Wednesday, August 26, 2020

2019-20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை: ரிசர்வ் வங்கி

2019-20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை: ரிசர்வ் வங்கி

26.08.2020

மும்பை: 2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,632 தாள்களாக இருந்த நிலையில், இது 2019 மார்ச் இறுதியில் 32,910 ஆகவும், 2020 மார்ச் இறுதியில் 27,398 தாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும், 2020 மார்ச் இறுதியில், நாட்டில் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் விகிதம் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டு முதல் இரண்டு தாள்களின் புழக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும், 2019 - 20-ஆம் ஆண்டில் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 20ஆம் ஆண்டில் ரூ.100 (330 கோடி தாள்கள்), ரூ.50 (240 கோடி தாள்கள்), ரூ.200 (205 கோடி தாள்கள்), ரூ.10 (147 கோடி தாள்கள்), ரூ.20 (125 கோடி தாள்கள் அச்சிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

100 ரூபாய் நோட்டுகளை வார்னிஷ் ரூபாய் நோட்டுகளாக அச்சிடும் சோதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி தாமதமாவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலையில் சேர செப்டம்பரில் நுழைவுத்தேர்வு

இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலையில் சேர செப்டம்பரில் நுழைவுத்தேர்வு

26.08.2020

இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 14 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 4 மாநிலப் பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில், இந்தியா முழுவதுமுள்ள தேர்வு மையங்களில் நடைபெறுமென, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக ராஜஸ்தான் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, ஜம்மு, காஷ்மீர், ஜார்கண்ட் ,கர்நாடகா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த மத்தியப் பல்கலைகழகங்களுக்கும், மேலும் 4 மாநில பல்கலைக்கழகங்களான, ராஜுரிலுள்ள பாபா குலாம் ஷா பல்கலைக்கழகம், பெங்களூருவில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பொருளியல் பல்கலைக்கழகம், பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம், ஜோத்பூரில் உள்ள சர்தார் பட்டேல் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களிலும் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில் நடைபெறுமென அனைத்து பல்கலைக்கழகங்களின், ஒருங்கிணைப்புப் பல்கலைக்கழகமான ராஜஸ்தான் பல்கலைக்கழகம் சார்பாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Dailyhunt

ஜப்பானில் கடுமையான வெயில்: 25 பேர் பலி

ஜப்பானில் கடுமையான வெயில்: 25 பேர் பலி  26.08.2020

ஜப்பானில் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் 25 பேர் பலியாகினர், 12,800 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜப்பானிய தீ மற்றும் பேரழிவு மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்களில் 45.4 சதவீத மக்கள் வீட்டிற்குள் இருந்தவர்களும், 17 சதவீத மக்கள் வேலைக்கு சென்றவர்களும் ஆவர்.

பாதிக்கப்பட்ட 12,800 மக்களில், கிட்டத்திட்ட 4 ஆயிரம் பேர் முதியவர்கள். அதில் 387 பேர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாகியுள்ளது.

வருடத்தின் இந்தக் காலகட்டத்தில் ஜப்பான் நாட்டில் எப்போதும் தீவிர வெப்பநிலை பதிவாகும். மேலும், வெயில் காரணமாக உயிரிழப்புகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு, வெயில் காலத்தில் 126 பேர் பலியாகினர் மற்றும் 70,000 க்கும் அதிகமானோர் வெப்ப சமந்தமான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Dailyhunt

இ-பாஸுடன் பயணிப்போரிடம் சோதனைகள் இல்லை

இ-பாஸுடன் பயணிப்போரிடம் சோதனைகள் இல்லை

26.08.2020

சென்னை: இணையவழி அனுமதிச் சீட்டுடன் பயணிப்போரிடம் நெடுஞ்சாலைகளில் சோதனைகள் நடத்தப்படுவது முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், எந்தத் தடையுமின்றி பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனா்.

மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களில் எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இணைய வழி அனுமதிச் சீட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீடிப்பு: இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் அந்த முறை தொடா்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் எழுந்த சிக்கல்கள் களையப்பட்டு கடந்த 17-ஆம் தேதி முதல் ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது.

சுமாா் 20 லட்சம் போ: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இணையவழி அனுமதிச் சீட்டுகளை 20 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து பெற்றுள்ளனா். கடந்த 17-ஆம் தேதி முதல் சென்னை நகருக்கு மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் அனுமதி பெற்று வந்துள்ளனா்.

