Thursday, July 6, 2017

அடுத்த புரட்சிக்குத் தயாராகிவிட்டது ரிலையன்ஸ் ஜியோ: ரூ.500க்கு 4ஜி போன்!

By DIN  |   Published on : 05th July 2017 02:52 PM  |  
Jio

புது தில்லி: தனக்கு ஏற்பட்ட தடைக்கல்லை தானே உடைத்தெறியும் வகையில் அடுத்த புரட்சிக்குத் தயாராகியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
கடந்த ஆண்டு இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டாவுடன் அறிமுகமான ஜியோ சிம், தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்தது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கணக்குப்படி, 11 கோடியே 20 லட்சம் ஜியோ வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளுக்கு ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே இருந்தது. அதுதான் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். தற்பொழுது அந்த தடைக்கல்லையும் உடைத்தெறியும் வகையில் ரூ.500க்கு 4ஜி வசதி கொண்ட செல்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் ரூ.999 முதல் ரூ.1,500 என்ற அளவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த செல்போனை, ரூ.500க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இருக்கும் 4ஜி வசதி, இனி ரூ.500 விலை கொண்ட செல்போனில் கிடைக்கும் என்றால் நிச்சயம் இது அடுத்த புரட்சிதான். 

கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஜியோ சிம்கார்டினால், தொலைத்தொடர்பில் புரட்சி ஏற்பட்டது போல, தற்போது செல்போன் உற்பத்தியில் அடுத்த புரட்சி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் இந்த செல்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...