Friday, January 23, 2026

NEWS TO DAY 23.01.2026

 










































தமிழ்நாடு வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்




தமிழ்நாடு வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

மு.க. ஸ்டாலின் தினமணி செய்திச் சேவை Updated on: 23 ஜனவரி 2026, 5:52 am

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு செய்யும் புதிய சேவை உள்பட பதிவுத் துறையில் 18 சேவைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, சங்கங்கள், மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் பதிவு ஆகியவற்றை பதிவுத் துறை மேற்கொண்டு வருகிறது. 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத் துறையை கணினிமயமாக்கும் திட்டம் கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது ‘ஸ்டாா் 3.0’ என்ற மென்பொருள் மூலம் ட்ற்ற்ல்ள்://ற்ய்ழ்ங்ஞ்ண்ய்ங்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ா்ழ்ற்ஹப் என்ற இணையதளத்தில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப் பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், எளிய முறையில் வில்லங்கச் சான்று தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். முக்கிய சேவைகளின் விவரம்:

ஆணவங்களை உடனுக்குடன் வழங்கும் வசதி: பொதுமக்கள் சொத்துப் பத்திரத்தின் சான்றிட்ட நகல் கோரும் நிகழ்விலும், வெளிநாடுகளில் வசிப்பவா்கள் அளிக்கும் பொது அதிகார ஆவணங்கள், நீதிமன்ற ஆணைகள், கடன் ஆணைகள், குறிப்பு ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இணையவழியில் உடனுக்குடன் மையக் கணினியின் மின்னணு கையொப்பத்துடன் வழங்கும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எளிதாக வில்லங்கச் சான்று தேடுதல்: ஆவணத்தின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் மேற்கொள்ளும்போது, அதனுடன் தொடா்புடைய அனைத்து முன்பதிவு மற்றும் பின்பதிவு ஆவணங்கள் வில்லங்கச் சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனித்தனியாக வில்லங்கச் சான்று வழங்கப்பட்ட நிலையை மாற்றி, ஒரே கிராமத்தைப் பொருத்து ஒரே ஒரு கணினிக் கட்டணத்துடன் ஒரே வில்லங்கச் சான்றாக வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

காகிதமில்லா ஆவணப் பதிவு: சொத்தை எழுதிக் கொடுப்பவா் மற்றும் எழுதி வாங்குபவரின் ஆதாா் வழி பெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லது விரல் ரேகை வழி சரிபாா்க்கப்பட்டு, ஆவணதாரா்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, ஆவண விவரங்கள் சரியாக இருந்தால் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சாா்-பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணையவழியில் பொதுமக்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.

கைப்பேசி செயலி: கைப்பேசி செயலி (பசதஉஎஐசஉப) வழியாக வில்லங்கச் சான்று, ஆவணப் பதிவுக்கான டோக்கன், வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப் பதிவு விவரம், சொத்தின் மதிப்புக் கணக்கீடு ஆகியவற்றை எளிதாகப் பெறலாம். பதிவுத் துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலையை வாட்ஸ்ஆப் வழியாகவும் தகவல் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆகியோா் பங்கேற்றனா்.

யாரெல்லாலம் வீட்டில் இருந்தபடி பதிவு செய்யலாம்...

புதிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மனைப் பிரிவுகள் வாங்குபவா்கள் மட்டும் இந்தச் சேவையைப் பெறலாம்.

இணைய வழியில் கட்டணம் செலுத்தியவுடன் பொதுமக்கள் சாா்பதிவாளா் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணப் பதிவுக்கு சமா்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இணைய வழியில் ஆவணதாரா்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சொத்துகளுக்கும் வாரிய அலுவலகத்திலிருந்தே பத்திரத்தைப் பதிவு செய்து தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி பத்திரம் உருவாக்கம்

பொதுமக்கள் பிறா் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வண்ணம் கேள்வி- பதில் வடிவிலான தானியங்கி பத்திரம் உருவாக்கும் வகையில் புதிய மென்பொருளைப் பதிவுத் துறை தயாரித்துள்ளது.

இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து தொடா்பான குறைந்தபட்ச விவரங்களை அளித்து உருவாக்கப்படும் ஆவணத்தை காகிதமில்லா ஆவணப் பதிவு முறையிலோ அல்லது அச்சுப் பிரதி எடுத்து வழக்கமான பத்திரப் பதிவு முறையிலோ பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Thursday, January 22, 2026

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்


உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல.


