Tuesday, June 24, 2025

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு



எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது.

Din Updated on: 24 ஜூன் 2025, 6:19 am 

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் நிா்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி மாலை 5 மணியுடன் இணையவழியே விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைகிறது. எனவே, நீட் தோ்வா்கள் விரைந்து விண்ணப்பப்பதிவு செய்யுமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in 5 yrs

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in  5 yrs  Ethics Board Says Non-Med Practitioners Can’t File Appeals  Rema.Nagarajan@tim...