Friday, October 24, 2014

உலகில் தலைசிறந்த பெருநகரங்களில் சென்னைக்கு 9வது இடம்!

உலகில் தலைசிறந்த பெருநகரங்களில் சென்னைக்கு 9வது இடம்!
சென்னை வாசிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும் பெருமைபட்டுக் கொள்வதற்கான காரணம் வேறெதுவுமில்லை, "சென்னை உலகின் தலைசிறந்த பெருநகரங்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது" சிங்காரச்சென்னை. வந்தாரை வாழவைக்கும் ஊரு என்பதையெல்லாம் தாண்டிய ஒரு கம்பீரத்தை அடைந்துள்ளது என்று கூறலாம்.
அதென்னப்பா காஸ்மோபாலிடன் சிட்டி என்று பலருக்கு கேள்வி எழலாம். பண்முக கலாச்சாரங்களையும், பல வகையான மக்களையும் கொண்டு கடற்கரை ஓரங்களிலே அமைந்துள்ள நகரம் என்பதையே காஸ்மோபாலிடன் சிட்டி என்று கூறுகின்றனர். இந்த இலக்கணம் சென்னைக்கு அச்சு அசலாக பொருந்தியுள்ளதை உணர்ந்த லோன்லி பிளனட் எனப்படும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் "2015 வருடத்திற்கான டாப் பத்து காஸ்மோபாலிடன் சிட்டிகளின் பட்டியலில் 9 வது இடத்தை வழங்கியுள்ளது".

மேலும் அந்த நிறுவனம் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு வெளியிட்ட அறிக்கையில், "மெட்ரோ ரயிலின் வருகை சென்னையை மேலும் பளிச்சிட செய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, மெட்ரோ ரயில் வருகை உலக நாடுகளின் பார்வையை கவர்ந்துள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. உலக நாடுகள் மத்தியில் நமது அந்தஸ்து உயர்ந்துள்ளது என்பதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

மேலும் டாப் பத்து காஸ்மோபாலிடன் சிட்டிகளின் பட்டியலில் முதலிடத்தை வாஷிங்டன்னும், கடைசி இடத்தை டொரன்டோவும் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...