Monday, July 24, 2017

108 அம்மன் கோவில் சுற்றுலா அறிவிப்பு
பதிவு செய்த நாள்24ஜூலை
2017
00:58

சென்னை: ஆடி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, 108 அம்மன் கோவில்களுக்கான சுற்றுலா திட்டத்தை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

வாரம் தோறும் வியாழனன்று இரவு, சென்னையில் இருந்து புறப்பட்டு, 5ம் நாள் இரவு, மீண்டும் சென்னை வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில், சென்னை, செங்கல்பட்டு, மேல்மருவத்துார், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், புன்னை நல்லுார், தஞ்சை, புதுக்கோட்டை, திருப்பத்துார், மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், சிறுவாச்சூர், திருக்கரை உள்ளிட்ட, 108 அம்மன் கோவில்களுக்கு சென்று வரலாம்.இச்சுற்றுலாவுக்கு, நபர் ஒன்றுக்கு, 5,500; சிறுவருக்கு, 4,900 ரூபாய்; தனி அறை வசதி தேவையெனில், 6,500 ரூபாய் கட்டணம்.மேலும், விபரங்களுக்கு, 044 - 2533 3444, 2533 3333 என்ற, தொலைபேசி வழியாகவும், www.ttdconline.com என்ற, இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...