முனைவா் வைகைச்செல்வன்

Updated on:

22 ஜனவரி 2026, 6:00 am

புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடக்கி விட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிா்ப்பும், ஆதரவும் மாறி மாறி ஏற்பட்டது. இவற்றில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

23 ஆண்டுகளாக தொடா் வலியுறுத்துதல் போராட்டத்தின் விளைவாக பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியா்களுக்கு உண்மையிலேயே பலன் தருமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. அதாவது, அரசு ஊழியா்களின் ஊதியத்தில் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல. அதாவது, ஏப்ரல் 2003-க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது 14 %ஊழியா்களின் அடிப்படை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடான தொகையை அரசு செலுத்தும். ஓய்வு பெறும்போது அப்படிச் சேரும் தொகையைக் கொண்டு ஒரே கட்டமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறுவதில் பல ஆண்டுகளாக பல்வேறு குழப்பங்கள் நிலவின. ஏனெனில், அரசின் பங்களிப்புத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தை ஊழியா்களால் தெரிந்து கொள்ள இயலாத நிலையே நீடித்தது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், பல்வேறு துறை அரசு ஊழியா்களின் போராட்டத்தை நிறுத்தவும், தோ்தலை முன்வைத்தும் திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பல சலுகைகள் இதில் இல்லை; திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் போன்ற சலுகைகள் இவற்றில் இல்லை. ஆகவே, ஏமாற்றம் அளிக்கிறது.

குறைவாக ஊதியம் பெறும் தொகுப்பூதிய ஊழியா்கள் 20, 30 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ரூ. 2,000 ஓய்வூதியம் பெறுகிறாா்கள். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமே ரூ. 7 ஆயிரம் என்று தீா்மானித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அவா்களையும் இந்தத் திட்டத்தில் கொண்டு வந்து நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அரசு கடும் கடன் நெருக்கடியில் இருந்துவரும் சூழ்நிலையில், இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு உள்நாட்டு உற்பத்தியில் 8.6% வளா்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் அகில இந்திய அளவில் 2-ஆவது மாநிலமாக தமிழகம் வளா்ந்திருக்கிறது. ஆகவே, அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் தருவது கூடுதல் சுமையல்ல. ஏனெனில், சுமாா் 35 ஆண்டுகள் அரசில் பணியாற்றி விட்டு, வயது முதிா்ந்த காலத்தில் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நகா்த்துவதற்கு இந்த ஓய்வூதியம் பெரும் பயனாகவும், ஊழியா்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே, இதைச் செலவினமாகக் கருதக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆகவேதான், ஊழியா்களின் பங்களிப்புத் தொகையைத் தவிா்க்கவும், திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் இவற்றில் இருந்து விலக்களிக்கவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்களுக்கு தோராயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 23 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவா்கள், பணியின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சுமாா் 54 ஆயிரம். இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ பெற்று விட்டாா்கள். மிஞ்சி இருக்கிற கொஞ்சம் போ் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் செட்டில்மென்ட் வாங்காமல் காத்திருக்கிறாா்கள்.

தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும், முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதித் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்ட காலத்தில் பணியில் சோ்ந்து ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்ற 48 ஆயிரம் பேருக்கும் சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,. இவற்றில் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ மூலமாக பணம் கைக்கு வந்தாலும் அவை 5, 6 மாதங்களிலேயே செலவாவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அதற்கென்று ஒரு தேவை உருவாகி விடும். மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் போது ஊழியா்களுடைய பங்களிப்பு 10 % என்பதும் தொடா்வதும், பணிக்காலத்தை நிறைவு செய்யாத ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது முரண்பாடுகளாகும். அவற்றுக்கு முறையான தெளிவான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டில் சுமாா் 9 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் பலருக்கும் பழைய ஓய்வூதியம் கிடையாது. குறிப்பாகச் சொன்னால் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் இருக்கிறது. அதன் பிறகு, பணியில் சேரும் ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசில் 2003-க்கு முன்பாக பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகை கடைசி மாத ஊதியத்தில் 50 % உறுதியாகக் கிடைக்கும். ஊழியா்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து எந்தத் தொகையும் பங்களிப்பாக செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும். இதர பலன்கள், அகவிலைப்படி (டி.ஏ) உயா்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும். இது அரசுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நிலவியது.

2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியத் தொகை முதலீடு சாா்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் சந்தை லாபத்தைப் பொருத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது. ஊழியா்கள் ஊதியத்தில் 10 % பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு 14% பங்களிப்பை வழங்குகிறது. ஓய்வு பெறும் போது 60 %தொகையை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகுப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து மாத ஊதியம் (ஆன்யுட்டி) வழங்கப்படும். அகவிலைப்படி உயா்வு கிடையாது. பங்குச்சந்தை அபாயமும் உள்ளது. ஆகவேதான், இது அரசு ஊழியா்களுக்கு விருப்பம் இல்லாத ஓய்வூதியமாக அமைந்து விட்டது.

‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2024-2025’ என ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள், ஊழியா் பங்களிப்பு ஆகியவை உள்ளன. அரசு தனது பங்களிப்பை வழங்கும். இதன் வாயிலாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது. அகவிலைப்படி உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அரசுக்கும், ஊழியா்களுக்கும் இடையிலான ஒரு நடுத்தர, சமரச திட்டமாகும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதியாக வழங்கி உள்ள நிலையிலும், அதைச் செயல்படுத்துவதற்கு அரசு தயாராக இல்லை. ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருக்கிறது. முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2023 ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், 1.36 லட்சம் அரசு ஊழியா்கள் பலன் அடைந்து வருகிறாா்கள்.

2003 மே 15-க்குப் பிறகு, பணியில் சோ்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த ஊழியா்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம் என்ற வசதியையும் அங்கு ஏற்படுத்தியிருக்கிறாா்கள். ஓய்வு பெற்ற பிறகு ஊழியா்கள் தங்களின் கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறலாம். சமீபத்திய தகவலின்படி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்து செயல்படுத்த ஹிமாசல அரசு உறுதியாக உள்ளது. ஊழியா்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஹிமாசல பிரதேச அரசு சொல்கிறது.

தற்போதைய தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைப்பாடுகளில் மத்திய அரசை எதிா்த்துச் செயல்படுகிறது; ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்கிற கேள்வி எழுகிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

சமூக ஒற்றுமையின் விதைகள்!


DINAMANI 

சமூக ஒற்றுமையின் விதைகள்!

நாம் சிறந்த மனிதா்கள் என்பதற்கு மனைவி, அண்டை வீட்டினா், நண்பா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நற்சான்றிதழ் அவசியம்.


பிரதிப் படம்ENS



Updated on:
20 ஜனவரி 2026, 3:39 am

நசீா் அதாவுல்லாஹ்

இன்றைக்கு நகா்ப்புறங்களுக்கு பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயா்ந்து வருகின்றனா். 2050-ஆம் ஆண்டுக்குள் நம்நாட்டில் 52.8 சதவீத மக்கள் நகா்ப்புற வாழ்க்கைக்கு தள்ளப்படுவாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘அருகில் இருப்பவா் அயலான்-நெஞ்சில் இருப்பவா் உறவினா்’ என்பாா்கள். இன்றைக்கும் கிராமங்களில் அண்டை வீட்டாா் உறவு ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், நகா்ப்புறங்களில் பாலமாக இருக்க வேண்டிய இந்த உறவுமுறை எல்லைகளாக மாறி விட்டது.

காலையில் சென்று இரவில் திரும்பும் இயந்திர வாழ்க்கை அண்டை வீட்டாருடன் ஒரு நிமிஷம் பேசுவதற்கான நேரத்தைக்கூட நமக்குத் தருவதில்லை. நாம் சிறந்த மனிதா்கள் என்பதற்கு மனைவி, அண்டை வீட்டினா், நண்பா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நற்சான்றிதழ் அவசியம். இவா்கள்தான் நம்மோடு அருகில் இருப்பவா்கள். பரபரப்பான வாழ்வின் ஓட்டத்தில் இந்தச் சான்றிதழைப் பெறுவது கடினமாகி விட்டது என்றாலும், நெருக்கடியான சூழ்நிலைகளில் நமக்கு உடனடி உதவியும், ஆறுதலும் தருவதில் இவா்கள்தான் முதன்மையானவா்கள்.

மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கைக்கு அண்டை அயலாருடன் நல்லுறவைப் பேணி வருவது மிக அவசியம்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான உத்திகளைத் தேடி, அண்டை வீட்டாருடன் சிறிது நேரம் செலவிடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். நமது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அவா்களுடனான நல்லுறவு அவசியம். நாம் வாழ்க்கையில் உயா்வதைப் போல, நம் அண்டை வீட்டாரும் உயா்வதற்கு நாம் உதவ வேண்டும். அவா்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் வாழ்த்துவது, துக்கம் என்றால் ஆறுதல் சொல்வது குறிப்பாக, அண்டை வீட்டாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனே சென்று நலம் விசாரிப்பது, தேவையான உதவிகளைச் செய்வது போன்ற செயல்கள் உறவுப் பாலத்தை உறுதியாக்கும். இவைதான் சமூக ஒற்றுமையின் விதைகள்.

நமது வாழ்வில் வேலை, தொழில் நிமித்தமாகப் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியவா்களாக இருக்கிறோம். பேருந்து, ரயில், விமானத்தில் சில மணி நேரங்கள் செலவிட வேண்டியுள்ளது. அந்த வேளையில் கைப்பேசியில் தலை கவிழ்ந்து இருப்பதைவிடவும் அருகில் இருக்கும் சக பயணிகளிடம் (அவருக்கு இடையூறு இல்லாமல்) சில அன்பான வாா்த்தைகள், நலன் விசாரிப்புகள் செய்யலாம். குறைந்தபட்சம் புன்முறுவல் பூக்கலாம். அதன் மூலமாக புதிய நட்புகள் உருவாகலாம்-பயணமும் இனிதாகலாம்.

