Monday, December 21, 2020

Candidates Belonging To Reserved Categories Eligible For General Category Vacancies Based On Merit: Supreme Court

Candidates Belonging To Reserved Categories Eligible For General Category Vacancies Based On Merit: Supreme Court: The Supreme Court has observed that the candidates belonging to reserved category, are eligible to fill general/open category vacancies also.The bench comprising Justices Uday Umesh Lalit, S. Ravindra...

அரிசி கார்டுக்கு மாற மீண்டும் அவகாசம்?


அரிசி கார்டுக்கு மாற மீண்டும் அவகாசம்?

Added : டிச 21, 2020 05:03

சென்னை: சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை அரிசி வகைக்கு மாற்றுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்த நிலையில், அதை மேலும் நீட்டிக்கும்படி, தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை, அரிசி வகைக்கு மாற்ற, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது சென்னையில் உணவு வழங்கல் துறையின் உதவி ஆணையர்கள்; மற்ற மாவட்டங்களில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பிக்க, இம்மாதம், 5ம் தேதி முதல் நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.

பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால், பல சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி வகைக்கு மாறாமல் இருந்தனர். இதனால், மொத்த சர்க்கரை கார்டுதாரர்களில், பாதி பேர் கூட மாறவில்லை. இந்நிலையில், முதல்வர்இ.பி.எஸ்., அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட இருப்பதாக, நேற்று முன்தினம் மதியம் அறிவித்தார்.இதனால், பெரும்பாலான சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுக்குமாறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கார்டு மாற்றுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இந்த அவகாசத்தை நீட்டிக்குமாறு, அரிசி வகைக்கு மாறாத சர்க்கரை கார்டுதாரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பரிசு ரூ.2,500 வங்கி கணக்கில் செலுத்தப்படுமா?


பொங்கல் பரிசு ரூ.2,500 வங்கி கணக்கில் செலுத்தப்படுமா?

Added : டிச 21, 2020 04:48

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, ஆண்டு தோறும், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்தாண்டு பொங்கல் பரிசு தொகையாக, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பில், 'பொங்கலை முன்னிட்டு, 2.06 கோடி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய்; தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு வழங்கப்படும்.'ஜன., 4 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு முன், எந்த தேதிக்கு கடைக்கு வர வேண்டும் என்ற விபரம்அடங்கிய டோக்கன், கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளதால், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் அவசரத்துடன், 'முதலில் வாங்க வேண்டும்' என்ற எண்ணத்துடனும், பலரும்,கடைகள் முன் கூட்டம்சேருவர். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.தங்கள் முன்னிலையில் தான், பணத்தை வழங்க வேண்டும் என, ஆளுங்கட்சியினரும், கடைகள் முன் கூடுவர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினரும் வர வாய்ப்புள்ளது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம்.இதை தவிர்க்க, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், ஒவ்வொரு கார்டுதாரருக்கும், பொங்கல் பொருட்களுடன், 2,500 ரூபாயை வழங்க, அதிக நேரமாகும். பலரும், பணம் வாங்கவே முன்னுரிமை தருவர். மத்திய அரசின், 'ஆதார்' எண் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான ஏழை மக்கள், வங்கி கணக்குகளை துவக்கியுள்ளனர். வங்கி கணக்கும், 'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களிடம் இருந்து, அவர்களின் ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை பெறலாம். பொது வினியோக திட்ட இணையதளம் வாயிலாகவும், வங்கி கணக்கு விபரங்களை பெறும் வசதி உள்ளது. இந்த பணியை, ஐந்து நாட்களுக்குள் முடிக்கலாம். பின், கார்டுதாரரின் வங்கி கணக்கிற்கு, பொங்கல் பரிசு தொகையான, 2,500 ரூபாயை நேரடியாக வரவு வைக்கலாம். இந்த முறையால், கடைகளில் கூட்டம் சேருவது தடுக்கப்படும். பணம் வழங்குவதிலும் முறைகேடும் நடக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

ஜன., 1 முதல் இதெல்லாம் மாறுது


ஜன., 1 முதல் இதெல்லாம் மாறுது

Updated : டிச 21, 2020 00:00 | Added : டிச 20, 2020 22:35 |

புதுடில்லி:அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம் உட்பட, பல புதிய நடைமுறைகள், வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய மாற்றங்கள்:

* மின்னணு முறையில், சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இருப்பது, அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

* இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு, 'பாசிடிவ் பே' என்ற புதிய முறை கட்டாயமாகிறது. அதன்படி, அந்த காசோலையின் எண், யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை, வங்கிக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்

* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, 'ஸ்வைப்பிங் மெஷினில்' செலுத்தாமலேயே, பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது சுய விருப்பத்தில் அவரவர் பதிவு செய்து கொள்ளலாம்

* ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தற்போது, மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இனி, காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதனால், 94 லட்சம் பேர் பயன் பெறுவர்

* வரும், ஜன., 15ம் தேதி முதல், தொலைபேசிகளில் இருந்து, மொபைல் போன்களை அழைக்கும்போது, அந்த எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்

* 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம், சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது

* பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள்,ஜன., 1 முதல், கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலையேற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MGRb Legacy


 

STUDENTS OF SASTRA GET 2300 JOB OFFERS


 

CBSE TO ANNOUNCE BOARD EXAM


 

NEWS TODAY 28.01.2026