Saturday, July 15, 2017

வண்டலூரில் நாள் தோறும் நெரிசல்...அதிகரிப்பு! பல கி.மீ., காத்திருக்கும் வாகனங்கள்

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
21:16

வண்டலுார்:வண்டலுார் பகுதியில் நடக்கும் சாலை பணிகளால், நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வண்டலுாரை கடக்கவே, ஒரு மணி நேரம் வரை ஆவதாக, ஓட்டிகள் புலம்புகின்றனர்.
வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையில், போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.சாலை பணிகளால், வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலை -- கேளம்பாக்கம் சாலை சந்திப்பில், சாலை கடக்க தடை செய்யப்பட்டு, போக்குவரத்து சிறிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்வண்டலுார் சந்திப்பில் சாலையை கடக்காமல், சில மீட்டர் துாரத்தில், கிளாம்பாக்கம் அருகே தற்காலிக சாலை கடக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரப்பாக்கம் - வண்டலுார் மார்க்கத்தில், போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி உள்ளது.இதே போல, சாலை பணிகளால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கற்கள் மற்றும் மணலால், தாம்பரம் - வண்டலுார் மார்க்கத்திலும் நெரிசல் தொடர்கதையாகி உள்ளது.
ஜி.எஸ்.டி., சாலையில் நிலவும் நெரிசலால், வண்டலுார் வெளிவட்டச் சாலை மேம்பாலத்திலும், வண்டலுார் ரயில்வே மேம்பாலத்திலும், வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து, வண்டலுார், இரணியம்மன் கோவில் வரை, 4 கி.மீ.,க்கு, வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பதால், இப்பகுதியை கடப்பதற்கே, ஒரு மணி நேரம் ஆவதாக, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

நடவடிக்கை அவசியம்

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், இரவு பெய்த மழையால், ஜி.எஸ்.டி., சாலையோரம், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.ஊரப்பாக்கம் -- வண்டலுார் சாலையிலும், நெரிசலில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பயணிக்கும் சாலையோர மண் சாலை, மழையால், சிறுசிறு குட்டைகளாக மாறியுள்ளன.

இதனால், இரு தினங்களாக, நெரிசல் மேலும் அதிகரித்துள்ளன. மழையில், வண்டலுார் ரயில்வே மேம்பாலம் அருகே பழுதான கன்டெய்னர் மற்றும் சிறுசிறு விபத்துகளில் சிக்கிய வாகனங்களால், நெரிசல் மேலும் அதிகரித்ததாக, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.இதனால், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள், வெளியூர் பயணியர் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். சாலைப் பணியை விரைந்து முடித்தாலொழிய, இப்பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதால், துரித நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.


சிக்கும் ஆம்புலன்ஸ்வண்டலுார், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால் காயமடைந்தவர்களை, செங்கல்பட்டு அல்லது குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்க, ஆம்புலன்ஸ்கள் விரைகின்றன.ஆனால், வண்டலுாரில் நிலவும் நெரிசலால், அவ்வப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களும், நெரிசலில் சிக்கி, கடும் விபரீதங்கள் ஏற்படுகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025