Saturday, January 11, 2020

HC allows Ramaswamy trust’s horses to race

Sureshkumar.K@timesgroup.com

Chennai:11.01.2020

In a reprieve to industrialist A C Muthiah, the Madras high court has permitted the trust (Dr M A M Ramaswamy Chettiar of Chettinad Charitable Trust) managed by him to field horses in upcoming races organised by Madras Race Club (MRC). Earlier, the club management had restrained the trust from participating in the races citing a dispute over ownership and registration of horses bequeathed by the late M A M Ramaswamy.

The court directed the race club to collect necessary entry and other fees to enable participation of the horses of the trust in the classic races conducted by it in the 2020-21 season. The court also made it clear that the trust shall not be prevented from using the gold brown racing jersey which was originally allotted to M A M Ramaswamy.

Justice Senthilkumar Ramamoorthy passed the interim order, after refusing to accept the contention of the club management that a public trust cannot own horses and participate in races.

Citing the case of the Hyderabad Race Club in this connection, the judge said, “Statute might provide exemption from tax to buildings used for religious, educational and charitable purposes and is, therefore, not an authority for the broad proposition that a public trust cannot be a horse owner or cannot participate in horse races.”

The issue pertains to an order passed by the stewards of the club dated December 27, 2019, directing the trust to apply to the club for ownership/usage of racing colour in the appropriate form, with the necessary supporting documents and fee.

It further ordered that the trust is ineligible to race the horses pending registration of ownership and to use the racing colours pending registration. All entry of horses by the trust made as on the date were also cancelled.

The order was passed on the basis of a representation made by M A M R Muthiah, foster son of Ramaswamy, alleging that the trust was unfounded and that his father Ramaswamy was not stable in the fag end of his life and using it some people had attempted to grab his assets, including the horses owned by him, illegally.

Challenging the order, the management of the trust moved the high court, contending that Ramaswamy had disowned his foster son even during his life time and that the entire properties owned by him, including the horses, had been transferred to the public trust only as per his will.

Friday, January 10, 2020

வேலியே பயிரை மேயலாமா?

By முனைவர் என். பத்ரி | Published on : 10th January 2020 03:15 AM |

அரசு வேலைக்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலங்களில் தமது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, எதிர்பார்க்கும் வேலை கிடைக்காத நிலையில், கிடைத்த ஏதோ ஒரு வேலையில் தமது வாழ்வை ந(க)டத்திவருவது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஒருவரே லஞ்சம் வாங்கியதாக குஜராத் மாநிலத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பொது நல உணர்வு கொண்டோர் அனைவரின் மனத்திலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்கிறதே' என்ற புலம்பலும் மேலோங்குகிறது.

அரசு நிர்வாகமும் அரசுப் பணியாளர்களும் 24 மணி நேரமும் பொதுமக்களின் நலனுக்காக தம் நேரத்தையும் உழைப்பையும் தரவேண்டும் என்பது அடிப்படை எதிர்பார்ப்பு ஆகும். அவர்கள் தமது பணிகளைச் சரியாக செய்வதை உறுதிப்படுத்த பல்வேறு பணிநிலைகளும் பதவிகளும் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநேகமாக அனைத்து அரசுத் துறை செயல்பாடுகளிலும் காணப்பட்டாலும் வெளிச்சத்துக்கு வருபவை வெகுக் குறைவே. தமது வேலையில் சரியான வழிமுறைகள் கடைப்பிடிக்காமை, காலதாமதத்தைத் தவிர்க்க விரும்புதல், சார்ந்த அதிகாரியின் பக்கத்தில் எதிர்பார்க்கப்படும் உடனடி பணியிட மாற்றம், உடனடி பணப்பலன் போன்றவை லஞ்சம் கொடுப்பதற்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
லஞ்சம் பெறுபவர்கள் கண்ணோட்டத்தில் பணத்தின் மேல் உள்ள பேராசை, குடும்ப வறுமை, பெரிய குடும்பத்தை வழிநடத்த ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்கவேண்டிய பொறுப்பு, குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகுதல் போன்றவை காரணங்களாகக் கூறப்படலாம்.

எது எப்படி இருப்பினும், லஞ்சம் கொடுப்பவர்களைத்தான் நாம் முதல் குற்றவாளிகளாகக் கருத வேண்டியிருக்கிறது. கொடுப்பதற்கு மனதளவில் தயாராகிவிட்டு தமது வேலை முடிய காலதாமதமாகும்போது தூண்டிலில் மீன்களைச் சிக்க வைப்பதுபோல, கையூட்டு வாங்குபவர்களை மட்டும் சட்டத்தின் மீது நிறுத்துவது பாரபட்சமான அணுகுமுறையாகவே தெரிகிறது.
லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் தவறு என்ற நிலையில் இருசாராரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுதான் குறையைக் களைவதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும். லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அவர்களுக்குப் பொதுவாழ்விலும் அலுவலகத்திலும் ஏற்படும் அவமானமே பெரிய தண்டனையாகும்.

