Tuesday, March 31, 2020

யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?

Added : மார் 30, 2020 22:41

சென்னை:சென்னையில் வசிப்போர், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு செல்லவும் மற்றும் சென்னை நகருக்கு உள்ளேயே, ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு செல்லவும், அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

இது குறித்து, சென்னை போலீஸ் துணை கமிஷனர், எச்.ஜெயலட்சுமி கூறியதாவது: *அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள் என, ரத்த சம்பந்தமானவர்களின் திருமணத்திற்கு மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும். மேற்கண்ட நபர்களின் இறப்பு தொடர்பாக, துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, அனுமதி வழங்கப்படும். பெரியப்பா, சித்தப்பா, மாமா போன்ற உறவினர்கள் இறப்புக்கு, அனுமதி சீட்டு கிடையாது

*குடும்ப உறுப்பினர்களான, அண்ணன், அக்கா, தங்கை, மனைவி; நோய் வாய்ப்பட்டு தனியாக இருக்கும், தாத்தா, பாட்டி ஆகியோரின் மருத்துவம் தொடர்பாக செல்லவும், மனைவியின் பிரசவம்தொடர்பாக செல்லவும், அனுமதி சீட்டு வழங்கப்படும்.

*வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், துணை ஏதும் இல்லாமல் தனியாக வசிக்கும், ரத்த சம்பந்தமான முதியோர்களையும், நோய் வாய்ப்பட்ட பெற்றோரை அழைத்து வரவும், அனுமதி வழங்கப்படும்

*பெற்றோரை விட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், உறவினர்களிடம் இருக்கும், இரண்டரை வயது மகன், மகளை அழைத்து வர, அனுமதி வழங்கப்படும்

*கோரிக்கை கடிதங்களை, சந்திக்க விரும்பும் நபர்களின், தேவையான அடையாள ஆவணங்களுடன், சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்

*மேலும், 75300 01100 என்ற, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, கோரிக்கை கடிதம் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தும், அனுமதி சீட்டு கோரலாம். gcpcorona2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்

*கோரிக்கை கடிதங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து, உண்மையாக இருந்தால் மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி வேண்டி, 9,000 பேர், கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். ஆய்வுக்கு பின், 164 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...