Sunday, July 16, 2017

அரசு ஓய்வூதியருக்கு அடையாள அட்டை 40 சதவீத பணி நிறைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான  40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தில் 3.50 லட்சம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதற்கான புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இவை மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியர்களுக்கு சிரமங்களின்றி ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுபோல், ஓய்வூதியர்களுக்கும் அரசு முத்திரையுடன் கூடிய, புகைப்பட அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான விபரங்கள் பெறப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 300 ஓய்வூதியர்களில் இதுவரை 40 சதவீதம் பேரிடம் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றவர்களிடம் பெறப்பட உள்ளதாக, மாவட்ட கருவூல அலுவலர் ஹபிபு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025