Tuesday, October 28, 2014

கேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319


கடந்த வாரம் லெனோவா தன்னுடைய புதிய ஸ்மார்ட் ஃபோனான ராக்ஸ்டார் 319-ஐ அறிமுகப்படுத்தியது.இந்த ஸ்மார்ட் போனில் டிஜிட்டல் Dolby வசதி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் தெளிய துல்லியமான இசையை கேட்க முடியும்.இதில் நிறுவப்பட்டுள்ள Guevara என்னும் அப்ளிகேஷன் மூலம் 10 மில்லியன் பாடல்களை கேட்க முடியும்.
 
இதன் தொடுதிரை 4 அங்குல அகலத்தில் WVGA  டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசரில் இயங்குகிறது. இது  கூகுள் ஆண்ட்ராய்ட் 4.4
கிட்கேடின் இயங்குதளத்தில் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறம் உள்ளது. முன்புறமாக,
2 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. 3ஜி வசதியை கொண்டுள்ளது. 1500mAh பேட்டரி திறனுடையது. லெனோவாவின் Doit ,SHAREit, SYNCit மற்றும் SecureIT பயன்பாடுகளை கொண்டுள்ளது.
 
512 எம்.பி ரேம் மெமரியும், 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்டின் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் ஃபோனின் தடிமன் 10.2 மிமீ மற்றும் எடை 130 கிராம்.
 
3.5 மி.மீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதர ஃபோன்களில் உள்ளது போலவே வை பை, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். பிளாக், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வெளி வருகிறது. இசை பிரியர்களுக்கு ஏற்ற புதிய மாடல் லெனோவாவின் ராக்ஸ்டார் 319 என்று கூறப்படுகிறது.
 
ஆனால் இணையதள ரசிகர்கள் இந்த போனை விலைகுறைந்த போன் தான் என்றாலும், இதன் சிறப்பம்சங்கள் சாதாரண ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளையே கொண்டுள்லது. புதுமைகள் அவ்வளவாக இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். ஆனால் லெனோவா கணினி மற்றும் செல்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் என்பதால் தரத்தில் நம்பிக்கை வைத்து வாங்கலாம். மற்ற சீன, கொரிய போன்களை போன்றது அல்ல என்கின்றனர் சிலர்.
 
இப்படி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை ஒரு சேர பெற்றுள்ள இந்த ஸ்ம்,ஆர்ட்போனின் விலை 6499 ரூபாயாக விற்பனைக்கு வருகிறது.

-கோ.க.தினேஷ்(மாணவ பத்திரிக்கையாளர்)

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...