Tuesday, July 25, 2017

ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து பணம் திருட்டு
'சைபர் க்ரைம்' போலீசார் எச்சரிக்கை

கோவை, ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து, பணம் திருடும் கும்பலைச் சேர்ந்த நபர் சிக்கியுள்ளதால், 'சைபர் க்ரைம்' போலீசார், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.



வங்கி அதிகாரிகள் போல, போனில் பேசி, வாடிக்கையாளரின், ஏ.டி.எம்., விபரங்களை பெற்று, அவர்களின் கணக்கிலிருந்து பணம் திருடுவது, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்குவது போன்ற மோசடிகள் அதிகளவு நடந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளுக்கு, சில தனியார் வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கும் தகவல்கள் வெளிவந்தன.

நுாதன முறையில்

இதற்கிடையே, சேலத்தில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெரிய சாமி, 30, என்பவனை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஏ.டி.எம்., மையங்களில் கிடக்கும் ரசீதுகளை எடுத்து, அதன் மூலம், வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று, மதுரையைச் சேர்ந்த ஒருவனுடன் இணைந்து, நுாதன முறையில் பணம் திருடி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

ரசீதுகளை அங்கேயே போடாதீங்க

கோவை, 'சைபர் க்ரைம்' போலீசார் கூறியதாவது:
ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கும் போது வரும் ரசீதுகளில், வங்கிக் கணக்கின், கடைசி நான்கு எண்கள் மட்டுமே வரும். இந்த எண்களை வைத்து, ஒருவரின் வங்கிக் கணக்கில், பணத்தை எடுத்துவிட முடியாது. ஆனால், குறிப்பிட்ட கடைசி நான்கு எண்களை வைத்து, வங்கி அதிகாரிகளின் துணையுடன், வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம்.

இதன்மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்கி, மோசடிசெய்திருக்க வாய்ப்பு உள்ளது.ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை எடுக்கும் நபர்கள், அதில் வரும் ரசீதுகளை அங்கேயே போடாமல் எடுத்து செல்ல வேண்டும். இதுபோன்ற

மோசடிகள் குறித்து, கல்லுாரி மாணவர்கள் மூலம், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நுாதன மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால், 'சைபர் க்ரைம்' போலீசாரிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு போலீசார் கூறினார்.

திருடர்கள் கையில் தொழில்நுட்பம்!

வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடி, மோசடி செய்யும், 'சைபர்' குற்றங்கள் அதிகளவு நடக்கின்றன. இதற்கு, மோசடி நபர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், மோசடி நபர்களை பிடிக்கும் அளவுக்கு, 'சைபர் க்ரைம்' போலீசாரிடம்
நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...