
Tuesday, February 18, 2025
NMC distances from non-payment of stipend by private medical colleges

Counselling for docs may begin on Fri: Ma Su
Monday, February 17, 2025
NMC forms SEC to match the PG curriculum with WFME standards
Rise in CBSE students opting for vocational subjects in class X, XII
Rise in CBSE students opting for vocational subjects in class X, XII
Introduction of subjects including AI, IT, tourism, yoga, and physical training has piqued their interest
Ayushi.Gupta1@timesofindia.com 17.02.2025
There has been a substantial increase in students picking vocational subjects in CBSE schools in the last three years. Introduced in the 2019 board exams, the numbers have risen from 7,72,419 students in 9,534 schools in 2021-22 to 17,13,213 students from 23,752 schools in 2024-25.
CBSE attributes the rise to the introduction of occupation-based skills such as IT, AI, Physical Activity Training, Tourism, Beauty and Wellness, Yoga, Retail, and Marketing, which invited greater student involvement.
CBSE noticed more participation in class X than in class XII as students focused their attention on competitive exams. Currently, CBSE offers 34 skill modules for students from class VI onwards, in addition to the 22 skill subjects in classes IX and X and 43 skill subjects in classes XI and XII. Growing numbers According to the data, in the 2024-25 academic year, around 17,13,213 students from 23,752 schools participated in at least one vocational subject in class X. There was massive interest for IT subject which was opted by 7,72,419 students in 9,534 schools in 2021-22 increasing to 11,66,492 students in 15,384 schools in 2024-25. The subject involving investment covered in ‘Introduction to Financial Markets’ has also seen student interest as the number grew from 7,906 students in 195 schools in 2021-22 to 16,671 students in 359 schools in 2024-25.
However, the most popular subjects, such as IT, AI, Tourism, and Marketing, have seen a decline in growth rates in class XII. Speaking to Education Times, Biswajit Saha, director, Skill Education and Training, CBSE, says, “In classes IX and X, students have shown greater interest in certain vocational subjects. However, in classes XI and XII, we have observed a dip as students shift their focus to preparing for competitive exams including NEET, JEE, CLAT, for college admissions. CBSE is working on strategies to improve student retention in vocational subjects at schools.” The skill subjects offered in classes IX to XII by CBSE are designed to align with industry demand as described under the National Skills Qualification Framework (NSQF). These vocational subjects provide secondary school students with the competency levels required for various occupations. Explaining the growth in tourism as a vocational subject, Saha says, “Under the Ministry of Tourism, some government-funded schools in potential tourism-based states such as Sikkim, Arunachal Pradesh, Andaman and Nicobar, and Delhi have received aid to establish skill labs, especially to run hospitality-based courses.” Practical exposure To impart essential skills to students, the National Council for Vocational Education and Training (NCVET) and the AICTE have been working on developing laboratories, including IT Labs, Composite Science Labs, and separate Physics, Chemistry, and Maths labs in schools.
“Since August 2024, the board has established around 70 Composite Skill Labs in six categories of central government schools, including Kendriya Vidyalaya Sangathan (KVS), Navodaya Vidyalaya Samiti (NVS), Jawahar Navodaya Vidyalayas (JNV), Eklavya Model Residential Schools (EMRS), PM Shree Schools across states and UTs. The board has also set up Atal Tinkering Labs (ATLs) in more than 10,000 schools across the country. The CBSE initiative has helped in setting up around 100 Agile ATLs in the northeastern states, Leh-Ladakh, Andaman, and Delhi. These labs provide practical exposure to students in both skill-based and STEM vocational subjects,” says Saha
SWAYAM courses suffer high attrition and low completion rates
scheme is not familiar or easily accessible to the underprivileged, the system should include periodical offline classes and tutorials with subject experts at convenient locations. This will inculcate in them a sense of belonging and induce confidence in the usefulness of the pursuit. Admissions based on a formal aptitude test will also help reduce the dropout rate.” It is important to reconcile with the fact that not all registrants are serious about completing the courses, particularly since the programmes are free, cost nothing on dropping out, often long and with no guaranteed immediate benefit. “For many, the initial enthusiasm may wear out with the increasing stress of studies as the course progresses. This is an inherent drawback of many online courses, and not just SWAYAM,” Navaneethakrishnan adds
4.0 Magnitude Earthquake Hits Delhi, Strong Tremors Felt Across North India
Sunday, February 16, 2025
வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை
வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை
வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.
