Friday, November 1, 2019

காய்ச்சல் பாதிப்புடன் குவியும் நோயாளிகள்! - திணறும் நாகை அரசு மருத்துவமனை

மு.இராகவன்PrasannaVenkatesh AB

காய்ச்சல் நோயால் குவியும் நோயாளிகள்  vikatan news


அரசு மருத்துவமனை

நாகை மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நோயால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்குச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும், தினசரி கடும் ஜுரத்துடன் நோயாளிகள் பெருமளவு வருவதால் உள்நோயாளியாகச் சேர்க்க இடமின்றி மருத்துவமனை நிர்வாகம் தவிக்கிறது.


அரசு மருத்துவமனை

கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் நாகையைச் சுற்றியுள்ள நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான காய்ச்சல் நோயாளிகள் நாகை தலைமை மருத்துவமனைக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் சென்னை, திருப்பூர் போன்ற வெளியூரில் பணிபுரிபவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, சாதாரண சீசன் காய்ச்சல் நோயாளிகளோடு ஒரே வார்டில் சிகிச்சை தந்தால் டெங்கு பரவிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே, டெங்கு நோயாளிகளுக்கு மாடியில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தனர். சாதாரண காய்ச்சலுக்கு ஆண், பெண், குழந்தைகள் எனத் தனித்தனியாகப் பிரித்து 80 படுக்கை வசதி கொண்ட வார்டு அமைக்கப்பட்டது.

எனினும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் வருவதால் அவர்களை உள்நோயாளிகளாகச் சேர்க்க இடவசதியில்லை. வேறெங்கும் செல்ல முடியாத ஏழை நோயாளிகள் தரையில் பாய் விரித்துப் படுத்து சிகிச்சை பெறுகின்ற அவலமும் நடக்கிறது. கடுமையாக ஜுரம் மற்றும் டெங்கு பாதிப்பில் வரும் நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ரத்தப்பரிசோதனை செய்து உரிய ஊசி மருந்துகளோடு நிலவேம்பு கசாயமும் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தரப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் நாளுக்கு நாள் பெருகுவதால் எப்படி சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் திகைப்பில் இருக்கின்றனர்.



காய்ச்சல்

இதுபற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. முருகப்பாவிடம் பேசினோம். ``இதற்கென தனி வார்டு அமைத்துள்ளோம். தினமும் சீசன் காய்ச்சலால் சுமார் 200 நோயாளிகள் வருகிறார்கள். அதில் உள்நோயாளிகளாக சுமார் 40 பேர் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எம்.டி. லெவலில் டாக்டர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். டெங்கு நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது டெங்கு நோயாளி ஒருவர்கூட இல்லை. நோயாளிகளுக்கு உடனுக்குடன் வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊசி, மருந்துகள் எல்லாமே போதுமான அளவு இருப்பில் உள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் மட்டுமே திருவாரூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பப்படுகின்றனர்" என்றார்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...