Tuesday, January 21, 2020


Parking at Chennai Central railway station may get costlier

TNN | Jan 21, 2020, 04.56 AM IST

  
CHENNAI: Car and bike parking rates at Dr MGR Central (Chennai Central) railway station may be increased, sources in Southern Railway told TOI.

Railway officials initiated a discussion in this regard after Chennai Metro Rail Limited opened its parking facility at the station recently. CMRL charges Rs 10/hour for bikes and Rs 25/hour for four-wheelers, at least twice what Southern Railway charges for parking at the station. The normal car parking rate at Central is Rs 25 for the first two hours, Rs 35 for the next two and Rs 70 for the subsequent two. Bike parking charges are Rs 5 for the first four hours and Rs 10 for up to eight hours.

A slot at the premium car park facility available opposite the Moore Market Complex (MMC) suburban station costs Rs 50 per hour.

Senior officials in Chennai division took up the issue of increasing the rate after CMRL opened its facility last week. One of the proposals is to increase rates for those who park vehicles for a long time, say a week or more. However, nothing has been finalised, sources said.

Chennai divisional railway manager P Mahesh did not respond to a call seeking clarification.

Meanwhile, opinions are divided over the issue. Some officials feel that CMRL offers a covered parking space which would keep bikes and cars safe during rain or during summer.

The parking spots also have proper pavements.

Compared to this, the railway parking lot for bikes and cars is either open or covered with a flimsy tin roof. The security at these lots is also suspect while the lanes inside are not paved. “Those who can afford to pay a higher fee will surely prefer the metro parking,” said a senior official. This will eat into the railway’s revenue, the official said.

Monday, January 20, 2020

High Courts Weekly Round-Up

High Courts Weekly Round-Up: buAllahabad High Court/u/bb/b ● bRight Of An Indigent Accused To Free Legal Services Will Be 'Illusory' Unless The Court Informs Him Of Such Right. [Shadaan Ansari v. State of UP & 2 Ors.]/bb/b The All...
Nirbhaya Case : SC Dismisses Plea Of Juvenility Raised By Death Row Convict Pawan Gupta


20 Jan 2020 3:09 PM

The Supreme Court on Monday rejected the plea of juvenility raised by Pawan Kumar Gupta, one of the four death row convicts in the 2012 Delhi gangrape-murder case.
A bench comprising Justices R Banumathi, Ashok Bushan and AS Bopanna held that the same claim was earlier rejected by the Court after due consideration.
The bench held that Delhi High Court had rightly rejected the plea.
Advocate A P Singh, lawyer of Pawan Gupta, claimed that his school records show that he was a juvenile at the time of the crime. He argued that the school leaving certificate showed his date of birth as October 8, 1996.
He was held to be a major by an order of Magistrate passed in 2013. The death row convict now stated that the order was passed without hearing him. He alleged that the police had not produced the school records in the case. No opportunity was given to his counsel to examine the papers submitted by police on the plea of juvenility, Pawan states in the application.
He submitted that the school certificate came to light only after 2017, when his lawyers were collecting materials for preparing an affidavit detailing his mitigating circumstances, following the directions of the Supreme Court on February 3, 2017.
Referring to proviso Section 9(2) of the JJ Act and the SC decision in Upendra Pradhan v State of Orissa (2015), he stated that the claim of juvenility can be raised at any stage, even after the final disposal of the proceedings.
Opposing the plea, Solicitor General Tushar Mehta submitted that these contentions were earlier raised and rejected by the Court. In 2018, the SC had specifically adverted to his claim based on school certificate and rejected the claim.
"It will be a travesty of justice if this ground at this stage is raised again, after all forums have rejected it", SG said.
On December 19, the Delhi HC had dismissed the plea.
Justice Suresh Kumar Kait also imposed cost of Rs 25000 on the convict's advocate A P Singh, who did not appear in the court despite several communications sent to him on behalf of the court, for playing "hide and seek".
The execution of four convicts is scheduled on February 1.


பழநி 55 ஆண்டுகள்: வியர்வையின் வாசனை வீசிய காவியம்!