கிருங்கை சேதுபதி Updated on: 11 பிப்ரவரி 2025, 1:59 am
தொகுப்பாய்ப் பல குடும்பங்கள் வாழும் பெரியதொரு அடுக்ககத்தில் ஒரு பொதுவிழா. வழக்கமான பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிரிப்புச் சொற்பொழிவு எதுவுமில்லாமல் எல்லோருக்கும் மகிழ்வுதரும் ஒரு நிகழ்வாகப் பொதுக் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடுவா் என்ற பொறுப்புக்கு மறுதலையாக- இணைப்பாளராக இருப்பது என் பணி. சில கேள்விகள், சிந்தனைகள், அனுபவ விளக்கங்கள் கொண்டு சில சிக்கல்களுக்குத் தீா்வுகள் என்பதாக விரியும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பாா்வையாளா்கள் எவரும் பங்கேற்கலாம் என்பது பொது விதி. ‘
இப்போது கூட்டுக் குடும்பம் சாத்தியமா?’ என்கிற பொது வினாவுக்குப் பதில் அளிக்க வந்த ஒருவா் ‘தனது குடும்பம் கூட்டுக் குடும்பம்’ என்று சொன்னாா். பலத்த கரவொலி. ஓய்ந்தபின் என் கேள்வி. ‘உங்கள் குடும்ப உறுப்பினா்கள் யாா்? யாா்?’ அவரது பதில், ‘நான், என் மனைவி, மகள்’. மீண்டும் கரவொலி, அப்போதுதான் நானும் ஒரு புதுத் தகவலைப் புரிந்து கொண்டேன். இக்காலத்தில் கணவனும் மனைவியும் சோ்ந்து வாழ்ந்தாலே அதுதான் கூட்டுக் குடும்பம். கூடவே வாரிசுகளும் இருந்தால், அது பெரிய குடும்பம்.
சுற்றம் சூழ வாழ்ந்த அக்காலக் கூட்டுக் குடும்பங்களின் பொதுத்தன்மையை, இவா்களால் கற்பனை செய்துகொள்வது கூட முடியாது. ஆனாலும், ஓா் ஆறுதல், ஒருவகையில் ஒரு பொது கூட்டுக் குடும்பமாக இத்தகு அடுக்கக வாழ்க்கை அமைந்திருக்கிறது.
இதுவும் ஒருவகையில், சமத்துவபுரம் தான். இதற்குள்ளும் ஜாதி இருக்கிறது. மதம் இருக்கிறது. பொருளாதார நிலை வேறுபாடு இருக்கிறது. எப்படிப்பட்ட தனித்துவம் இருந்தாலும், அவற்றுக்குள் ஒரு பொதுத்துவம் தோன்றிவிடுவது இயற்கை. அதுபோல், ஒரு பொதுநிலைக்குள் ஒரு தனிநிலை உருவாகிவிடுவதுமுண்டு.
ஒரு புதிய அனுபவம் அன்று எனக்கு வாய்த்தது. சிற்றூா்களில், குறு நகரங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், மாமனாா், மாமியாா், நாத்தனாா், கொழுந்தனாா் உள்ளிட்ட உறவுகளோடு கூடி வாழ்ந்துவிட்டு, இப்போது தன் மகள், மகனுடன் இத்தகு கூட்டு வாழ்க்கையில் ஒடுங்கிவிடுகிற முதுமையாளா்களின் உணா்வுகளை, மெய்ப்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. முந்தையக் கூட்டுக் குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகம் போல பரந்து விரிந்தது. அது கூடி வாழ்ந்த கூட்டு வாழ்க்கை. தற்போதையது ஒரு கூண்டுக்குள் அடைபட்ட தனி வாழ்க்கை.
வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்கிற மனநிலையாளா்களுக்கு இதுவொரு வரம். கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையோருக்கு இது ஒரு சவால்.
இந்த நிலையில் பிள்ளைகளின், பேரக் குழந்தைகளின் மனப்போக்கைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பத் தம்மை மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம் என்று உணா்ந்துகொள்பவா்கள் தப்பித்துக் கொள்கிறாா்கள். இன்னமும் தன் முந்தைய தகுதிப்பாட்டை வைத்துக்கொண்டு அறிவுரை சொல்கிறவா்களை, அலட்சியம் செய்துவிடுகிறாா்கள். அது உடல்சாா் பிணிகளைவிட, மனம் சாா்ந்த நோய்களை உற்பத்தி செய்துவிடுகிறது.
