Thursday, April 25, 2019

தமிழகத்தில் 2,000 போலி நர்சிங் கல்லூரிகள்

Added : ஏப் 24, 2019 23:36

வேலுார், ''தமிழகத்தில் 2000 போலி நர்சிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன'' என தமிழ்நாடு செவிலியர் கல்லுாரிகள் சங்க மாநில தலைவர் பாலாஜி கூறினார்.இது குறித்து அவர் நேற்று வேலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லுாரி துவங்க இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதியை பெற வேண்டும். அதன்பிறகு மாநில அரசின் அனுமதியை பெற்று தான் கல்லுாரி துவங்க முடியும். ஆனால் தமிழகத்தில் 2000 போலி நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் ஓராண்டு இரண்டாண்டு பயிற்சி எனக்கூறி மாணவ - மாணவியரிடம் பல லட்சம் பறித்து மோசடி செய்து வருகின்றனர்.இவற்றில் படித்த 40 ஆயிரம் மாணவ - மாணவியர் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதில் மாணவர்களுக்கு பண விரயத்துடன் கால விரயமும் ஏற்படுகிறது. போலி நர்சிங் கல்லுாரிகள் முறையாக பதிவு செய்யவும் முடியாது.எனவே புதிதாக நர்சிங் படிக்க விரும்புவோர் நர்சிங் கவுன்சில் வெப்சைட்டிற்கு சென்று அரசு அங்கீகாரரம் பெற்ற நர்சிங் கல்லுாரிகள் குறித்து அறிந்து அதன் பின் அவற்றில் சேர வேண்டும். உண்மையான பதிவு பெற்ற நர்சிங் நிறுவனங்களில் மூன்று ஆண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...