Tuesday, March 31, 2020

கொரோனா நிவாரணம் ‛'டோக்கன்' வினியோகம்

Added : மார் 30, 2020 22:33

சென்னை:ரேஷன் கடைகளில், கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணம் வழங்குவதற்காக, கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் ஊழியர்கள், 'டோக்கன்' வினியோகிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பலரின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால், 2.01 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்கள், இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவற்றின் வினியோகம், வரும், 2ம் தேதி முதல் துவங்குகிறது.ஒரு ரேஷன் கடையில், 1,200 -- 1,500 கார்டுதாரர்கள் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், நிவாரண பொருட்கள் வழங்கும் போது, ஒரே சமயத்தில், கார்டுதாரர்கள் திரண்டால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால், ஒரு கடையில், ஒரு நாளைக்கு, 100 கார்டுதாரர்களுக்கு மட்டும், நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக, எந்த தேதி, நேரத்திற்கு, கடைகளுக்கு வர வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய, டோக்கன், கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்படும் என, அரசு, அறிவித்தது.அதன்படி, ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, டோக்கன் வினியோகிக்கும் பணியை, நேற்று முதல் துவக்கினர். வருவாய் கிராம உதவியாளர்களும், ஊராட்சி எழுத்தர்களும், டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளைக்குள், அந்த பணிகளை முடிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026