Monday, July 6, 2020

மூத்த குடிமக்கள் அரசுக்கு வேண்டுகோள்

மூத்த குடிமக்கள் அரசுக்கு வேண்டுகோள்

 Added : ஜூலை 05, 2020  23:08

சென்னை; -'வயதான பெற்றோரை பார்க்க விண்ணப்பிக்கும் பிள்ளைகளுக்கு, 'இ- - பாஸ்' வழங்க தயங்க கூடாது' என, அரசுக்கு, மூத்த குடிமக்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூத்த குடிமக்கள் அமைப்பின் உதவி தலைவர், ராமாராவ் கூறியதாவது:திருமணம், மரணம், அவசர மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே, தற்போது இ- - பாஸ் வழங்கப்படுகிறது. ஏராளமான மூத்த தம்பதியர் தனியாக வசித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள், பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் வசித்து வருகின்றனர்.நான்கு மாதங்களாக, தனியாக தவித்து வரும் பெற்றோரை பார்க்க, பிள்ளைகளுக்கு இ- - பாஸ் வழங்கப்படுவதில்லை.

இதனால், மூத்த குடிமக்கள், உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த, மூத்த தம்பதியரான அருள்சாமி, பாக்கியவதி ஆகியோர், பிள்ளைகளை பார்க்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டது, ஒரு உதாரணம்.எனவே, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை பார்க்க அனுமதி கோரும், பிள்ளைகளின் விண்ணப்பங்களை, உதாசீனப்படுத்தாமல் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...