படத்தில் நாயகி உண்டு. ஆனால், நாயகனுக்கு அவர் ஜோடி அல்ல. இரண்டு டூயட் பாடல்கள் உண்டு. ஆனால், அவை நாயகனுக்குக் கிடையாது. படத்தில் ஒரு சண்டைக் காட்சி உண்டு.

ஆனால், அது நாயகனுக்குக் கிடையாது என்ற ஆச்சரியம் ஒரு புறம். தமிழகத்தின் உயிர்நாடியான விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வுசார்ந்த பிரச்சினைகளையும் நுனிப்புல் மேய்தல் என்ற வகையில் தமிழ்ப் படங்கள் மேம்போக்காகப் பேசிய காலம் அது, அப்போது பெரும்பான்மையான உழவர்கள் காணி நிலம் கூட இல்லாமல் கைகட்டி, வாய்பொத்தி, நிலப்பிரபுத்துவ குத்தகை முதலைகளிடம் கொத்தடிமைகளாக வாழும் அவலத்தை, துளியும் பிரச்சாரத் தொனியின்றி நேர்மையாகக் காட்சிப்படுத்திய கதை, திரைக்கதை என்னும் ஆச்சரியம் மற்றொரு புறம். இந்த இரண்டு ஆச்சரியங்களும் ஒரு புள்ளியில் சேர்ந்தபோது உருவாகிய திரைக் காவியமே ‘பழநி’. உழவுத் தொழிலாளியின் வியர்வை வாசனையை மண் வாசனையுடன் கலந்து, 55 ஆண்டுகளுக்கு முன் உழவர் தினத்தில் வெளியான படம்.


நடிகர் திலகம் 101

நியாய விலைக்கடைகளின் செயல்பாடின்மையால் விளையும் குறைபாடுகள், உணவு தானியங்களின் பற்றாக்குறை, அவை பதுக்கப்பட்டுக் கறுப்புச் சந்தை வாயிலாக விலை போன அன்றைய சமூகச் சூழல் ஆகியவற்றை அரசியல் கலப்பின்றிக் கதையின் சூழலோடு நெருடலில்லாமல் பொருத்திய வகையில் இயக்குநர் பீம்சிங் ‘மக்களின் இயக்குந’ராக பளிச்சிட்டார்.


தமிழ் சினிமாவில் கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பங்களிலிருந்து வேறுபட்டு, கதையின் நாயகனாக நடிகர் திலகம் தன்னை வெளிப்படுத்திய படம். எளிய கிராமியச் சாமானியனாக, படத்தில் அவர் ஏற்ற பழநி கதாபாத்திரம், அவரது தன்னிகரற்ற நடிப்பாற்றலால் இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. 100 படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகும் நல்ல கதைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் அவரது தொழில் பக்தி, அவரின் இந்த 101-ம் படத்தைச் சிறப்புறத் தாங்கி நிற்கிறது.

அப்பாவி மனிதன்

இது போன்ற அப்பாவி மனிதன் கதாபாத்திரங்களை நடிகர் திலகம் ஏற்பது ஒன்றும் புதிதல்ல. ‘படிக்காத மேதை’, ‘பழநி’, ‘காளிதாஸ்’, ‘ராமன் எத்தனை ராமனடி’ என்று நீளும் அந்தப் பட்டியலில் பழநி கிராமிய வாழ்வியலின் அழகுடன் வியர்வையின் வாசனையும் வீசச் செய்த உழவுத் தொழிலாளியின் உன்னதம் பேசியது. பழநி அப்பாவி, மனம் முழுவதும் நன்மை நிறைந்த மனிதன். தனக்கு இழைக்கப்பட்ட தீங்குகளைக்கூடப் பெரிதுபடுத்தாதவன். பழநிக்கு விவசாயம் ஒரு கண், தன் தம்பிமார்கள் மற்றொரு கண்.




அள்ளி முடிந்த தலைமுடி, கசங்கிய வேட்டி, சட்டை என்ற ஒரே உடையில் படம் முழுக்க வரும் சிவாஜி, பண்ணையார் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருப்பார். அதைப் பார்வையாளர்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வைத்திருப்பதில்தான் அவர் திறமை அடங்கியிருக்கிறது. நிலத்தை உழும்போது கிடைத்த புதையலை ‘அது உங்க நிலம் எனவே அது உங்களுக்குத்தான் சொந்தம்’ என்று கொண்டுபோய்க் கொடுப்பார். தானமாகத் தருகிறேன் என்று சொல்லி, பாறை நிலத்தைப் பண்ணையார் தரும்போது கோபப்படும் தம்பிகளை அடக்கி, ‘இந்த நிலத்தையும் நம்மால் விளை நிலமாக மாற்ற முடியும் என்றுதான் பண்ணையார் இதைக் கொடுத்திருக்கிறார்’என்று கூறும்போது ‘அட அப்பாவியே!’ என்று பார்வையாளர்களை பரிதாபப்பட வைத்திருப்பார்.

நிலவுடமைச் சமூகத்தின் கண்ணாடி

வெற்றுக் காகிதத்தில் கைநாட்டு வாங்கிக்கொண்டு, வெறும் இரண்டாயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அறுவடை நேரத்தில் அதைப் பன்னிரண்டாயிரமாக மாற்றி எழுதி நிலத்தை ஜப்தி செய்யும் பண்ணையாரிடம் ‘நான் பன்னிரண்டாயிரமா வாங்கினேன்?’ என்று கேட்டுக் கதறி அழும்போது அந்த அப்பாவிக்காக நாமும் கண் கலங்குவோம். அந்தக் காட்சி அன்றைய நிலவுடமைச் சமூகத்தின் கண்ணாடியாக இன்றைய தலைமுறைக்கு கிடைக்கும் ஆவணம்.

பக்கத்துக் குடிசையில் வசிக்கும் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் பொங்கலுக்குத் துணி வாங்கிக் கொடுத்துவிட்டு, அங்கே இலைக்கு முன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கும் தம்பிக்கு கேட்கும்படியாக, ‘நல்ல நாளன்னிக்கு அழக் கூடாது சாப்பிடு’ என்று சத்தமாகச் சொல்லும்போது, சிவாஜியின் முகம் காட்டும் உணர்வுகள், பாசாங்கில்லாத அண்ணன் தம்பி பாசத்தை உணர்த்தும்.

தன் அக்காள் மகளை, தம்பி மனைவியே தவறாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு கோவத்தில் கண் துடிக்க ‘காவேரி..’ என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வருவார் சிவாஜி. கள்ளங்கபடமில்லாத வெள்ளைச் சிரிப்புடன் ‘என்ன மாமா?’ என்று கேட்டபடியே வரும் அக்காளின் மகளைப் பார்த்தவுடன் கண்ணீர் கட்டி நிற்கும் பார்வையுடன் ‘ஒண்ணுமில்லமா..’ என்று முகமசைப்பாரே! அந்த உயர்ந்த நடிப்பாற்றல் சிவாஜிக்கு மட்டுமே சாத்தியம்.



உயிர்ப்புமிக்க காவியம்

தம்பிகள் பட்டணத்தில் மோசம் போய்விட்டார்கள் என்றவுடன் மனம் உடைந்து, ‘மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா’ என்றும், ‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள்தானடா’ என்ற கவியரசரின் காவிய வரிகளுக்கு சிவாஜி வாயசைப்பால் உயிரூட்டும்போதும் இன்றும் அவை உண்மை என்பதாகவே ரசிகர்கள் உணர்வார்கள்.

விவசாயத்தை நேசிக்கும் எந்த விவசாயியும் அதை விட்டு விட்டு செல்ல மாட்டான் என்பதை, ‘நம்முடைய உணவு தானியம் பட்டணம் போகலாமே தவிர நாம போகக் கூடாது’ என்ற ஒரு வரி வசனத்தில் உணர்த்திவிடுவார். சிவாஜி படத்தின் முகமும் தலையும் என்றால், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், பாலையா, நாகேஷ், எம்.ஆர்.ராதா, தேவிகா, புஷ்பலதா ராம், சிவகாமி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் கச்சிதமான பங்களிப்பு படத்துக்கு முதுகெலும்பு.