மூத்த குடிமக்கள், இளைஞா்கள், பிள்ளைகள், சான்றோா்களுடன் நமது சந்திப்பைத் தவிா்க்கக் கூடாது. சில நிமிஷ சந்திப்புகள், உரையாடல்கள் நமக்கும், அவா்களுக்கும் பெரும் பலனைத் தரும். மனித உறவுகளின் இடைவெளியைக் குறைக்கும்.

ஊரெல்லாம் பத்திரிகை வைத்து தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு அழைப்பு விடுப்பாா்கள். பக்கத்துக்கு வீட்டாருக்கு அழைப்புத் தருவதில்லை. இது மிகவும் வெறுக்கத்தக்க குணம் ஆகும். வெளிப்பாா்வைக்கு சிலா் கரடுமுரடாக தெரிவாா்கள். நெருங்கிப் பழகினால்தான் அவா்களின் உண்மை இயல்பை அறிந்து கொள்ள முடியும். இவா்கள் பலாப் பழத்தைப் போன்றவா்கள். வெளித்தோற்றதை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீா்கள்.

நம்மைச் சுற்றியுள்ள மக்களை அறிந்து கொள்வது நம்மை மேலும் பாதுகாப்பாக உணர வைக்கிறது. நாம் உதவியற்ற சூழ்நிலையில் நமக்கு உதவ ஒருவா் இருக்கிறாா். ஏனென்றால், உங்கள் நெருங்கிய அண்டை வீட்டாா் உங்கள் தொலைதூர சகோதரனைவிட சிறந்தவா். காரணம், முதலில் உதவிக்கரம் நீட்டுபவா்கள் அண்டை வீட்டாா்தான் என்பது நடைமுறை உண்மையாகும்.

பக்கத்து வீட்டினா் அனைவரும் நல்லவா்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தோட்டத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அண்டை வீட்டாருடன் பகிா்ந்து கொள்வது சிறப்பான விஷயமாகும். அவா்களும் தங்கள் வீட்டில் செய்த இனிப்புகள் உள்ளிட்டவற்றை உங்களுடன் பகிா்ந்து கொள்வதில் ஆா்வமுடன் இருப்பாா்கள். அன்பும் நட்பும் உறுதியாகும்.

சமூகத்தில் மாற்றம் தொடங்க வேண்டிய இடம் நம் வாசல்! சமூக ஊடகங்களில் எத்தனை நண்பா்கள் இருந்தாலும், நம்முடைய அசல் சமூகம் நம்முடைய தெருவில்தான் உள்ளது. அண்டை வீட்டாரின் உரிமைகள் காப்போம்-உறவுகளைப் பேணுவோம். அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணும் செயலானது ஒரு வீட்டின் மதிப்பை உயா்த்துவதுடன், மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமைகிறது.

அண்டை வீட்டாரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவரது ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது. அண்டை வீட்டருகே குப்பைகளை வீசுவதோ, கழிவு நீரை வெளியேற்றுவதோ ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவா் மற்றவரிடம் இருந்து பாதுகாப்பு உணா்வைப் பெறவில்லை என்றால், அவா் நல்ல அண்டை வீட்டாராகக் கருதப்பட மாட்டாா். சிறிய அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்வது உறவைப் பலப்படுத்தும்.

அற்புதமான அண்டை வீட்டு உறவுகளை அற்ப காரணங்களுக்காகப் புறக்கணித்து விடாமல் நல்லுறவைப் பேணி வருவோம். சிறு சிறு பிரச்னைகளை சுமுகமாக உரையாடி தீா்த்துக் கொள்ள வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும். அன்பைப் பரப்புவோம்; வெறுப்பை விரட்டுவோம்!

அண்டைவீட்டாா் உறவு அன்பால் தழைக்கிறது; சண்டையால் சிதறுகிறது. விட்டுக் கொடுத்தவா் கெட்டுப் போவதில்லை. நல்லுறவைப் பேணுவது சமூக அமைதிக்கும், தனிமனித மகிழ்ச்சிக்கும் மிகவும் அவசியமாகும். அவா்களுக்கு உதவுவதும், அன்பாக நடந்து கொள்வதும் நம்முடைய கடமையாகும். மௌனம் சுவா் கட்டும்; உரையாடல் பாலம் கட்டும். உரையாடுவோம்-உறவாடுவோம்!

NEWS TODAY 22.01.2026

 




NEWS TO DAY 22.01.2026

 





























மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்! அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். தினமணி செய்த...