முதுநிலை மருத்துவ படிப்பு 726 இடங்கள் நிரம்பின
பதிவு செய்த நாள் 11 மே 2017 23:58
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, முதற்கட்ட கவுன்சிலிங்கில், 726 இடங்கள் நிரம்பின.
தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,489 இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 762 இடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மே, 8ல், துவங்கியது.
நான்காம் நாளான நேற்று, 113 பேருக்கு, முதுநிலை படிப்புக்கு இடங்கள் கிடைத்தன. முதற்கட்ட கலந்தாய்வு, நேற்றுடன் முடிந்தது. இதுவரை, 726 பேர் இடங்களை பெற்றுள்ளனர். மீதி, 36 இடங்கள் காலியாக உள்ளன; 274 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறுகையில், ''தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் பெறப்பட்டு வருகின்றன.
''அந்த இடங்கள் மற்றும் அரசு கல்லுாரிகளில் மீதமுள்ள இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும். இதற்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்,'' என்றார்.