Thursday, April 25, 2019

தேர்தல் பணியில் இறப்பு நிவாரணம் உயர்வு

Added : ஏப் 24, 2019 23:08

சென்னை, தேர்தல் பணியின்போது இறக்கும், ஊழியர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் பணியின்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிவாரண தொகை, தற்போது, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் பணியின்போது, பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட, 20 லட்சம் ரூபாய் நிவாரணம், 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது.பலத்த காயமடைவோருக்கு வழங்கப்பட்ட, ௫ லட்சம் ரூபாய் நிவாரணம், தற்போது, 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தேர்தல் ஆணையம் பிறப்பித்துஉள்ளது.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...