Friday, May 26, 2017

IT employees


ஐடி ஊழியர் பணி நீக்கங்கள் கவலை அளிக்கின்றன:

இன்போசிஸ் நாராயண மூர்த்தி

செலவைக் குறைக்கும் விதமாக ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது கவலை அளிப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த நாராயண மூர்த்தி, இது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஐடி நிறுவனங்களில் என்ன நடக்கிறது?

மார்ச் 2018-க்குள் ஒரு லட்சம் ஐடி பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1,000-க் கும் மேற்பட்ட துணைத்தலைவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களின் வருகை, இயந்திரங்களின் பயன்பாடு, அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் செலவு குறைப்பு ஆகியவை வேலை இழப்புகளுக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் 37 லட்சம் நபர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்த சில ஆண்டுகளில் பயனற்றவர்களாக மாறுவர்கள் என மெக்கென்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

காக்னிசென்ட் நிறுவனத்தில் உயரதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. துணைத்தலைவர் பதவியில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 6 முதல் 9 மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களைக் குறைப்பதுதான் அவர்களின் இலக்கு. இந்த திட்டத்தின் மூலம் 1,000 நபர்களை வெளியேற்ற நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களில் தோராயமாக 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்னும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

விப்ரோ நிறுவனத்தின் மனிதவள பிரிவு அதிகாரி, ''15 ஆண்டு அனுபவ மிக்கவர்களால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது. இரு ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணியாளர் சரியில்லை'' என நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...