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.இதற்கிடையே, நோயால், சுவாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, சிறுவனுக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவாசத் தொற்றுக்கான விலை உயர்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டன. டியூப் மூலம், மூக்கு வழியாக உணவு அளிக்கப்பட்டது. 'பிசியோதெரபி' பயிற்சியும் வழங்கப்பட்டது.இப்படி, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் தொடர்ந்தது. உடல் நலனில் முன்னேற்றம் இருந்ததால், டிசம்பரில் படிப்படியாக செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது.தற்போது, சிறுவனால் தானாக சுவாசிக்க, உணவு உட்கொள்ள, நடக்க முடிகிறது. இரண்டரை வயது சிறுவனுக்கு இத்தனை மாதங்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது மிகவும் அரிதானது.

சிகிச்சை அளித்த பல்வேறு துறைகளின் டாக்டர்களை, டீன் சங்குமணி பாராட்டினார்.ரூ.1.5 கோடி சிகிச்சை இலவசம்அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், நல்ல நிலைக்கு திரும்பி, வீட்டிற்கு செல்ல தயாராகி விட்டான். ஏழு மாதங்கள், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது, தென் மாநிலங்களிலேயே இதுதான் முதல் முறை. இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால், 1.50 கோடி ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில், சிறுவனுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.சங்குமணி, டீன், மதுரை அரசு மருத்துவமனை.
ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

Added : ஜன 07, 2020 23:35

சென்னை : ரேஷன் கடைகளில், நாளை முதல், 1,000 ரூபாய் அடங்கிய, பொங்கல் பரிசு வழங்க உள்ளதால், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, உணவுத் துறை சார்பில், போலீசாரிடம் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலம், கரும்பு, 1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, 2019 நவம்பரில் வெளியான நிலையில், நாளை முதல், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு, ஒரு வாரமே உள்ளதால், பலரும் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நாளை காலை, ரேஷன் கடைகள் திறந்ததும், பொங்கல் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதிகம் பேர் திரள வாய்ப்புள்ளது.

இதனால், கூட்ட நெரிசலால், மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்படலாம். இதை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், உணவுத்துறை சார்பில், ரேஷன் கடைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு கடையிலும், 9, 10, 11, 12ம் தேதி வரை, எந்தெந்த தினத்தில், எத்தனை கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்ற விபரம், கடைகள் முன் ஒட்டப்பட்டு உள்ளது.இதனால், கார்டுதாரர்கள், தங்கள் வரிசை எண் உள்ள தேதிக்கு சென்று, பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம்.
'நிர்பயா' வழக்கு கடந்து வந்த பாதை

Added : ஜன 08, 2020 00:18

டிச., 16, 2012: டில்லியில், மருத்துவ மாணவி, 'நிர்பயா' ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார். அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார்.

டிச., 17: டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனையில் நிர்பயா சேர்ப்பு. பஸ் டிரைவர் ராம் சிங், அவர் சகோதரர் முகேஷ் சிங் ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, பவன் குப்தா, ஒரு சிறுவன் டில்லியில் கைது. அக் ஷய் குமார் சிங், அவுரங்காபாத்தில் கைது.டிச., 21: சப்தர்ஜங் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட்டிடம், 'நிர்பயா' வாக்குமூலம்.டிச., 26: குற்றவாளிகளை துாக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்.டிச., 27: 'நிர்பயா' மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.டிச., 29: சிகிச்சை பலனின்றி, அதிகாலை, 2:15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் பார்லிமென்டில் தாக்கல்.

ஜன., 3, 2013: பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில், ஐந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு. ஆறு பேரில் மைனர் குற்றவாளி வழக்கு மட்டும் சிறுவர் கோர்ட்டுக்கு மாற்றம்.ஜன., 17: டில்லி, சாகேட் விரைவு கோர்ட்டில் விசாரணை துவங்கியது.மார்ச், 11: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம் சிங் துாக்கிட்டு தற்கொலை. மற்ற ஐந்து பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.ஆக., 31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை.

செப்., 10: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டது.செப்., 13: நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.ஜன., 3, 2014: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது டில்லி உயர் நீதிமன்றம். ஜூன், 2: குற்றவாளிகள் இருவர் இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.ஜூலை, 14: குற்றவாளிகளின் துாக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.டிசம்பர், 2015: மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு.

டிச., 18: இம்மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.டிச., 20: மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால், மைனர் குற்றவாளி விடுதலை.ஏப்., 3, 2016: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.மே, 5, 2017: நான்கு பேருக்கும் (அக் ஷய் குமார் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங்) மரண தண்டனை விதித்த டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.நவ., 13: தீர்ப்பை எதிர்த்து, அக் ஷய் குமார் சிங்கை தவிர மற்ற மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு. ஜூலை, 9: சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அக்., 29, 2019: கருணை மனு தாக்கல் செய்ய குற்றவாளிகளுக்கு, ஏழு நாள் காலக்கெடுவை திஹார் ஜெயில் நிர்வாகம் விதித்தது.

