Tuesday, July 25, 2017

அதே மனு; அதே கோரிக்கை; அதே பேட்டி!
‛நீட்' தேர்வு விவகாரத்தில் டில்லியில் கும்மியடித்த அ.தி.மு.க.,

dinamalar

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசின் நிலையை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் ராஜ்யசபாவில் தெளிவுபடுத்தி விட்டார்.இருப்பினும், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேரும், இந்த விவகாரத்துக்காக, ஏற்கனவே டில்லி வந்தனர்.



ராஜ்நாத்துடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி உட்பட மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைத்தனர். எந்த உறுதிமொழியையும் பெறாமல் திரும்பிச்சென்ற, அதே ஐந்து அமைச்சர்களும், நேற்று, மீண்டும் டில்லிக்குவந்திருந்தனர்.

அதே நீட் கோரிக்கைக்காக, அதே மனுவுடன் வந்திருந்த அமைச்சர்கள், மத்திய அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, பொன்.ராதாகிருஷ்ணனை, முதலில் சந்தித்தனர்; இவரை, தமிழகத்தில் அடிக்கடி சுலபமாக சந்திக்க வாய்ப்பு இருந்தும், அவரது டில்லி அலுவலகத்திற்கே சென்று, கோரிக்கை வைத்தனர்.

இதன்பின், பக்கத்துதெருவில் உள்ள,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டுக்குச் சென்றனர். அவரிடமும், ஒரு கோரிக்கை மனுவை அளித்துவிட்டு திரும்பினர்.அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு, எம்.பி.,க்களும் பார்லிமென்டிற்கு வந்து, பிரதமரை சந்தித்தனர். கடந்த வாரம், பிரதமரை, தமிழக அமைச்சர்கள் சந்தித்ததற்கு போட்டியாக, பன்னீர்செல்வம் தரப்பின் இந்த சந்திப்பு இருந்தது.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள, ராம்நாத் கோவிந்தை சந்திக்க, பன்னீர்செல்வம் தரப்பினர், பார்லிமென்டை விட்டு கிளம்ப,

தமிழக அமைச்சர்கள் அனைவரும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்திக்க வந்தனர். அவரிடமும், அதே கோரிக்கையை வலியுறுத்தி, மனுஅளித்தனர்.இதையறிந்த பன்னீர்செல்வம் அணி, ராம்நாத் கோவிந்த் வீட்டிலிருந்து, மீண்டும் பார்லிமென்டிற்கு வந்தது.அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துவிட்டு, துணை ஜனாதிபதிவேட்பாளர் வெங்கையா நாயுடுவை சந்திக்ககிளம்பியது.

ஓரிரு நிமிடங்கள்

இந்த களேபரங்களைப் பார்த்த, தி.மு.க.,வுக்கும் சற்றே அச்சம் ஏற்பட, அவர்களும் கிளம்பினர். உணவு இடைவேளைக்காக, சபையிலிருந்து, தன் அறைக்கு திரும்பியிருந்த, மத்திய சுகாதார அமைச்சர் நட்டாவை சந்தித்துவிட்டு, நீட் குறித்து பேசியதாக, நிருபர்களிடம் கூறினர்.
எல்லா சந்திப்புமே, ஓரிரு நிமிடங்கள் தான்; அதே அமைச்சர்கள்; அதே கோரிக்கை; அதே மனு என, வழக்கமான சம்பிரதாயங்களே அரங்கேறின.
துணை சபாநாயகர் தம்பிதுரை மட்டுமே, மத்திய அமைச்சர்களிடம் பேசுகிறார்; வெளியில் வந்ததும், அவரே தான் பேட்டி அளிக்கிறார். பார்லிமென்ட் நடக்கும் நாட்களில், பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்திப்பது மிக எளிது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொன்னாடை, பூங்கொத்து ஆகியவற்றறுடன் வந்து, கோரிக்கை வைப்பது, அதை விட மிக எளிது; இதை, நீட் விவகாரத்தில் நன்றாகவே அரங்கேற்றுகின்றனர், தமிழக அரசியல்வாதிகள்.

இணைப்பிற்கு டில்லியில் பஞ்சாயத்து

அ.தி.மு.க., இரு அணிகளின் முக்கிய நிர்வாகிகள், டில்லியில் முகாமிட்டுள்ளதால், அவற்றின் இணைப்பு தொடர்பான பேச்சு, சுபமாக முடியும் என, கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
'இரு அணிகளும் இணைய வேண்டும்' என, பா.ஜ., கூறி வருகிறது. ஆனால், முதல்வர் பதவிமற்றும் பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், இரு அணியினருக்கும் இடையே, இழுபறி நீடிக்கிறது.
முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என்பதில், பழனிசாமி உறுதியாக உள்ளார். இதனால், இருஅணிகள் இணைப்பில், சிக்கல் நீடிக்கிறது.இந்நிலையில், ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, இரு அணியினரும், டில்லியில் முகாமிட்டுள்ளனர். அங்கு, இரு அணிகளுக்குமிடையே ரகசிய பேச்சு நடக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலை, 11:30 மணிக்கு, பன்னீர்செல்வம் தன் ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்களுடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
பன்னீர்செல்வமும், மைத்ரேயனும் பிரதமருடன் தனியே ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்துள்ளனர். அதேநேரம், தமிழக அமைச்சர்கள் குழு, மத்திய அமைச்சர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசியது.டில்லி புறப்படும் முன், சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்கள் சிலர், பன்னீர் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர்களுடன், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
எனவே, இரு அணியின ரும் தமிழகம் திரும்பும்போது, சுபமான முடிவோடு வருவர் என, இரு அணிகளின் நிர்வாகிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., தொண்டர்களும், நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதுஎப்படியிருக்கு?

யாரை சந்திக்கப் போகிறோம் என்ற விபரம் கூட தெரியாத அளவுக்கு, சந்திப்புகள் படுதீவிரமாக இருந்தன. ராம்நாத் கோவிந்தைசந்தித்துவிட்டு, அடுத்து, அருண் ஜெட்லியை சந்திக்கப் போவதாக கூறியிருந்ததால்,பன்னீர் செல்வம் அணி, எம்.பி.,க்கள் மூன்று பேர், வேகமாக அமைச்சரின் அறைக்குள் நுழைந்தனர்; அங்கு, தமிழக அமைச்சர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்து, தலைதெறிக்க வெளியே ஓடி வந்த கூத்தும் நடந்தது.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...