Monday, July 24, 2017

அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர் எண்ணிக்கை குறைகிறது
பதிவு செய்த நாள்
ஜூலை 24,2017 13:32


புதுடில்லி : வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எண்ணெய் விலை குறைவால் வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதன் காரணமாக 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் வேலை செய்த அதிக அளவிலான இந்தியர்கள் தங்களின் வேலையை விட்டு விலகி உள்ளனர்.
வளைகுடா ஒருங்கிணைப்பு கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 2014 ம் ஆண்டு 7,75,845 இந்தியர்களும், 2016 ல் 5,07,296 இந்தியர்களும் வேலையை விட்டுள்ளனர். ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலும் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. சவுதி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.

பக்ரைனில் கட்டுமான கம்பெனி ஒன்றில் பணியாற்றும் 1500 இந்தியர்களில் 700 பேர் மீண்டும் தங்களின் பணி ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள மறுத்துள்ளனர். வளைகுடா நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்த்து வருவதாகவும், அங்கு இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...