நவ., 8: டில்லி அரசிடம், வினய் சர்மா கருணை மனு. நவ., 30: இதனை தள்ளுபடி செய்த டில்லி உள்துறை அமைச்சர், டில்லி துணைநிலை கவர்னருக்கு மாற்றினார். டிச., 2: கவர்னரும் மனுவை தள்ளுபடி செய்து, டில்லி அரசு முடிவெடுக்க அனுமதி. டிச., 6: கருணை மனுவை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு மாற்றியது. மனுவை தள்ளுபடி செய்ய, டில்லி அரசு பரிந்துரை. டிச., 10: அக் ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு. டிச., 18: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய, உத்தரவு.

ஜன., 7, 2020: நான்கு குற்றவாளிகளையும், ஜனவரி, 22, காலை, 7:00 மணிக்கு துாக்கிலிட, திஹார் ஜெயில் நிர்வாகத்துக்கு, டில்லி நீதிமன்றம், 'நோட்டீஸ்!'
தர்பார் படத்துக்கு ஹெலிகாப்டரில் மலர்; அரசு அனுமதி மறுப்பு

Added : ஜன 07, 2020 21:06

சென்னை : ரஜினியின் 'தர்பார்' படம் வெளியாகும் போது தியேட்டர் முன் ஹெலிகாப்டரில் மலர் துாவ அரசு அனுமதி மறுத்துள்ளது.

ரஜினி நடித்த 'தர்பார்' படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. உலகம் முழுக்க அதிக தியேட்டரில் 'ரிலீஸ்' செய்ய படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர், படம் வெளியாகும் தேதியில் தியேட்டர் முன் ஹெலிகாப்டரில் மலர் தூவ எண்ணி, அரசிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது. தியேட்டர் அமைந்த இடம் நகரின் முக்கிய பகுதி என்பதால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
திஹாரில் தூக்கு தண்டனை ஒத்திகை

Added : ஜன 08, 2020 05:02



புதுடில்லி: 'நிர்பயா வழக்கு, குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என, டில்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் மூன்று பேர், திஹார் சிறையின் சிறை எண் - 2லும், ஒருவர் மட்டும் சிறை எண் - 4லிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும், வரும், 22ம் தேதியன்று, சிறை எண் - 2ல் துாக்கிலிடப்படுவர்.

இந்நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை இன்று திஹார் சிறையில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உ.பி.மாநிலம் மீரட்டை சேர்ந்த சிறை காவலர் இதற்கான ஒத்திகையை நடத்திட உள்ளார்.

அப்போது காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், கலெக்டர் வர இயவில்லை என்றால், துணை கலெக்டர், அரசு மருத்துவர் குழுவினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
Little boy with muscle paralysis, breathing difficulty recovers at GRH

‘Treatment might have caused ₹1.5 cr. at private hospitals’

08/01/2020, STAFF REPORTER,MADURAI

A two-and-a-half-year-old boy, who was diagnosed with Guillain-Barre Syndrome, the rapid onset of muscle weakness and paralysis caused by affected immune system, and was under artificial ventilation for seven months at Government Rajaji Hospital, had recovered completely, said doctors.

Addressing the media on Tuesday, hospital Dean J. Sangumani said the boy was diagnosed with Guillain-Barre Syndrome and was admitted to the Department of Paediatrics eight months ago.

“A viral infection had weakened the immune system and caused neurological disorder, which resulted in paralysis of muscles. The boy had also developed breathing difficulties because of the syndrome,” he said.

Hence, the child was treated under artificial ventilation for seven months.

“During the period, he was treated with antibiotics and it took seven months for the recovery of the muscles,” said Head of the Department of Paediatrics S. Balasankar.

Mr. Sangumani said the syndrome was not a rare condition and that every month around three patients got admitted to the hospital with the condition.

“This is one of the rarest cases as the patient had received artificial ventilation for a long period and recovered completely,” he said.

The treatment for the condition might have caused around ₹1.5 crore at private hospitals.

But, the patient was treated for free at the GRH under the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme, he added.
Bury the past and return to the varsity, JNU V-C tells students

08/01/2020, PRESS TRUST OF INDIA ,NEW DELHI

M. Jagadesh Kumar

Under fire from students and faculty members for not doing enough when they were brutally attacked by a masked mob on the campus, Jawaharlal Nehru University Vice-Chancellor M. Jagadesh Kumar on Tuesday urged students to put the past behind and return to the campus.

In a brief statement, Mr. Kumar said, “Our heart goes out to all injured students. The incident [violence] is unfortunate. I would like to tell students that JNU campus is a secure place.

“I urge all students to come back to the campus. Let us put the past behind.”

After the attack there has been a demand from several quarters, including the students and faculty members, for his resignation. Later interacting with reporters, he said the campus had its own security.

“If there is a law and order situation we do not rush to the police immediately. We see if our security can handle it.

“The campus has its own security. On Sunday, when we saw that there is a possibility of aggressive behaviour among students, we informed the police,” he said.

The police have also come under flak for reaching after the mob had dispersed after running amok.

NEWS TODAY 26.01.2026