Friday, May 22, 2015

தலையை துண்டிக்க ஆட்கள் தேவை: சவுதி அரசு விளம்பரம்..DINAMALAR 22.5.2015

ரியாத்,: 'தலையை துண்டித்து, மரண தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை' என, சவுதி அரேபிய அரசு, விளம்பரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவில், போதை மருந்து கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, நம்பிக்கை துரோகம், ஆயுத முனையில் வழிப்பறி போன்ற கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள், மரண தண்டனையில் இருந்து தப்ப முடியாது.அத்தகைய குற்றவாளிகளை, பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து, தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இன்னும் சிலருக்கு, துப்பாக்கியால் சுட்டும், கல் எறிந்தும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அதுபோல, சாதாரண திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட, தங்களது கைகளை மறந்து விட வேண்டியது தான்.உலகளவில், மிக அதிகமாக மரண தண்டனை வழங்கும் நாடுகளின் பட்டியலில், சவுதி அரேபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், அந்நாட்டில், 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.நடப்பாண்டில் இதுவரையில், 85 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை என, சவுதி அரேபியாவின் சிவில் சேவை அமைச்சகம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. எட்டு காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைக்கு கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை எனக் கூறியுள்ள சவுதி அரேபிய அரசு, விண்ணப்பதாரருக்கு வழக்கமான தேர்வு நடைமுறையிலிருந்து விலக்களிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...