Monday, August 16, 2021

முதல் பெண் ஓதுவார் நியமனம்



தமிழ்நாடு

முதல் பெண் ஓதுவார் நியமனம்

Added : ஆக 15, 2021 23:39 | 

சென்னை:ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலில் முதல் முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டத்தின் கீழ் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலில் முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா 28 என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிறந்து வளர்ந்த சுஹாஞ்சனா 2019 செப்டம்பரில் சென்னை கிண்டியில் டிசைன் இன்ஜினியராக வேலை செய்யும் கோபிநாத் 31 என்பவரை திருமணம் செய்தார். சேலையூர் பகுதியில் வசித்து வரும் இவர் தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர்.இந்நிலையில் சுஹாஞ்சனா நேற்று தன் பணியைத் துவங்கினார். அவர் மந்திரம் ஓதும் வீடியோ பரவி வருகிறது.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....