Wednesday, January 22, 2020
Kerala HC Allows Advocate Commissioner To Serve Notice Through Whatsapp/Email [Read Order]
Kerala HC Allows Advocate Commissioner To Serve Notice Through Whatsapp/Email [Read Order]: In a notable development, the High Court of Kerala has allowed an Advocate Commissioner to serve notice on the parties through Whatsapp/E-mail, Fax whichever is practicable.This happened in a case...
வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரி சோதனை
Added : ஜன 22, 2020 01:56
சென்னை: தமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான, 50 இடங்களில், வருமான வரி துறையினர், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர், எம்.வி.முத்துராமலிங்கம். இவர், 1986ல், சென்னை, முகப்பேரில், தன் தாயார் பெயரில், வேலம்மாள் மெட்ரிக் பள்ளியை துவக்கினார். பின், வேலம்மாள் அறக்கட்டளை துவங்கி, சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை, தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில், பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லுாரிகளை துவங்கினார்.தற்போது, இந்த அறக்கட்டளையின் கீழ், 56 பள்ளி, கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த கல்வி குழுமம் மீது, வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து, சென்னை, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், குழுமத்திற்கு சொந்தமான, 50 இடங்களில், 250 வருமான வரி அதிகாரிகள், நேற்று காலையில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:வேலம்மாள் கல்வி குழுமத்தின் மீது, வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, குழுமம் தாக்கல் செய்திருந்த, பல ஆண்டு வருமான வரி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், சொத்து விபரங்களில், பல்வேறு முறைகடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த கல்வி குழுமங்களில், சோதனை நடத்த திட்டமிடப்பட்டு, நேற்று துவங்கப்பட்டது. சோதனையின் முதல் நாளில், கணக்கில் காட்டப்படாத பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்புகள், சோதனை முடிவுக்கு பின் தெரிய வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'மிட் நைட்'... 'மிடில் பெர்த்'...'டமார்' 'பரிதாப' ரயில் பயணி காயம்
Added : ஜன 22, 2020 00:10
மதுரை, சென்னை தாம்பரம்- நாகர்கோவில் விரைவு ரயிலில் இரவில் மிடில் பெர்த் கழன்று விழுந்து பயணி ஒருவர் காயம் அடைந்தார்.

ஜன. 20 இரவு 7:20 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்ட விரைவு ரயில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'எஸ் 10' பெட்டியில் பயணிகள் துாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது 'மிடில் பெர்த்' ஒன்று கழன்று விழுந்தது. இதில் இருந்த பயணி கீழே விழுந்ததில் 'லோயர் பெர்த்'தில் துாங்கிய பயணி கடம்பூர் தர்மராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. சக பயணிகள் அவரை மீட்டனர்.
ரயில் மதுரை வந்ததும் 'பெர்த்'தை பயணிகள் சரி செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. தர்மராஜுக்கு முதலுதவி அளிக்கவும் யாரும் வரவில்லை. இதனால் அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த ரயில் நாகர்கோவில் சென்றது.'இச்சம்பவம் குறித்து எந்த தகவலும் இல்லை' என ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயில் இயங்கும் சில ரயில்களில் பராமரிப்பு இல்லாத பழைய பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அந்த பெட்டிகளில் கொக்கியை இணைத்து 'மிடில் பெர்த்'தை தொங்கவிடுவது சிரமமாக உள்ளது. இரண்டு கொக்கிகளில் ஒன்றைத்தான் இணைக்க முடியும். அந்த பகுதியில் 'சீட்' கிழிந்தும் இருக்கும்.பயணிகள் கூறுகையில், 'ஓரிரு நாட்களுக்கு முன் சிதம்பரம் அருகே ஒரு ரயிலில் ஜன்னல் தானாக கீழே இறங்கி பயணியின் கைவிரல் துண்டானது. மயிலாடுதுறையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாத பழைய பெட்டிகளை அகற்ற வேண்டும்' என்றனர்.
'அவரே முட்டிக்கிட்டார்''மிடில் பெர்த்' விழுந்தது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட விளக்கம்:'மிடில் பெர்த்' உடையவில்லை; அது அப்படியே உள்ளது. அந்த பயணி கவனக்குறைவாக 'பெர்த்'தில் உள்ள குமிழில் மோதிக்கொண்டார். இதுகுறித்து அறிந்தவுடன் தனியார் மருத்துவமனை ஊழியர் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. பயணிக்கு வெளிக்காயம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி
Added : ஜன 21, 2020 22:16
சூரத்: குஜராத்தில், ஓர் இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகனின் தந்தைக்கும், மணமகளின் தாய்க்கும் திடீரென காதல் மலர்ந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடினர். இதனால், இளம் ஜோடியின் திருமணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. காதல் கைகூடவில்லைகுஜராத்தின், சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜேஷ், 48. தொழில் அதிபரான இவரது மகனுக்கு, அதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன், சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், சூரத்தில் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், ராஜேஷை, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காணவில்லை. இது குறித்து, அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது தான், மணமகளின் தாய் ஸ்வாதியையும், ஒரு வாரமாக காணவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:ராஜேஷ், ஸ்வாதி ஆகியோர், இளம் வயதில், அருகருகே உள்ள வீடுகளில் வசித்துள்ளனர். இருவரது குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்திருக்கிறது.
அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். கால சுழற்சியில், அவர்களது காதல் கைகூடவில்லை. மீண்டும் மலர்ந்ததுஇருவரும், வேறு வேறு நபர்களை திருமணம் முடித்தனர். இந்த நிலையில் தான், நண்பர்கள் மூலமாக, அவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு நடந்தது. இதற்கிடையே, ராஜேஷ் - ஸ்வாதி இடையே, இளமைக்காதல் மீண்டும் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் வீடுகளை விட்டு வெளியேறி, தலைமறை வாகி விட்டனர். பெற்றோரின் திடீர் காதலால், இளம் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புத்தக கண்காட்சி கோலாகல நிறைவு; ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
Added : ஜன 22, 2020 02:17
சென்னை : தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம், புத்தக கண்காட்சி நடத்த, 'பபாசி' நிர்வாகத்திற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., அரங்கில், சென்னை புத்தக கண்காட்சி, கடந்த, 9ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.நிறைவு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழர்கள், கல்வெட்டுகளிலும், பனை ஓலைகளிலும், அதன் தொடர்ச்சியாக ஏடுகளிலும், தமிழை எழுதி வளர்த்தனர். தமிழர்கள், படிப்பதிலும், எழுதுவதிலும் எப்போதுமே சிறப்புடன் இருந்துள்ளனர்.
புதிய எழுத்தாளர்கள்,நாட்டின் பழமை, வரலாறு, சமூக நீதி, நாட்டு பற்று உள்ளிட்டவற்றை வளர்க்கும் வகையில் எழுத வேண்டும். தங்களின் எழுத்துகளுக்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து முயற்சித்து, சமூகத்தை முன்னேற்ற வேண்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' அமைப்பில், தொடர்ந்து நுால்களை பதிப்பித்து வரும், அனைவரையும் பாராட்டுகிறேன். பதிப்பு பணி, தொழில் அல்ல; சமூக பணி. 25 ஆண்டுகள், தொடர்ந்து பதிப்பு துறையில் உள்ளவர்களுக்கு, விருது வழங்குவதில், பெருமை அடைகிறேன்.
சென்னையில், புத்தக கண்காட்சி நடத்த, ஒவ்வொரு ஆண்டும், 75 லட்சம் ரூபாய் வழங்குவதாக, முதல்வர் அறிவித்தார். தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம், புத்தக கண்காட்சி நடத்தும் வகையில், பபாசி நிர்வாகத்தினர், மூலதன நிதியை உருவாக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக, 5 லட்சம் ரூபாய் நிதியை வழங்குகிறேன். இந்த சிறு தொகை, முதல் ஆதாரம் தான்; தொடர்ந்து வழங்குவேன்.இவ்வாறு, அவர் பேசினார்.
புத்தக கண்காட்சி குறித்து, 'பபாசி' நிர்வாகத்தினர் கூறுகையில், '13 நாட்கள் நடந்த புத்தக கண்காட்சிக்கு, 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். 800 புத்தக அரங்குகளில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. இவை, கடந்தாண்டை விட, 20 சதவீதம் அதிகம்' என்றனர்.

'நீட்' பயிற்சியை கைவிட அரசு தீவிர ஆலோசனை
Updated : ஜன 22, 2020 00:34 | Added : ஜன 21, 2020 23:44 |
சென்னை, 'நீட்' தேர்வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் இந்த தேர்வுக்கான பயிற்சியை கைவிடுவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு முடித்தவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதனால் அவர்களால் தரவரிசை பட்டியலில் முன்னிலைக்கு
வந்து மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
இந்நிலையை போக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. தனியார் மையங்கள் வாயிலாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சி அளிக்கும் தேர்வு மையத்தை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் தேர்வுக்கான கற்பித்தல் பயிற்சி அளிக்கப் பட்டது. அவர்கள் வழியாக நீட் சிறப்பு பயிற்சியை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலின் சார்பில் நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
இதையும் நீட் தேர்வையும் எதிர்த்து இரண்டு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது.தற்போது நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருப்பதால் அரசின் சார்பில் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டால் அது கொள்கை முரண்பாடாக இருக்கும் என பள்ளி கல்வித்துறைக்கு சட்ட வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நீட் பயிற்சியை நடத்தாமல் கைவிடுவது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104
Updated : ஜன 22, 2020 04:48 | Added : ஜன 22, 2020 04:46
பரேலி : உத்தர பிரதேசத்தில், 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், ஆத்திரம்அடைந்த, வி.ஏ.ஓ., வழங்கிய பிறப்பு சான்றிதழ்களில், இரண்டு குழந்தை களின் தற்போதைய வயது, 102 மற்றும் 104 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, பரேலி மாவட்டம் பேலா கிராமத்தை சேர்ந்த பவன் குமார், தன் மகன்கள், சுப், 4,சங்கெட், 2, இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் கேட்டு, இரு மாதங்களுக்கு முன், இணையத்தில் விண்ணப்பித்தார். இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க, வி.ஏ.ஓ., சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர், பவன்குமாரிடம், 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க பவன்குமார் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த, வி.ஏ.ஓ.,வும் கிராம தலைவரும், குழந்தைகளின் பிறந்த வருடத்தை, தங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து, பிறப்பு சான்றிதழ் அளித்து உள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள சான்றிதழில், ஜூன், 13, 2016 என்ற, சுப்பின் பிறந்த தேதி, ஜன., 6, 1918 என்றும், ஜன., 6, 2018 என்ற, சங்கெட்டின் பிறந்த தேதி, ஜூன், 13, 1916 என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது. அவர்கள் வழங்கிய பிறப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், குழந்தைகளின் தற்போதைய வயது, 104 மற்றும் 102 ஆகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் குமார்,நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முடிவில், கோர்ட் உத்தரவின் கீழ், வி.ஏ.ஓ., மற்றும் கிராம தலைவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...