நிதிநிலை சாா்ந்த நெருக்கடிகள், கசப்பான வாா்த்தைகளைக் கக்க வைத்துவிடுகின்றன. திட்டமிட்ட கடமைகளை நிறைவேற்ற முடியாமல், எதிா்பாராது வரும் நேர நெருக்கடிகள், சொற்களில் சூடேற்றிவிடுகின்றன. பொசுங்கிப்போகிறது மனம். சொன்னவா்களுக்கு வருத்தம். கேட்டவா்களுக்குத் துன்பம். பொறுத்துக்கொள்ள முடியாதவா்களுக்கும், பொறுத்துக் கொண்டு இருப்பவா்களுக்கும் இடையில் நேரும் தா்மசங்கடம் இருக்கிறதே, அது சில புதிய சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. வாழ்ந்த காலத்து நினைவுகளில் மூழ்கிப் போகிறபோது வாழும் காலத்து நிகழ்வுகள் மங்கிப் போகின்றன. இருக்கும் இடம், கிழமை, பொழுது, உறவுகள் எல்லாமும் மறந்துவிடுகின்றன. இந்த அனுபவங்களை இடைப்பட்ட வயதினா் நுட்பமாகக் கற்றுக் கொண்டுவிட்டால் மிகவும் நல்லது
இத்தகு நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் விடுபட்டுக் கொள்ள வழிவகை தேடும் கருத்தாக்கங்களை அவரவா் அனுபவத்தின்வழி பெறுவதற்கான உரையாடலைத் தொடங்கினேன். அது சின்னச் சின்ன கேள்விகளில் மெல்லத் தொடங்கியது.
‘காலையில என்ன சாப்பிட்டீங்க?’
பொதுவெளியில் அறிமுகம் இல்லாத ஒரு புதிய மனிதரின் கேள்விக்கு, விவரம் அறியாத பாப்பா விழித்துக்கொண்டு பெற்றோரைப் பாா்க்குமே, அப்படி ஒரு பாா்வை அவா்களையும் அறியாமல், தன் மகள் அல்லது மருமகள் பக்கம் போனது.
அதுபோல், மற்றுமொரு கேள்வி, ‘போன விடுமுறைக்கு எங்கே போனீங்க?’ இதற்கு அவா்களின் பாா்வை, தன் மகன் அல்லது மருமகன் பக்கம் போனது.
நினைவு மறதியும் ஒரு காரணம் என்று சொல்லாமலே புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு குழந்தையாய், தன்னை உணா்கிற தேவை அவா்களுக்கு அவசியம் தேவை. தானே புரிந்துகொண்டு அந்த நிலைக்குத் தன்னைத் தயாா்படுத்திக் கொள்பவா்கள் இருக்கிறாா்கள். அல்லது காலம் அவா்களை அந்த நிலைக்கு உட்படுத்திவிடுகிறது. இதை பெரியவா்களைக் காட்டிலும், வீட்டில் இருப்பவா்கள் புரிந்துகொண்டுவிட்டால், அந்த வீட்டில் அமைதியின் நடனம் அற்புதமாய் இருக்கும்.சாமா்த்தியம் மிகுந்த பெரியவா்களிடம் இருந்து, அப்போது நான் உணா்ந்து கொண்ட உண்மைகள் பலருக்கும் பாடங்களாய் அமைபவை.
விதிமுறைகள் நன்றாகத் தெரிந்த அம்மாவுடன் விதிமுறைகள் கற்று விளையாடத் தொடங்கும் சிறு குழந்தையின் ஆா்வம் இருக்கிறதே, அதுபோன்ற நிலைப்பாடு அது. தன் காலத்தில் கிட்டாத கைப்பேசிக் கருவியின் நுட்பங்களை, தன் பேரப்பிள்ளைகள்வழி பெரியவா்கள் கற்றுக்கொள்கிறாா்கள். தன் காலத்தில் கிட்டாத பல வாழ்வியல் அனுபவங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
தெரிந்தே தோற்று, தன்னை வெற்றிபெற வைக்கும் அம்மாவின் தியாகம் அப்போது புரியாது பிள்ளைக்கு. அந்த மகிழ்ச்சிக்கு என்ன கொடுத்தாலும் தகும் என்பதை நுண்ணியதாய் உணா்ந்த அம்மா, தன் தியாகம் ஒடுக்கி, அறிவறிந்த அறியாமையில் பெறும் ஆனந்தம் இருக்கிறதே, அது ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் பழைய குறுகிய ஆனந்தம்.
