Saturday, June 12, 2021

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வயது 113


எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வயது 113

Added : ஜூன் 12, 2021 01:53

சென்னை:எழும்பூர் ரயில் நிலையம் துவங்கி நேற்றுடன் 113 ஆண்டுகள் ஆனதையொட்டி அதிகாரிகளும் ஊழியர்களும் 'கேக்' வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சென்னையில் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் நிலையம் உள்ளது. இந்நிலையம் 1908ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி துவங்கப்பட்டது.இந்திய முகலாய மற்றும் கோதிக் கட்டட கலையுடனான இந்தோ - சராசனிக் வடிவமைப்பில் இந்நிலையம் கட்டப்பட்டுள்ளது.ஆங்கிலேயரான ராபர்ட் சிஸ்ஹோம் கட்டடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்து கொடுத்தார். அக்காலத்தில் புகழ்பெற்ற ஒப்பந்ததாரராக திகழ்ந்த சாமிநாதப் பிள்ளை நிலையத்தை கட்டினார்.

ஆரம்பத்தில் இரு நடைமேடையுடன் துவங்கப்பட்ட இந்நிலையம் தற்போது 12 நடைமேடையுடன் இயங்குகிறது.இந்நிலையத்தில் இருந்து 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள்; வழியாக 10 ரயில்கள் என 35 ரயில் போக்குவரத்துடன் இந்நிலையம் வழியாக இருவழியிலும் 256 புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தினமும் இரண்டரை லட்சம் பயணியர் வரை வந்து செல்லும் நிலையமாக உள்ளது. கொரோனாவால் தற்போது ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையம் துவங்கப்பட்டு நேற்றுடன் 113 ஆண்டுகள் ஆனதையொட்டி நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் 'கேக்' வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

No comments:

Post a Comment

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...