Tuesday, November 14, 2017


மானாமதுரையில் குப்பையில் தீ வைப்பதால்அபாயம்: தொடரும் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு

 நவ 14, 2017 02:00

மானாமதுரை;சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும்.மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைதாயமங்கலம் ரோட்டில் மாங்குளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.அதற்கு முன்பு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கிலும்,அரசுகுளி மயானம் அருகே வைகை ஆற்றிலும் கொட்டப்பட்டன.இந்நிலையில் மாங்குளத்தில் குப்பைக்கிடங்கு செயல்பட துவங்கியதிலிருந்து மேற்கண்ட இடங்களில் குப்பையைகொட்டக்கூடாது என செயல் அலுவலர் ஜான்முகமது துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ஒரு சில ஊழியர்கள் டிராக்டர்களில் அள்ளப்படும் குப்பையை மாங்குளத்திற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்.குப்பையில் கிடக்கும் பொருட்களை சேகரிப்பவர்கள் அதில் கிடக்கும் ஒயர்கள்,டயர்களில் இருக்கும் கம்பிகளைஎடுப்பதற்காக குப்பையில் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டுதுர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இது குறித்து பா.ஜ., நகர பொறுப்பாளர் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:மானாமதுரை பேரூராட்சிபகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் சிலர் மாங்குளத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்,இதில்குப்பையை பொறுக்குபவர்கள் அடிக்டி தீ வைத்து விடுவதால் அந்த பகுதி முழுவதும் புகை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,மேலும் மழை காலங்களில் துர்நாற்றமும் ஏற்படுகிறது,என்றார்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரியிடம் கேட்ட போது:மேற்கண்ட இடங்களில்குப்பையை கொட்டக்கூடாது என பணியாளர்களுக்கு எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இனிமேலும் கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.



No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...