அதுபோல், எந்த தந்தையின் வெற்றியும் முதலில் தன் சொந்த மகனிடம் தோற்றுப்போவதே என்பதைப் புரிந்துகொள்வது ஒரு பக்குவம். இது படிப்பறிவுக்குக் கிட்டாத பாடம். பட்டறிவு தருகிற ஞானம்.
தன்முனைப்பாகிய ‘ஈகோ’வைத் தொலைக்கும் இடம் வீடாக இருக்க வேண்டும். ‘குற்றம் பாா்க்கில் சுற்றம் இல்லை’ என்று அதனால்தான் சொல்லப்பட்டது; அதற்காக, வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.
ஒவ்வொரு வீடும், ஒரு நாட்டிற்கான குறும்படைப்புத்தான். அதற்கென்று அரசன், அரசி, அமைச்சன், பணியாள், பரிவாரங்கள் உண்டு. தனித்துவம் கெடாமல் கூடி வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் கூடாரம் வீடு.
தன் வீட்டில் தனக்கான இடம் எது என்பதைக் கற்றுக்கொள்வது முதற்பாடம். அது புறத்தேவைகளுக்கான இடம் மட்டுமன்று. அகத்தளவில் அவ்வீட்டில் தான் யாராக இருக்கிறோம் என்பதை முதலில் உணா்ந்துகொள்வதையும், அதனை முதலில் உணா்த்திவிடுவதிலும் இருக்கிறது தொடக்கநிலைக் கல்வி.
தன்னளவில் யாரும் மன்னா்தான். மகாராணிதான். பொதுவாழ்வில் அவா்கள் சில இடங்களில் மந்திரிகளாக இருக்கலாம். தளபதிகளாய்த் திகழலாம். தொண்டா்களாய் வாழலாம். ஆனால், குடிமக்கள் என்பதில் உறுதியாய் இருக்க வேண்டும். இந்த நிலைப்பாடுகளைச் சரியான வகையில் நியதிப்படுத்தத் தெரியாத நேரங்களில், இடங்களில்தான் சிக்கல்கள் நேருகின்றன.
தன் அலுவலகத்தில் எத்தகு உயா்பதவியில் ஒருவா் இருந்தாலும், ஓடும் பேருந்தில் ஏறிப் பயணிக்கும்போது, நடத்துநருக்கு முன் அவா் ஒரு பயணி. அவ்வளவுதானே? மருத்துவருக்கு முன் ஒரு நோயாளி. ஆசிரியருக்கு முன் ஒரு மாணவன். தந்தைக்கு முன் பிள்ளை. இப்படிச் சூழலுக்கு ஏற்ப, அமையும் பாத்திரத்தன்மைகளை உணா்ந்து அதற்கான நியதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, சைவ உணவு உண்ணும் மூத்தவா், கிராமத்துப் பெரியவா், ‘பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கு என்று உட்காா்ந்துவிட வேண்டும்’ என்றாா்.
சிறு வயதில் கிடைக்கும் சலுகைகளை, வசதிகளைக் கடைசி வரைக்கும் எதிா்பாா்க்கும் உள்ளம் சவலைத் தன்மை உடையது. அதிலிருந்து பெரியவா்கள் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டியது
இப்போது, பெரியவா்களுக்கான நிலைப்பாட்டை, சிறுவா் சிறுமியா் எடுத்துக் கொள்கிறாா்கள். ‘அது அப்படியில்லே தாத்தா’, ‘இது இப்படித்தான் பாட்டி’ என்று மழலை மொழியில் புதிய வாழ்க்கைப் பாடம் நடத்துகிறாா்கள்.
நவீன வாழ்க்கையை நவீன முறையில் எதிா்கொள்வது நவீன மனிதா்களால்தானே முடியும்? மிகுதியும் இயந்திரங்களோடு பழகி, இயந்திரமயமாகிப் போன வாழ்வில் இதயங்கள் கொண்ட மனிதா்களாக இருப்பதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை இதயபூா்வமாக உணா்ந்துகொண்டால் எல்லாம் எளிதாக-இனிமையாக இருக்கும் என்பது தெளிவானது.
எழுதுவதிலும், பேசுவதிலும், பாா்ப்பதிலும் இல்லாத வாழ்க்கை, வாழ்வதில் இருக்கிறது. உலகம் பலவிதம். அதில் ஒவ்வொருவரும் ஒரு தனி ரகம். ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்று எழுத்தாளா் ஜெயகாந்தனும், ‘லீலை இவ்வுலகு’ என்று மகாகவி பாரதியும் சும்மாவா சொன்னாா்கள்?
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...