முதல் காட்சியில் ‘ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ என்ற அற்புதமான பாடலில் தொடங்கி இறுதிக் காட்சி வரை ஒரு இடத்தில்கூட சிவாஜி கணேசன் எனத் தெரியாமல் மதுரை மாவட்டம் புளியரை கிராமத்துக் குடியானவன் பழநி மட்டுமே கண்ணுக்குத் தெரியும் அற்புதம்தான், படம் வெளியான இந்த 55-ம் உழவர் திருநாளிலும் ‘பழநி’ திரைப்படத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

- முரளி சீனிவாஸ், t.murali.t@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

ரூ.1 லட்சம் ஊதியம் தந்த ஐ.டி. பணியை விடுத்து இயற்கை விவசாயம் செய்யும் பெண்: ஊராட்சி தலைவர் பணியை தொடங்கினார்
ரேகா ராமு

திருவள்ளூர்


திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா ராமு(37). இவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு தீவிரமாக செயல்படுவது மட்டுமின்றி பாண்டேஸ்வரம் ஊராட்சித் தலைவராகி மக்கள் பணியாற்றவும் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து, ரேகா ராமு நம்மிடம் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள்:


சென்னை, தி.நகரில் வசித்து வரும் எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டம், புத்திரன்கோட்டை கிராமம். பி.காம்., எம்.பி.ஏ. படித்து முடித்த கையோடு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி கிடைத்தது.

கடந்த 2008-ம் ஆண்டில் பாண்டேஸ்வரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதியை மணந்தேன். என் கணவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்தார். விவசாய குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் விவசாயத்துக்கு தொடர்பில்லாமல் வாழ்ந்துவந்தோம்.


ரசாயன உரமே காரணம்

அப்போது, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டோம். ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதே இதற்கு காரணம் என்பதை உணர்ந்தோம். ஆகவே, நாங்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, இயற்கையோடு இணைந்து வாழ முடிவு செய்தோம். அதன்படி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுவந்த என் கணவரும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த நானும் எங்கள் பணிகளை உதறிவிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

முதலில், கீரை வகைகளை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை விவசாய முறையில் பயிரிட்டோம். பிறகு, பாரம்பரிய நெல் வகைகளையும் பயிரிட்டு வருகிறோம்.

அதிகாரம் தேவை


இந்நிலையில், இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பாண்டேஸ்வரம் கிராம மக்களின் வாழ்க்கை முறை கொஞ்ச கொஞ்சமாக மாறி வருவது தெரிந்தது. ஏரியில் மண் திருட்டு, பெருகி வரும் செங்கல் சூளைகள் உள்ளிட்ட காரணங்களால் பாண்டேஸ்வரம் பகுதியில் விவசாயத்தை தொடர முடியாமல் போகும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், பாண்டேஸ்வரம் அரசு பள்ளியை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை தன்னார்வலர்களாக இருந்து செய்யக்கூட ஊராட்சித் தலைவரின் அனுமதி தேவையாக உள்ளது.

ஆனால், பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் தேர்தலின் போது செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கும் மனநிலையிலேயே உள்ளனர். எனவே, அதிகாரம் நம் கையில் இருந்தால், மக்கள் நலப் பணிகளை எளிதாக செய்யலாம் என்பதற்காக பாண்டேஸ்வரம் ஊராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட்டேன்.

என் கணவரின் தாத்தா, அப்பா உள்ளிட்டவர்களுக்கு இருக்கும் நீண்டகால அரசியல் அனுபவம், ஊராட்சியில் அரசுப் பள்ளி உள்ளிட்டவற்றுக்கு நிலம் வழங்கியது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 3 முறை சென்று எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவரித்தது ஆகியவற்றால் எனக்கு ஊராட்சி தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல்கட்ட பணிகள்

பொதுமக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி பாண்டேஸ்வரத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லா ஊராட்சியாக மாற்றுவது, கிராமம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தெருவிளக்குகள், தடையில்லா குடிநீர், பஸ் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை எனது முதல் கட்டப் பணியாகும். இவ்வாறு ரேகா ராமு தெரிவித்தார்.
சென்னை புத்தக காட்சி நாளையுடன் நிறைவடைகிறது: இதுவரை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்



