Friday, November 10, 2017


ரெய்டு பற்றி ஒன்னுமே தெரியாது' : சீனிவாசன் பேட்டி


திண்டுக்கல்: ' ஜெயா 'டிவி', மற்றும் தினகரன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடப்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது' எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன் பேட்டியால் சிரிப்பலை எழுந்தது.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா வரும் டிச.9ல் நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா அங்கு விலாஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, தங்கமணி, காமராஜ், உதயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: பாரத பிரதமர்... மன்னிக்கவும் 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா 22வது மாவட்டமாக திண்டுக்கல்லில் டிச.,9ல் நடக்க உள்ளது. எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்டது, திண்டுக்கல் என்பதால் வெகு சிறப்பாக நடத்த உள்ளோம், என்றார்.
உடனே நிருபர்களை பார்த்து, ''அவ்வளவுதான் எல்லோரும் சாப்பிட்டு போங்கள்'' என்றார். 
நிருபர்கள், ''சசிகலா அணியின் தினகரன் வீட்டிலும், ஜெயா டிவி., அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துகிறார்களே,'' என கேடடனர். 
அதற்கு அவர், ''நான் இப்போதுதான் துாங்கி எழுந்தேன். எனக்கு ஒன்னுமே தெரியாது,'' எனக் கூறி நழுவினார்

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026