Wednesday, December 27, 2017

ஆடிட்டர் குருமூர்த்தி பதிவு: அ.தி.மு.க., அதிர்ச்சி

சென்னை : தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம் தொடர்பாக, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின், 'டுவிட்டர்' கருத்து பதிவு, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.




ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. 'ஆறு மாதங்களை தாண்டிய பின், வலுவில்லாதவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்கள் சரியான திறமையற்ற தலைவர்கள்' என, 'துக்ளக்' ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான, குருமூர்த்தி, டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

தன்மானம்

இதில் திறமையற்றவர்கள் என்ற பொருள்படும், 'இம்போடென்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, ஆண்மையற்றவர்கள் என்றுகூறியியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ''குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. எங்களுக்கு ஆண்மை உண்டு. அ.தி.மு.க., நிர்வாகிகள் காங்கேயம் காளைகள். தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டோம். அ.தி.மு.க., பொங்கினால், என்ன நடக்கும் என்பதை, குருமூர்த்தி புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குருமூர்த்தி மேலும் சில கருத்துகளை, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:

எந்த தவறும் இல்லை

என் மீது அரசு நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் கூறியுள்ளார். எத்தனையோ அரசுகள் எடுத்த நடவடிக்கையை  பார்த்திருக்கிறேன்; இதையும் சந்திப்பேன். அரசியல் ரீதியாக அவர்களை திறனற்றவர்கள் என்றேன். மற்றபடி, அவர்கள் எப்படி என்பது எனக்கு தெரியாது. நான் கூறியதன் அர்த்தம் அமைச்சருக்கு புரியவில்லை.அ.தி.மு.க., அமைச்சர் மட்டுமே, என் வார்த்தையை, ஆண்- - பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. நான் கூறியதில் எந்த தவறோ, கண்ணிய குறைவோ கிடையாது.இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...