சென்னை

பபாசியின் புத்தகக் காட்சியை இதுவரை 10 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 43-வது புத்தக காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 2 கோடி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக காட்சியை பார்வையிட தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

நடப்பாண்டில் குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திர நாவல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் புத்தக காட்சி நாளை (ஜனவரி 21) முடிவடைய உள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும், புத்தக விற்பனையும் சுமார் ரூ.15 கோடியை தாண்டும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சாலைகள் மாடுகளுக்கு அல்ல!

By வெ. இன்சுவை | Published on : 18th January 2020 02:33 AM |


நான் பள்ளியில் படிக்கும்போது கட்டுரைப் பயிற்சியில், தெருவில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் குறித்து மாநகராட்சி ஆணையருக்குப் புகார் கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது என் பெயரப் பிள்ளைகளுக்கும் இந்தப் பயிற்சி தொடர்கிறது.

தலைமுறைகள் தாண்டியும் நம் நாட்டில் இந்தப் பிரச்னை தீர்வதாக இல்லை. புகார் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுத இன்னமும் எவருக்கும் சொல்லித் தரவில்லைபோலும். அதனால்தான் இந்த மாடு, நாய் தொல்லை தீராத பெரிய தலைவலியாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிலைமையின் தீவிரத்தைக் கண்டு தார்மிகக் கோபம் கொள்ளும் பெரியவர்கள், ஊடகங்களின் ஆசிரியர் பகுதிக்கு இது குறித்து கடிதம் எழுதி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்?

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளில் இவை சாவதானமாக நடந்து போகின்றன; நின்று கொண்டிருக்கின்றன; படுத்துக் கிடக்கின்றன. வண்டிகள் வருவதை அவை பொருட்படுத்துவதே இல்லை. நாம் விரட்டினாலும் அசையாமல் நிற்கும். வேகமாக வாகனம் ஓட்டிக் கொண்டு வருபவர்களால் சட்டென வாகனத்தை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். அதன் காரணமாக கை, கால், எலும்புமுறிவு, உயிர்ச் சேதம் என ஏற்படுகிறது. புறநகர்த் தெருக்களில் மாடுகளுக்கு நடுவே புகுந்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டியுள்ளது.

தெரு நாய்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. ஒரு தெருவில் குறைந்தது பத்து நாய்களாவது திரிகின்றன. அவை எப்போது யாரைக் கடிக்கும் என்று தெரியாது. திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வருபவர்களைத் துரத்தும். நான்கு நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்தும்போது குலை நடுங்கிப் போகிறார்கள். சில சமயம் அவர்களை அந்த நாய்கள் கடிக்கவும் செய்கின்றன. இந்த நாய்களுக்கு எப்போது வெறி பிடிக்கும் என்று நமக்குத் தெரியாது. அப்படி வெறி பிடித்த நாய்களிடம் கடிபட்டு ரேபீஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பச்சிளம் குழந்தைகளைக் குதறிப் போடுகின்றன.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் நாய்க் கடிக்கு உள்ளாகிறார்கள். மருத்துவமனைகளிலும் வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி மருந்து போதிய அளவு இல்லை. 80 சதவீத அளவுக்குப் பற்றாக்குறை உள்ளதாம். உலகில் வெறிநாய் கடிக்கு பலியாவோரின் எண்ணிக்கை 36 சதவீதம் என்பதுடன், ரேபீஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் படும் அவஸ்தையைக் கண் கொண்டு பார்க்க முடியாது. அது கொடுமை.
சுற்றித் திரியும் மாடுகளும், நாய்களும் சாலைகளை அசுத்தப்படுத்துகின்றன. சாலையெங்கும், தெருவெங்கும் சாணமும், நாய்களின் மலமும்தான் விரவிக் கிடக்கின்றன. அந்த அசுத்தத்தை மிதித்துக் கொண்டே மக்கள் போகும் அவலம், அருவருப்பும்கூட. போதாக்குறைக்கு மழையும் பெய்து விட்டால், சாலையில் கால் வைப்பதற்கே மனம் ஒப்ப மறுக்கிறது. ஏற்கெனவே நம் தெருக்கள் தூய்மையற்றவை. இந்த நிலையில் இந்த விலங்குகளின் கழிவுகளும் சேர்ந்து விடுகின்றன.