ஊடகங்களும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் இது வெறும் வாய்க்கு அவல் சேர்ப்பது போலாகும். எனவே, இரு சாராரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது மேலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதைத் தவிர்க்காவிட்டாலும் ஓரளவேனும் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், அனைத்து அரசு அலுவலங்களிலும் எல்லா இருக்கைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை இணையத்தின் மூலம் உயரதிகாரிகளால் கண்காணிக்கப்படும் முறை பிரச்னையை ஓரளவு குறைக்கும். உயர் அதிகாரிகள் அடிக்கடி கீழ்நிலை அலுவலகங்களை திடீரெனப் பார்வையிட்டு, ஆவணங்களைப் பரிசோதனை செய்வது தீவிரமாக்கப்படவேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுபோல், ஆண்டுக்கு இரு முறையாவது தேவைக்கு ஏற்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு கோப்பினையும் பரிசீலித்து முடிக்க குறிப்பிட்ட குறைந்தபட்ச கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதை மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் பெயர்ப்பலகையில் இடம்பெற வேண்டும்.சில அலுவலங்களில் இவை கடைப்பிடிக்கப்பட்டாலும் விவரங்கள் அவ்வப்போது சுணக்கம் காரணமாக புதுப்பிக்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. லஞ்சத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ள அலுவலகங்கள் எவை என்பதை அரசு நன்றாக அறியும். அவ்வாறான அலுவலகங்களில் அரசு உளவுத் துறை அதிகாரிகளை திடீர் மேற்பார்வை செய்ய வைக்கலாம்.

அரசுப் பணியில் சேரும்போது எந்த நிலையிலும் லஞ்சம் பெற மாட்டேன் என்ற உறுதிமொழியை தகுந்த நிபந்தனைகளுடன் எடுத்துக்கொள்ளச் சொன்னால், ஊழியர்கள் மனச் சான்றுடன் பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக பணியமர்த்தப்படுபவர்கள் லஞ்சம் கொடுத்து பணியமர்த்தப்படக் கூடாது. பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் போட்ட முதலீட்டை எப்படி மீள எடுப்பதில் கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாது. எனவே, அரசின் அனைத்துப் பணியிடங்களும் தகுதி, திறமையின் அடிப்படையில் அரசின் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்.

எந்த நிலையிலும் பரிந்துரைகளும் பண ஆதிக்கமும் பணி நியமனங்களின்போது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இது தொடக்கத்திலேயே பல பிரச்னைகளைத் தவிர்க்கும். ஊழல் என்பது சமூகத்தின் அங்கீரிக்கப்பட்ட செயலாக மாறிவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் பாவத்தைத் தொலைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து மனசாட்சிப்படி செயல்பட்டால்தான் சாத்தியமாகும். முயற்சி முதலில் நம்மிடமிருந்து தொடங்கட்டுமே...
24 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள்: முதல்வா் வழங்கினாா்

By DIN | Published on : 10th January 2020 05:19 AM 



விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தேசியக் கல்வி மாநாட்டில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் 24 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் தேசியக் கல்வி மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் நிறைவாக சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, தமிழகத்தில் உயா் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் 24 தனியாா் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும கல்வி மாநாடு விருதுகளை வழங்கினாா்.

தேசிய உயா் கல்வி தரவரிசை (என்ஐஆா்எப்), ‘நாக்’ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் கீழ் ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட அமிா்தா விஷ்வ வித்ய பீடம், சென்னை லயோலா கல்லூரி, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, தஞ்சை சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி, ஹிந்துஸ்தான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், வேலூா் விஐடி, சென்னை எம்.சி.சி., எஸ்.ஆா்.எம்., மதுரை லேடி டோக் கல்லூரி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சவிதா பொறியியல் கல்லூரி, சென்னை பெண்கள் கிருத்தவக் கல்லூரி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தியாகராஜா் கல்லூரி, டாக்டா் எம்ஜிஆா் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், எத்திராஜ் மகளிா் கல்லூரி, ஜஸ்டிஸ் பஷீா் அகமது சையது மகளிா் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, எம்.ஓ.பி.வைஷணவ கல்லூரி உள்பட 24 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களுக்கு முதல்வா் விருதுகளை வழங்கினாா்.


விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வீணையை நினைவுப் பரிசாக வழங்கிய (இடமிருந்து) சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன், துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம்.

விழாவில் முன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழும இயக்குநா் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினாா். அப்போது பேசிய அவா், முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் எளிமை, அனைவரையும் ஒருங்கிணைத்து நிலைத்த ஆட்சியை அளிக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாகத்தான், நிா்வாகத்தில் தமிழகம் இந்திய அளவில் முதல் மாநிலம் என்ற விருதை பெற்றிருக்கிறது என்றாா் அவா்.

மேலும், முதல்வா் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள், பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வி மேம்பாடு திட்டங்கள், நதிநீா்ப் பிரச்னைக்கான தீா்வு என்பன உள்ளிட்ட அரசின் சாதனைகள் விளக்கும் குறும்படம் ஒளி பரப்பப்பட்டது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் மனோஜ்குமாா் சொந்தாலியா, மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், ‘தினமணி’ ஆசிரியா் கே.வைத்தியநாதன் ஆகியோா் விழாவில் பங்கேற்றனா்.

