Sunday, August 1, 2021

சுற்றுலா செல்ல ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

சுற்றுலா செல்ல ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

Added : ஆக 01, 2021 00:22

கோவை-பாரத தரிசன சிறப்பு ரயில், சிறப்பு விமானங்கள் வாயிலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

பாரத தரிசன சிறப்பு ரயில் வாயிலாக கோவா, சர்தார் வல்லபபாய் படேல் சிலை, ஜெய்ப்பூர், டில்லி, ஆக்ரா, ஐதராபாத் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து ஆக., 15ல் புறப்படும் ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக செல்கிறது. 12 நாள் சுற்றுலாவுக்கு நபருக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

விமான சுற்றுலா  செப்., 11ம் தேதி கோவையில் இருந்து விமானத்தில், காசி, அலகாபாத், புத்த கயா உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லலாம். ஆறு நாள் சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 27 ஆயிரத்து, 460 ரூபாய் கட்டணம்.ஜெய்ப்பூர் பறக்கலாம்!கோவையில் இருந்து விமானத்தில் அக்., 2ம் தேதி ஜெய்ப்பூர், ஆக்ரா - தாஜ்மஹால், டில்லி செல்லும் விமான சுற்றுலா அறிமுகம் செய்யப்படுகிறது. ஆறு நாள் சுற்றுலாவுக்கு நபருக்கு, 26 ஆயிரத்து, 60 ரூபாய் கட்டணம்.டிக்கெட் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகளை, 82879 31965, 90031 40655 என்ற மொபைல் போன் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025