மாடுகள் மிரண்டு ஓடிவரும்போது வாகன ஓட்டிகள் பயந்து கீழே விழுந்து விடுகின்றனர். கடை வாசலில் நம் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே போய் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால், வாகனத்தில் மாட்டியிருந்த பையிலிருந்து காய்கறிகளையும், பழங்களையும், கீரைகளையும் மாடுகள் தின்று கொண்டிருக்கும். காய்கறிகடைக்காரர்களுக்கும், பழக்கடை உரிமையாளர்களுக்கும் அவற்றைத் தின்ன வரும் மாடுகளை விரட்டுவதே பெரிய வேலையாகிவிட்டது.

நாய்களும், மாடுகளும் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை இழுத்து வெளியே போட்டு விடுகின்றன. அதனால் தெருவெல்லாம் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. அந்த இடம் முழுவதும் ஈக்கள் மொய்க்கும், துர்நாற்றம் கடுமையாக இருக்கும். நமக்குத்தான் எல்லா அசெளகர்யங்களும் சில நாள்களில் பழகிப் போய் விடுமே! "இங்கே இப்படித்தான்', "இங்கே எதுவும் மாறப் போவது இல்லை' என்ற முணுமுணுப்போடும், எரிச்சலோடும் அந்த இடத்தைக் கடந்து விடுவோம்.

சொந்தப் பிரச்னைகள் நம்மைத் துரத்தும்போது பொதுப் பிரச்னைக்குக் கொடி தூக்க நமக்கு ஏது நேரம்?

முக்கியமான, போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளையாவது தொடர்புடையவர்கள் முறையாகப் பராமரிக்கலாம் அல்லவா? சாலைகளில் மாடுகளைத் திரியவிடக் கூடாது என்பது சட்டம். மீறினால் அவ்வாறு திரியும் மாடுகளைப் பிடித்துக் கொண்டுபோய் அடைத்து விடுவர், மாட்டின் உரிமையாளர் சென்று அபராதத் தொகையைச் செலுத்தி அந்த மாட்டை மீட்டுக் கொண்டு வர வேண்டும். 

இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுபோல நடந்து கொண்டிருக்கிறது. மாடுகளோ நூற்றுக் கணக்கில் திரிந்து கொண்டிருக்கின்றன, இவர்களோ ஒரு சில மாடுகளை மட்டுமே பிடித்துக் கொண்டு போகின்றனர். அபராதம் செலுத்தி மீட்டு வருவார்கள். ஆனால், மறுநாளே அந்த மாடுகள் மறுபடியும் சாலைகளுக்கு வந்து விடும். காரணம், மாடு வளர்ப்பவர்களிடம் மாடுகளைப் பராமரிக்க இடம் இருக்காது.

மாட்டுத் தொழுவம் என்ற ஒன்றே இல்லாமல் நிறைய மாடுகளை வளர்க்கிறார்கள். பராமரிப்புச் செலவு மிச்சம், மாடுகளுக்குத் தீவனம் வைக்க வேண்டாம், தண்ணீர் காட்ட வேண்டாம்; சாணம் அள்ள வேண்டாம், காலையும், மாலையும் பாலைக் கறந்த பிறகு, அவற்றை விரட்டி விடுகின்றனர். 

அரசு என்ன சட்டம் போட்டாலும் அவர்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள். அக்கம்பக்கத்தினரால் அவர்களிடம் வாயைக் கொடுத்து மீள முடியுமா? மெளனமாய் பொருமிக் கொண்டிருக்க மட்டுமே அவர்களால் முடியும். அடாவடி நபர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியின் அடையாளத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகளுக்குப் பயப்படுவதில்லை.