வழக்கை இழுத்தடிக்க, 'நிர்பயா' குற்றவாளி முயற்சி; தண்டனையை தள்ளிப்போட குறைதீர் மனு

Updated : ஜன 10, 2020 00:28 | Added : ஜன 10, 2020 00:26

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில், குறை தீர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிர்ச்சி:

டில்லியில், 2012ல், 23 வயதான மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, துாக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி இறந்தார். மருத்துவ மாணவியின் பெயர் வெளியிடப்படாததால், ஊடகங்கள் அவரை, 'நிர்பயா' என பெயரிட்டு அழைத்தன.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 16 வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், சிறுவனுக்கு மட்டும், சிறார் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மற்ற ஐந்து பேரில், ராம் சிங் என்பவர், துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். மற்ற நால்வருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதை எதிர்த்து, நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, 'கியூரேட்டிவ்' மனு எனப்படும், குறை தீர் மனு தாக்கல் செய்துள்ளர்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: என் குடும்பம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். என்னை நம்பி, என் வயதான பெற்றோர் உட்பட, பலர் உள்ளனர். சமூகத்தின் எண்ணம், மக்களின் கருத்து ஆகியவற்றை வைத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூழ்நிலை:

எங்களது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், இதே போன்ற, 17 வழக்குகளில், கீழ் நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் விதித்த துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளன. ஆனால், எங்களுக்கு மட்டும் குறைக்கவில்லை. குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, என் துாக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, வினய்குமார் சர்மா கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு

Added : ஜன 09, 2020 22:46


சென்னை: ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - கந்தசாமி: சூலுார் தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றியம், மலையடிபாளையத்தில் உள்ள மருந்தகத்தை, 30 படுக்கைகள் வசதி உள்ள மருத்துவமனையாக, தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் விஜயபாஸ்கர்: தரம் உயர்த்த விதிகளில் இடமில்லாவிட்டாலும், தேவையான வசதிகளை செய்து தர, நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - வரலட்சுமி: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காய சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும். செங்கல்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், தலைக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க முடியாததால், சென்னைக்கு அனுப்புகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சென்னை வருவதற்குள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, தலைக்காய சிகிச்சை பிரிவை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உடனடியாக துவக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரியில், நுாலகம் அமைத்து தர வேண்டும்.அமைச்சர்

விஜயபாஸ்கர்: நீங்கள் கூறியது ஏற்புடையது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
Bengaluru is our key hub in India: British Airways

10/01/2020, SPECIAL CORRESPONDENT,BENGALURU

British Airways said it has started flying one of its latest A350 aircraft from India and chosen the Bengaluru-London route to introduce it in the country.

Bengaluru will be the first city in India, and the fourth destination on the airline’s worldwide network, to have received the new A350, said Moran Birger, Head of Sales Asia Pacific and Middle East at British Airways.

Addressing a conference on Thursday, Mr. Birger explained the rationale behind introducing the new flying machine from the city, “London is increasingly becoming a key hub for passengers from Bengaluru who are flying to several European and American destinations.”

British Airways flies from five Indian cities with a weekly operation of 53 flights from Delhi, Mumbai, Bengaluru, Chennai, and Hyderabad to Terminal 5 at London Heathrow. “India is important to British Airways and we have a long history of serving the market. We are focusing on enhancing customer experience onboard our flights from India,” added Mr. Birger.
Pilot’s licence suspended for grass landing

10/01/2020, ADITYA ANAND,MUMBAI

Aviation regulator, the Directorate General of Civil Aviation, on Thursday announced suspension of a GoAir expatriate commander for 6 months and the co-pilot’s licence for 3 months after being found to be involved in a case of serious runway excursion at Bengaluru on November 11.

In a report released on Thursday, the DGCA said GoAir flight G8-811 from Nagpur to Bengaluru with 180 passengers on board was involved in a serious incident when the crew lost visual reference at about 50 feet above ground (while landing), but continued to land which was in violation of requirements laid down in civil aviation requirements, meant to be followed by airline for the safety of aircraft operations.

“The crew considered wrong visual reference as runway centreline and manoeuvred the aircraft to the left of Runway 09. The first officer (co-pilot), who did not monitor flight-path deviation in the cockpit instruments, failed to give call-out for deviation,” a senior DGCA official said. The DGCA said it had show-caused both pilots to submit an explanation, and both accepted their mistake.

On November 11, the aircraft, an Airbus A320 Neo aircraft had gone off the runway onto the unpaved area travelling 200 meters over grass. The GoAir flight from Nagpur was then diverted to Hyderabad and officials noticed mud and grass deposits on the main landing gear when it landed there. An inspection by the regional DGCA office, Bengaluru, and Kempegowda International Airport, reported landing gear marks on the unpaved surface.

NEWS TODAY 26.01.2026