கோவை - சென்னை இடையே தேஜஸ் ரயில்
Added : ஜன 12, 2020 00:20
திருப்பூர்,: 'கோவை - சென்னை இடையே, தேஜஸ் சொகுசு ரயில், பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும்' என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும், 103 வழித்தடங்களில், தனியார் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில், 10 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையை மையமாக வைத்து ஆறு வழித்தடங்களிலும், தாம்பரத்தில் இருந்து புறப்படும் நான்கு வழித்தடங்களிலும், தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது.இப்பட்டியலில், சென்னை - கோவை வழித்தடமும் இடம் பெற்றுள்ளது.தற்போது, கோவையில் இருந்து சென்னைக்கு இன்டர்சிட்டி, கோவை, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ், மதியம் சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இவற்றுடன் தனியார் தேஜஸ் சொகுசு ரயிலை, அதிகபட்சமாக, 160 கி.மீ., வேகத்தில் இயக்க ஆலோசிக்கப் பட்டு உள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட தகவல் மைய அலுவலர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 10 வழித்தடங்களில் ரயில்களை இயக்க, நான்கு தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே வாரிய தலைவர் தலைமையிலான குழு, இம்மாத இறுதியில், நிறுவனத்தை இறுதி செய்யும்.வழித்தடங்கள் குறித்து, இறுதிக்கட்ட ஆய்வுகள் பணி நிறைவு பெற்று, அனுமதி கிடைத்த பின், கோவை - சென்னை இடையே தேஜஸ் சொகுசு ரயில், பிப்ரவரி முதல் வாரத்தில் இயக்கப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment