Thursday, July 25, 2019

முடிந்துபோன கனவாகிறது செங்கோட்டை 'அந்தியோதயா'

Added : ஜூலை 24, 2019 22:38

ஸ்ரீவில்லிபுத்துார் தென்மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயில் நடப்பாண்டு அட்டவணையிலிருந்தே நீக்கபட்டுவிட்டது. எனவே அந்த ரயில் மீண்டும் இயக்க வாய்ப்பு குறைந்துள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பலர் சென்னையில் வசிக்கின்றனர். சென்னையில் இருந்து தென்மாவட்ட ரயில்களில் எப்போதும் இட நெருக்கடி நிலவுகிறது.இதனால் 2017ல் தாம்பரத்திலிருந்து விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானமதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், சங்கரன்கோயில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு பகல்நேர அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டது. முழுதும் முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு பயணிக்கும் வசதியை தென்மாவட்ட மக்கள் பெற்றிருந்தனர்.2017 ல் சில மாதங்கள் இயக்கப்பட்ட இந்த ரயில் நிரந்தர தினசரி ரயிலாக ரயில்வே நேரஅட்டவணை பட்டியலிலும் இடம் பெற்றது. ஆனால் முன்னறிவிப்பின்றி 2018ல் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது.இந்நிலையில் தற்போது வெளியிடபட்டுள்ள தெற்கு ரயில்வே நேர அட்டவணை புத்தகத்தில் தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயில் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயிலின் இயக்கம் இனிமேல் இருக்காது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.தென் மாவட்ட எம்.பி.,க்கள் குரல் கொடுத்து, தாம்பரம்-செங்கோட்டை ரயிலை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...