மாநகராட்சி, பேரூராட்சி தரப்பில் உள்ள பிரச்னை என்னவென்றால் அவர்களிடம் இதற்கு போதுமான பணியாளர்கள் இல்லை. அடுத்து, பிடித்துக் கொண்டு போகும் மாடுகளை அடைத்து வைப்பதும், அவற்றுக்குத் தீவனம் கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது. அபராதத் தொகையைக் கணிசமாக உயர்த்தி அதைக் கொண்டு இன்னும் கூடுதல் நபர்களை இந்தப் பணியில் அமர்த்தலாம்.

கார் நிறுத்த இடவசதி இல்லாதவர்கள் கார் வாங்கி தெருவில்தானே நிறுத்துகிறார்கள்? தெருக்களின் இருபுறமும் கார்கள் அடைத்து நிற்க, நாம் செல்லும் வழி குறுகிப் போய் விட்டது. இன்னும் சிலர் அதிக நடமாட்டமில்லாத, வேறு ஏதாவது ஒரு தெருவில் வாகனங்களை விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தட்டிக் கேட்க அந்த அப்பாவி தெருவாசிகளுக்குப் பயம். நம் ஊரில் நியாய தர்மங்களுக்கு இடமில்லையே? 

மாடு வைத்திருப்பவர்களுக்கும் தெருதான் கதி, கார் வைத்திருப்பவர்களுக்கும் தெருதான் கதி. அது பொதுச் சொத்து. எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது.
நாய்களின் தொல்லை என்று புகார் கொடுத்தால் நாய் பிடிக்க வருவார்கள்.

அந்த வாகனத்தையும், நபர்களையும் கண்டவுடன் எல்லா நாய்களும் ஓடி ஒளியும். அரும்பாடுபட்டு அவற்றைத் துரத்தி கயிறைப் போட்டு பிடிப்பதையும், அந்த ஜீவன்கள் கத்துவதையும் பார்த்தால் நமக்கு மனதைப் பிசையும். ஆனால், இப்போதெல்லாம் நாய்களைக் கொல்வதில்லை. அவற்றுக்குக் கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுகிறார்கள். ஆனாலும், குட்டிகள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றின் தொல்லைகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
இதற்கு, மாடு வளர்ப்பவர்கள் மனம் மாறினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இட வசதி இல்லாதவர்களுக்கு மாடு வளர்க்கும் எண்ணமே வரக் கூடாது. தாங்கள் குடி இருக்க வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள், மாடுகளுக்கும் கொட்டகை வேண்டும் என்று நினைக்க வேண்டும். தங்களின் வருமானத்துக்காக அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது.

அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி வேண்டும் என்றால், அரசே முன் வந்து ஏதாவது ஓர் இடத்தை ஒதுக்கி அங்கே பலர் சேர்ந்து கூட்டுப் பால் பண்ணை அமைக்கவோ அல்லது ஒவ்வொருவருக்கும் மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான இடமோ தரலாம்.
அருகிலேயே அதற்கான தீவனத்தையும் பயிரிட்டுக் கொள்ளச் செய்ய வேண்டும். அங்கே சேகரிக்கப்படும் சாணத்திலிருந்து சமையல் எரிவாயு தயாரிக்கலாம். இது சாத்தியமில்லை என்றால், அவர்களுக்கு வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம்.

மாடுகளை முறையாகப் பராமரிக்காமல் சாலைகளில் அலைய விட்டு, நெகிழியையும், குப்பைகளையும், சுவரொட்டிகளையும் தின்ன வைத்து, பலரிடம் வசவும், அடியும் வாங்க வைப்பது சரியா? இவற்றால் பலர் விபத்துக்குள்ளாகி உயிர் விடுவதால் எத்தனை குடும்பங்கள் அநாதைகளாகிப் போகின்றன தெரியுமா?
நம் உரிமைப் பொருள் நம் எல்லைக்குள் இருப்பதுதானே சரி? நம் சுயநலத்துக்காக நம் தெருக்களையும், சாலைகளையும் அசிங்கப்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்யலாமா? மாடு வளர்ப்பவர்கள் உணர வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

NEWS TODAY 29.01.2026