Monday, January 12, 2015

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்களிக்க வசதி: மத்திய அரசு ஒப்புதல்

Return to frontpage

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்படவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை முழுதும் ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இது குறித்து “பரிந்துரைகளை அமல் செய்வது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி தகவல் தெரிவியுங்கள்” என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து, இந்த விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.

“இது குறித்த பரிசீலனைகளும், பரிந்துரைகளும் மத்திய அரசினால் ஏற்றுக்கொண்டுவிட்ட பட்சத்தில், இதனை விரைவில் அமல் செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்யவும்” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகள் பற்றி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எல்.நரசிம்மா, நீதிபதிகளிடத்தில் தெரிவிக்கையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான பரிந்துரைகள் குறித்து சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது” என்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகள் பற்றி மத்திய அரசின் நிலைப்பாடுகளை கூறுமாறு அறிவுறுத்தியிருந்தது.

அப்போது மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம் அளித்தது.

தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையில், இ-போஸ்டல் வாக்குச் சீட்டு முறைபற்றி குறிப்பிட்டிருந்தது. அதாவது, என்.ஆர்.ஐ.-களுக்கு வெற்று வாக்குச் சீட்டுகள் மின்னணு முறையில் அனுப்பப்படும் வாக்களிக்கப்பட்ட பிறகு அதனை திருப்பி அனுப்ப வேண்டும், இதனை ஓரிரு தொகுதிகளில் செய்து பார்த்து அதன் பிறகு இது பற்றிய முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளின் படி, வெளிநாடு வாழ் இந்தியர் இங்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் அவர் தான் சார்ந்த தொகுதியில் இருப்பது அவசியம் என்ற நிலை இருந்து வருகிறது. இது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் நிறைய பொதுநல மனுக்கள் குவிந்தன.

என்.ஆர்.ஐ.கள் தாங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே வாக்களிக்க வசதி செய்யப்பட்டால், சுமார் 1 கோடி வாக்குகள் கூடுதலாகப் பதிவாகும் என்று பொதுநல மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

114 நாடுகளில் அயல்நாட்டில் உள்ள குடிமக்கள் வாக்களிக்கும் முறை உள்ளது. இதில் 20 ஆசிய நாடுகள் அடங்கும் என்றும் பொதுநல மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...