மேலும், சென்னையில் இருந்து தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றனா். பயணத்தின்போது, நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளில் கடந்த சில நாள்களாக பயணிகளிடையே எந்த சோதனையும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதுகுறித்து, தமிழக அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது எந்தத் தடையும் இல்லாமல் மக்கள் செல்கின்றனா். அவா்கள் தங்களது பயணத்தை முடித்த பிறகு, பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் தரப்பிலோ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பயணம் முடிந்ததும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கிா என விசாரிக்கப்பட்டு, சில நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறாா்கள். இணையவழி அனுமதிச் சீட்டு பெற்ற அடுத்த 12 மணி நேரத்துக்குள் இதற்கான அழைப்புகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு செல்லிடப்பேசிக்கு வருகின்றன.

அதே சமயத்தில், கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைகளிலும், இதர மாநில நெடுஞ்சாலைகளிலும் இணையவழி அனுமதிச் சீட்டுக்காக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகள் இப்போது மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த சில நாள்களாக பயணிகள் தங்களது பயணத்தை சிரமமின்றி எளிதாக மேற்கொண்டு வருகின்றனா்' என்று தெரிவித்தனா்.

Dailyhunt

கொரோனா பரிசோதனைக்கு பயந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மலை உச்சிக்கு ஓடிவிட்டனர்.

Added : ஆக 25, 2020 23:32

சேலம்; கொரோனா பரிசோதனைக்கு பயந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மலை உச்சிக்கு ஓடிவிட்டனர்.

சேலம் மாவட்டம், கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி, தானமூர்த்திகாட்டைச் சேர்ந்த, 53 வயது விவசாயிக்கு, கொரோனா இருப்பது தெரிந்தது.அவரை, கொளத்துார் சுகாதாரத் துறையினர், மேச்சேரி காவிரி பாலிடெக்னிக்கில் தனிமைப்படுத்தினர்.விவசாயி வீடு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுகாதாரத் துறையினர், நேற்று காலை, தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொண்டனர்.

இதற்கு அச்சப்பட்டு, அப்பகுதியில் வசித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகன்கள், அருகிலுள்ள கருங்கரடு மலை உச்சிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.அவர்களை பரிசோதனைக்கு அழைத்தும் வர மறுத்து விட்டனர்.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 17 பேருக்கு பரிசோதனை செய்த சுகாதாரத் துறையினர், முடிவு வெளியான பின், மலைக்கு சென்று, அங்கு பதுங்கியவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
பத்தாவது முறையாக கொரோனா நிவாரணம்

Added : ஆக 26, 2020 06:06





மதுரை:மதுரையில் யாசகம் பெற்று பூல்பாண்டி என்பவர் கலெக்டர் வினய்யிடம் 10வது முறையாக கொரோனா நிதி வழங்கினார்.

பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.துாத்துக்குடியை சேர்ந்த இவர் மார்ச்சில் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று முதல்முறையாக ரூ. 10ஆயிரத்தை மே யில் வழங்கினார்.

அதையடுத்து இதுவரை 10 முறை தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1லட்சம் யாசகம் பெற்று நிவாரணமாக வழங்கியுள்ளார். இவருக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

அவர் கூறியதாவது: என்னை போல யாரும் யாசகம் கேட்டு பிழைக்கக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். பணம் மீது எனக்கு ஆசை இல்லாத காரணத்தால் தான் அதை யாசகம் பெற்று சேவைக்காக பயன்படுத்துகிறேன், என்றார்.

பே.டி.எம்., அமேசானில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு

பே.டி.எம்., அமேசானில் வீட்டு சிலிண்டர் முன்பதிவு

Added : ஆக 26, 2020 00:24

சென்னை; வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'அமேசான், பே.டி.எம்.,' செயலிகளில் பதிவு செய்யும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அந்நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், குரல் வழி தேர்வு, எஸ்.எம்.எஸ்., - இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றில், சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.தற்போது, கூடுதல் சேவையாக, 'பே.டி.எம்., அமேசான்' ஆகிய நிறுவனங்களின் செயலி வாயிலாகவும், சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. அவற்றின் வழியே, சிலிண்டருக்கான கட்டணத்தையும் செலுத்தலாம்.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமேசான், பே.டி.எம்., செயலியில் சிலிண்டர் பதிவு செய்ய, அவற்றில் உள்ள, 'பே பில்' என்ற பகுதிக்கு சென்று, காஸ் சிலிண்டர் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.பின், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவிட்டு, சிலிண்டர் பதியலாம்; காஸ் ஏஜென்சி வாயிலாகவே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 30.03.2026