முதுநிலை மருத்துவ படிப்பு: 3 நாளில் 609 பேருக்கு இடம்
பதிவு செய்த நாள் 11 மே 2017 00:41
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், மூன்று நாட்களில், 609 பேருக்கு இடங்கள் கிடைத்தன. தமிழகத்தில், 13 அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,489 இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 762 இடங்கள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 8ல் துவங்கியது.
நேற்று, மூன்றாவது நாளாக, கவுன்சிலிங் நடந்தது. அழைக்கப்பட்ட, 550 பேரில், 225 பேர், படிப்புக்கான இடங்கள் பெற்றனர். மூன்று நாட்களில், 609 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன.
112 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது.

No comments:
Post a Comment