Wednesday, May 31, 2017

சவூதியில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியப் பெண் இன்று தாயகம் திரும்புகிறார்

By DIN  |   Published on : 31st May 2017 01:30 AM  
சவூதி அரேபியாவில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் இந்தியப் பெண் ஒருவர் புதன்கிழமை (மே 31) தாயகம் திரும்புவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சுக்வந்த் கெளர் (55). சவூதி அரேபியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்ற அவரை கொத்தடிமைப் பணிக்கு சிலர் விற்பனை செய்துவிட்டதாக அவரது கணவர் குல்வந்த் சிங் என்பவர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். அதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாகின.
அடிமை வேலைக்கு தன்னை ஈடுபடுத்துவதாக குல்வந்த் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக சுக்வந்த் கெளர் தெரிவித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், அவரை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அதன் விளைவாக தற்போது அவர் தாயகம் திரும்பவுள்ளார். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் பதிவிட்டிருப்பதாவது:
சுக்வந்த் கெளர் விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு இந்தியா வரவுள்ளார் என்று அதில் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...